Published: 22 நவ 2024
காலத்தால் அழியாத தங்க டெம்பிள் ஜுவல்லரி டிஸைன்கள்
மனதை அமைதிப்படுத்தும் வானளாவிய கோபுரங்கள், உங்கள் அலமாரியை அலங்கரிக்கும் ஜவுளிகள் மற்றும் காலத்தால் அழியாத நகாஷி நகைகள் என பல புகழ்பெற்ற விஷயங்களுக்கு பெயர் பெற்றது தான் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரம். நுணுக்கமான கைவினைத்திறனுக்கும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கும் இடையிலான சங்கமமாக இருக்கும் இது பக்தியைக் கொண்டாடும் நகையாக அமைகிறது.
கோவையின் தங்க வரலாறு
டெம்பிள் ஜுவல்லரி நகைகள் பாரம்பரியமாக கோவில்களில் உள்ள தெய்வங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டதால் தான் இப்பெயரைப் பெற்றது. காலப்போக்கில், கோயில் நகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் நுணுக்கமான கைவேலைப்பாடுகள் வளர்ச்சியடைந்தது, இதுவே விஜயநகரப் பேரரசின் நகாஷி நகைகள் உருவாவதற்கும் வழிவகுத்தது. விஜயநகரப் பேரரசின் காலத்தில் அரண்மனை நடனக் கலைஞர்கள் தங்கள் கலையை கடவுளுக்கு வழிபாடாக அர்ப்பணிக்கும் போது நகாஷி நகைகளை அணிந்துகொள்வர்.
தற்போது, இந்த இரண்டு கலை வடிவங்களும் ஒன்றிணைந்து நவீன கால கோயம்புத்தூர் நகைகளாக உருவெடுத்துள்ளன. இவை பல பெண்களின் மணப்பெண் தோற்றத்திற்கு சிறப்பு சேர்த்து வருகிறது.
இருப்பினும், இந்த நகைகள் மணப்பெண்களுக்கு மட்டுமானது அல்ல. வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற பல தோற்றங்களை உருவாக்க இவற்றைப் பயன்படுத்தலாம். உங்கள் லுக் அனைவரும் திரும்பிப்பார்க்கும்படி இருப்பதற்கு உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஐந்து கோயம்புத்தூர் நகை டிஸைன்களைப் பற்றி இப்போது அறிந்து கொள்ளலாம்.
கோயம்புத்தூரின் நேர்த்தியான நகாஷி நகைகள்
வளையல்கள்
ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட நகாஷி வளையல்களில் உள்ள வேலைப்பாடுகள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். 22 காரட் தூய தங்கத்தால் செய்யப்பட்ட இந்த கோயம்புத்தூர் நகைகளில் உள்ள டிஸைன்கள் பல்வேறு இந்து நம்பிக்கைகளை சித்தரிக்கும் கோயில் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள வடிவமைப்புகளை ஒத்திருக்கும் வகையில் கவனமாக பொறிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வடிவங்களும் உருவங்களும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் வகையில் நுணுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் பொறிக்கப்படுகின்றன. சில வளையல்களில் மெல்லிய தங்கத்தால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மத உருவங்கள் பொறிக்கப்பட்டு இலகுவானதாக இருந்தாலும், மற்றவை விரிவான வேலைப்பாடுகளுடன் கூடிய ஸ்டேட்மென்ட் பீஸ்களாக இருக்கின்றன.
நகாஷி வளையல்களை கொண்டு ஸ்டைல் செய்ய பல்வேறு வழிகள் உள்ளன. பாரம்பரியமான முறை என்று பார்த்தால் அவற்றை எத்னிக் ஆடைகளுடன் அணிவது தான் வழக்கம் . உங்கள் திருமண அலங்காரத்திற்கு கலாச்சார பாரம்பரியம் மிக்க நகைகளை அணிய விரும்பினாலும் சரி அல்லது உங்கள் பண்டிகை லுக்கிற்கு காலத்தை தாண்டிய நகைகளை அணிய விரும்பினாலும் சரி, இந்த வளையல்கள் இது அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
இன்னும் சிறப்பாக, இந்த வளையல்களை நேர்த்தியான ஆடையுடன் அணிந்து, உங்கள் நவீன தோற்றத்திற்கு பாரம்பரியத் லூக்கின் டச்சை சேர்க்கலாம். வண்ணமயமான கண்ணாடி வளையல்களுடன் இவற்றை அணிந்து ஒரு துடிப்பான லுக்கையும் உருவாக்கலாம்.
லக்ஷ்மி ஹாரம்
ஹாரம் என்பது திருமணமான பெண்கள் பாரம்பரியமாக அணியும் நெக்லஸ் ஆகும். சோழர் காலத்தின் போது பிரபலமான இந்த டிஸைன் மணப்பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கோயம்புத்தூர் நகையாக உள்ளது.
லக்ஷ்மி தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட ஹாரம் நெக்லஸ் செல்வத்தையும் செழிப்பையும் குறிக்கிறது. முக்கிய உருவத்தை வரைதல், எம்பாஸ் செய்வது, டீடெய்லிங் செய்வது, சால்டரிங் மற்றும் மெருகூட்டுதல் ஆகியவற்றின் நுணுக்கமான செயல்முறை போன்றவை இந்த நகையை ஒரு முக்கியமான கலாச்சார கலைப்பொருளாக ஆக்குகிறது.
ஹராம் நெக்லஸ் மணப்பெண் அலங்காரத்தின் முக்கிய பகுதியாக இருப்பதோடு, ஒரு நேர்த்தியான லுக்கையும் கொடுக்கிறது. அதன் நீளம் மற்றும் விரிவான டிஸைன் எந்தவொரு ஆடை அல்லது லுக்கிற்கும் ஒரு தெய்வீக களையை சேர்ப்பதற்கு ஏற்றது. முக்கிய டிஸைனாக லக்ஷ்மி தேவியின் உருவத்துடன், இதை ஒரு தனி நகையாக நவீன ஆடைகளுடன் அணிவதற்கு ஏற்றதாக இருக்கிறது.
பெண்டண்ட்டுகள்
பாரம்பரிய கோயம்புத்தூர் நகைகளைப் பொறுத்தவரை, லட்சுமி, கிருஷ்ணர் மற்றும் விநாயகர் போன்ற தெய்வங்களின் நுணுக்கமான உருவங்களுடன் நகாஷி பெண்டண்ட்டுகள் தனித்து நிற்கின்றன. இந்த டிஸைன்களை உருவாக்குதல், எம்பாஸ் மூலம் அவற்றை தங்கத்திற்கு மாற்றுதல் மற்றும் டீடெய்லிங்க் செய்தல் ஆகியவற்றின் நுணுக்கமான செயல்முறை இந்த பெண்டண்ட்டுகளை மிகுந்த கலாச்சார முக்கியத்துவம் மற்றும் பக்தி நிறைந்ததாக ஆக்குகிறது.
தெய்வீக அம்சத்துடன் உங்கள் ஆடைகளை அலங்கரிக்க விரும்பினால், டெம்பிள் ஜுவல்லரி பெண்டண்ட்டுகள் தான் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பெண்டண்ட்டுகள் அவற்றின் விரிவான டிஸைன்களுக்கு பெயர் பெற்றவை மேலும் எந்தவொரு சந்தர்பத்திற்கும் ஏற்றதாக அமைகிறது.
உங்கள் டெம்பிள் ஜுவல்லரி பெண்டண்ட்டுகளை எத்னிக் மற்றும் நவீன ஆடைகள் என இரண்டுடனும் இணைக்கலாம். ஒரு நேர்த்தியான தோற்றத்திற்கு இவற்றை வேறு மென்மையான நகைகளுடன் அணியலாம் அல்லது ஒரு ஐகானிக் தோற்றத்திற்காக கனமான நகைகளுடனும் அணியலாம்.
ஒட்டியாணம்
ஒட்டியாணம் என்பது ஒரு பாரம்பரிய இடுப்பு பெல்ட் ஆகும், இது பல நூற்றாண்டுகளாக தென்னிந்திய திருமண உடை அலங்காரத்தில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்து தெய்வங்களின் நுணுக்கமான வடிவங்கள் மற்றும் உருவங்களுடன் பொறிக்கப்பட்டிருக்கும், இந்த கோயம்புத்தூர் நகையானது கலாச்சார அடையாளத்துடன் இணைந்த சிறந்த கைவினைத்திறனின் பிரதிபலிப்பாகும்.
திருமணங்கள், பண்டிகைக் கொண்டாட்டங்கள் அல்லது எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, எந்த ஒரு கலாச்சார நிகழ்வுக்கும் ஒரு எத்னிக் தோற்றத்தை உருவாக்குவதற்கு ஒட்டியாணம் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த இடுப்பு பெல்ட்டை உங்கள் புடவை அல்லது லெஹெங்காவின் மேல் வைத்து உங்கள் அழகை மெருகேற்றுவதோடு, ஒரு ரிச் லுக்கையும் உருவாக்கலாம். இந்த அணிகலனை ஒரு நீண்ட மாடர்ன் கவுனுடன் அணிந்து ஃப்யூஷன் லுக்கையும் உருவாக்கலாம்.
காதணிகள்
டெம்பிள் ஜுவல்லரியின் பாரம்பரிய கைவினைத்திறனுக்கு நகாஷி காதணிகள் சிறந்த மற்றும் மிக நுட்பமான எடுத்துக்காட்டுகளாகும். அது கனமான ஜும்காக்களாக இருந்தாலும் சரி, சின்னச் சின்ன சந்த்பாலிகளாக இருந்தாலும் சரி, அல்லது காலத்தால் அழியாத ஸ்டுட்களாக இருந்தாலும் சரி, இவை ஒவ்வொன்றும் நுணுக்கமாக செதுக்கப்பட்ட தெய்வீக மற்றும் மலர் வடிவங்களைக் கொண்டிருக்கும்.
நீங்கள் எத்னிக் உடைகள் அல்லது நவீன ஆடைகள் என எது அணிந்திருந்தாலும், கிட்டத்தட்ட எல்லாவித ஆடைகளுடனும் டெம்பிள் ஜூவல்லரி காதணிகளை அணியலாம்.
மினிமலிஸ்டிக் ஆடைகளுடன் ஸ்டேட்மென்ட் நகைகளை அணிந்து ஒரு பேலன்ஸ்டு லுக்கை உருவாக்கலாம். நாகாஷி காதணிகளை வளையல்கள் மற்றும் பெண்டண்ட்டுகள் போன்ற கலாச்சார பெருமைமிக்க மற்ற கோயம்புத்தூர் நகைகளுடன் சேர்த்தும் அணியலாம். உங்கள் அன்றாட ஆடைகளுடன் சிறிய காதணிகளை அணிந்து உங்கள் தோற்றத்தை மெருகேற்றலாம்.
கோயம்புத்தூர் ஜூவல்லரி மூலம் அசத்தலான தோற்றத்தை உருவாக்குங்கள்
டெம்பிள் ஜுவல்லரியை கொண்டு ஸ்டைலிங் செய்வது, உங்கள் நவீன ஆடைகளுக்கு காலத்தால் அழியாத நேர்த்தியையும் கலாச்சார பாரம்பரியத்தையும் சேர்க்கும் எளிய வழியாகும். ஒவ்வொரு நகையும் ஒரு ஆழமான வரலாற்று பின்னணி, பொறுமை மற்றும் பக்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புகள் ஒவ்வொரு பெண்ணும் வைத்திருக்க வேண்டிய ஒரு நகையாக இது மாற்றுகிறது..
நீங்கள் ஒரு மணப்பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது ஃபேஷன் ஆர்வலராக இருந்தாலும் சரி, இந்த ஐந்து கோயம்புத்தூர் நகை டிஸைன்களுடன் உங்கள் தோற்றத்தை மெருகேற்றி, ஐகானிக் லுக்கை உருவாக்குங்கள். டெம்பிள் ஜுவல்லரியின் மகத்துவத்தாலும் பாரம்பரியத்தாலும் உங்களை அலங்கரித்துக் கொள்வதன் மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்களை தனித்து நிற்கச் செய்யுங்கள்!