தங்கம் பார்கள்
கோல்ட் பார்கள் தங்க செவ்வக துண்டுகளாக உள்ளன, சில நேரங்களில் தங்க பிஸ்கட் என குறிப்பிடப்படுகிறது, மற்றும் முக்கியமாக ஒரு சேமிப்பு கருவியாக வாங்கப்படுகின்றன.தங்கக் கட்டிகள் பண்டிகைகள் கொண்டாடுவதற்காக, பரிசளிப்பு நோக்கங்கள் அல்லது பிறந்தநாள் மற்றும் திருமணங்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகள் போன்ற நல்ல காரணங்களுக்காக வாங்கப்படுகின்றன. இந்த தேவை பருவத்திற்கு பருவம் மாறுபடுகிறது மேலும் தந்தேராக்கள், தீபாவளி மற்றும் அட்சய திருதையை போன்ற நல்ல நாட்களில் தங்கக் கட்டிகளின் விற்பனை அமோகமாக இருக்கிறது.
இது எவ்வாறு செயல்படுகிறது?
- குறைந்த செய்கூலி மற்றும் பிரீமியம்:
ஒரு தங்கக் கட்டியில் முதலீடு செய்வது அறிவுப்பூர்வமானதாகும் ஏனென்றால் கட்டிகள் குறைந்த பிரீமியத்துடன் வருகின்றன. பொதுவாக நீங்கள் செலுத்தும் பிரீமியத்தில் செய்கூலி மற்றும் சில நேரங்களில் போக்குவரத்து மற்றும் சுத்திகரிப்பு செலவுகள் மட்டுமே அடங்குகின்றன. கட்டிகள் அளவில் மிகப் பெரியவை என்பதனால், உங்கள் பணத்திற்குத் தக்கதைப் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த அளவுகோல் பொருளாதாரம் செயல்பாட்டுக்கு வருகிறது. - எடை:
தங்கக் கட்டிகள் 0.5 கிராமில் துவங்கி 1 கிலோ வரை இருக்கின்றன. 5 கிராம், 8 கிராம் மற்றும் 10 கிராம் கட்டிகள் பெரும்பாலான மக்களின் பிரபலமான தேர்வாகும். நீங்கள் வாங்க முடிவெடுப்பதற்கு முன் உங்களுடைய பட்ஜெட், முதலீடு மற்றும் பணமாக்கல் இலக்கு போன்ற காரணிகளை கணக்கு பார்ப்பது அவசியமாகும். அதிக எடையுள்ள கட்டிகள் வாங்குவதற்கு மலிவானவைகளாகும், ஆனால் லேசான எடையுள்ளவற்றை பணமாக்குவது எளிதாகும். - தூய்மை:
நீங்கள் முதலீட்டு நோக்கங்களுக்காக தங்கக் கட்டிகளை வாங்கினால், தூய்மை என்பது மிக முக்கியமானதாகும். ஹால்மார்க் பதித்த அல்லது எல்.பி.எம்.ஏ (LBMA) சான்றிதழ் உள்ள கட்டிகளையே வாங்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் பணத்துக்கான மதிப்பை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது, மேலும் உங்கள் தங்கக் கட்டிகளை விற்க முற்படும் போது அது உங்களை சிறந்த நிலையில் வைக்கிறது. மேலும், நீங்கள் வாங்கும் போது ஒரு தூய்மை சான்றிதழையும் கேட்க வேண்டும். - தங்கக் கட்டிகளை வைத்திருத்தல்:
நாணயங்களுடன் ஒப்பிடும்போது தங்கக் கட்டிகள் அதிக மதிப்புள்ளவையாக இருப்பதனால், அவற்றை உடனடியாக பணமாக்குவது சாத்தியமில்லை, அவற்றை வீட்டில் வைத்திருப்பது கடினமாகும், லாக்கர்கள் போன்ற மாற்று வழிகள் பாதுகாப்பான தேர்வாகும். ஆனாலும், நீங்கள் அவற்றை வீட்டில் அல்லது வங்கியில் உள்ள ஒரு லாக்கரில் வைக்க விரும்பினால் மற்றும் ஏற்கனவே அப்படி ஒன்று இல்லையென்றால், அதற்கு கூடுதல் செலவு உண்டாகும். - வாங்குதல்:
தங்க நாணயங்களைப் போலவே, நீங்கள் வாங்குவதற்கு முன் கூடுமான மட்டும் குறைந்த அளவிலான பிரீமியத் தொகையையே செலுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த ஒரு சில நம்பகமான சில்லறை விற்பனையாளர்களை சந்திப்பது உங்கள் நேரத்திற்கும் பணத்திற்கும் பாதுகாப்பாகும். இந்த காரியங்கள் தான் தங்கக் கட்டிகளைப் பொறுத்த வரையில மிக முக்கியமானவைகளாகும் ஏனென்றால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை மிகவும் அதிகமாகும் மேலும் 1-2% வேறுபாடு கூட உங்களுக்கு கணிசமான சேமிப்பை பெற்றுத் தரும்.
இது எனக்குத் தானா?
முதலீடு செய்ய வேண்டுமென பணம் வைத்திருப்பவர்களுக்கு மற்றும் நீண்டு கால பலன்களை மட்டுமல்லாமல் எளிதாக பணமாக்குதல் வசதிகளையும் வழங்கும் ஒரு வடிவத்தில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு தங்கக் கட்டிகளை வாங்குவது லாபகரமான ஒரு யோசனையாகும். தங்கக் கட்டியில் முதலீடு செய்வதில் உள்ள சிறப்பம்சங்கள்:
- குறைவான செய்கூலி.
- கட்டிகளை நகைகளாக அல்லது அவசர நிலை ஏற்படும் போது பணமாக மாற்றுவது போன்ற நோக்கத்துடன் உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பிற்காக தங்கக் கட்டிகளை வாங்கலாம்.
- நீங்கள் ஒரு நீண்ட கால முதலீட்டை தேடினால் மற்றும் அதை பொருட் தங்கமாக வைத்திருக்க விரும்பினால், தங்கக் கட்டிகள் ஒரு பொருத்தமான தேர்வாகும்.
- பணமாக்குவது எளிது மற்றும் நேரடியாக விற்கலாம் போன்றவை அனைத்து விதமான முதலீட்டாளர்களாலும் கட்டிகளை எளிதாக அணுக முடிகிறது.
- சிறிய அளவிலான கட்டிகளை விற்பது எளிதாகும் அதேநேரத்தில் பெரிய அளவுள்ளவை குறைந்த சேதாரத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ளவும், உங்கள் முதலீட்டு இலக்கைப் பொறுத்து, நீங்கள் முடிவெடுக்கலாம்.
நான் அதை எவ்வாறு பெறலாம்?
தற்போது தங்கக் கட்டிளை எந்த நகைக் கடைக்காரர்களும் விற்கலாம்.