தங்க நாணயங்கள்
இந்தியாவில், 'தங்க நாணயம்' என்ற வார்த்தையானது சேமிப்பு அல்லது பரிசளிப்பு நோக்கங்களுக்காக வாங்கப்பட்ட ஒரு சுற்று பதக்கத்தை பொதுவாக விவரிக்க பயன்படுத்தப்படுகிறது.இது எவ்வாறு செயல்படுகிறது?
ஒரு தங்க நாணயத்தை வாங்கம் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு சில முக்கிய அம்சங்கள் உள்ளன:
- தூய்மை:
ஒழுங்கமைக்கப்பட்ட சுத்திகரிப்பாளர்கள் 995 அல்லது 999 என்ற நிலையான தூய்மைகளை பின்பற்றினாலும், பெரும்பாலான நாணயங்கள் 916.6 (22 காரட்) இல் விற்பனை செய்யப்படுகின்றன. தூய்மையை சில்லறை விற்பனையாளர் அல்லது நாணயங்களை ஒழுங்குபடுத்தும் (எ.கா. 23 காரட், 21 காரட், 20 காரட் மற்றும் 18 காரட்) பெருநிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. முதலீட்டு நோக்கங்களுக்காக வாங்கப்படும் பெரும்பாலான நாணயங்கள் 22 காரட் அல்லது 24 காரட்டாக இருக்கின்றன.
- எடை:
பெரும்பாலான ஒழுங்கமைக்கப்பட்ட சுத்திகரிப்பாளர்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையிலான நாணயங்களை உற்பத்தி செய்கின்றனர். 10 கிராம் மற்றும் அதற்கு குறைவான நாணயங்கள் மிகவும் பிரபலமானவைகளாகும். பல உற்பத்தியாளர்கள் 1 கிராம், 2 கிராம், 4 கிராம் மற்றும் 8 கிராம் (கினியா எனவும் அழைக்கப்படுகிறது) என்ற அளவிலான சிறிய நாணயங்களை உற்பத்தி செய்கின்றனர்.
- வடிவமைப்பு:
நாணயங்கள் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. பெருநிறுவனங்கள் மற்றும் சில்லறை நகை விற்பனையாளர்கள் பெரும்பாலும் நாணயத்தின் ஒரு பக்கத்தில் தங்கள் லோகோவையும் மற்றும் மறுபக்கத்தில் ஒரு தரநிலை அல்லது உற்பத்தியாளரின் வடிவமைப்பை பொறிக்கின்றனர். பல நாணயங்கள் பின்புறத்தில் ஒரு இந்து கடவுள் அல்லது தெய்வம் அல்லது மத உருவத்தை சித்தரிக்கின்றன. ஒரு சில நாணயங்கள் ராணி விக்டோரியா, எட்வர்ட் VII அல்லது ஜார்ஜ் V ஆகியோரை சித்தரிக்கின்றன. பாண்டா நாணயம் (சீனா), மேபிள் லீஃப் (கனடா) மற்றும் கங்காரு (ஆஸ்திரேலியா) போன்ற பிற நாட்டு நாணயங்களும் கிடைக்கின்றன. உற்பத்தியாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடையின் முதலெழுத்துக்களைக் கொண்ட நாணயங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
- ஹால்மார்க் முத்திரையிடுதல்:
நீங்கள் ஒரு நாணயத்தை வாங்கும் போது அதில் ஹால்மார்க் முத்திரையிடப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவும். ஹால்மார்க் தங்க நாணயத்தின் தூய்மையை உறுதிப்படுத்துகிறது இதனால் நீங்கள் செலுத்தும் பணத்ததிற்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது.
- எங்கே வாங்க வேண்டும்:
நாணயங்கள் முக்கியமாக நகைக் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை நகைகளுக்குப் பதிலாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது உங்களுக்கு தேவையான போதெல்லாம் அவற்றை திரும்ப வாங்கலாம். நகைக் கடையின் இணையதளங்களும் மின்-வர்த்தக தளங்களும் தங்க நாணயங்களை விற்கின்றன. குறிப்பிட்ட வங்கிகளிலும் நீங்கள் நாணயங்களை வாங்கலாம்.
- விலை:
தங்க நாணயங்கள் பொதுவாக குறிப்பான விலைகளில் விற்கப்படுகின்றன, இது நாணயத்தின் விலைக்கு அதிகமான ஒரு விலையாக இருக்கிறது.
இது எனக்குத் தானா?
நீங்கள் பின்வரும் மூன்று முக்கிய நோக்கங்களுக்காக நாணயங்களை வாங்கலாம்: குடும்ப பரிசுகள், பெருநிறுவன பரிசு அல்லது தனிப்பட்ட சேமிப்பு. பண்டிகை மற்றும் திருமண காலங்களில் தேவைப்பாடு உச்சத்தை அடைகிறது. சில்லறை விற்பனைக் கடைகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே தீபாவளி மற்றும் திருமணங்களுக்காகவும் மற்றும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையே அட்சய திருதயைக்காகவும் இருப்பு வைக்கின்றன. தனிநபர் முதலீட்டாளர்களும் சேமிப்பு நோக்கத்திற்காக நாணயங்களை வாங்குகின்றனர். பெறுநிறுவனங்களும் பரிசளிப்பு நோக்கத்திற்காக பெருமளவில் வாங்குகின்றன.
தங்க நாணயங்களை வாங்குவது குறித்து நீங்கள் ஏன் பரிசீலிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- செய்கூலி கிடையாது.
- பெரிதாக வாங்குவதற்கு காத்திருக்காமல் சிறிதளவு வழக்கமாக சேமிக்கலாம்.
- எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் பணம் கொடுக்கும் அல்லது மாற்றிக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேமிப்பை உறுதிப்படுத்துவது சிறந்த வழியாகும்.
நான் அதை எவ்வாறு மீட்கலாம்?
தற்போது அனைத்து சில்லறை நகைக் கடைகளும் நகைகள் அல்லது பணத்திற்கு தங்க நாணயங்களை விற்கின்றன.