தங்க நகை
ஒரு நகை கொள்முதல் திட்டம் ஒரு காலத்திற்கு மேல் சேமிப்பு மூலம் சந்தர்ப்பங்களில் தங்க நகைகள் ஒரு திட்டமிட்ட கொள்முதல் செய்ய அனுமதிக்கிறது.இந்த திட்டத்தின் கீழ், 11 மாத காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் நீங்கள் முன்பே நிர்ணயித்த தொகையை செலுத்த வேண்டும். பதினோராவது மாதத்தின் இறுதியில், நீங்கள் ஒரு சிறப்பு தள்ளுபடிக்கு தகுதி பெறுவீர்கள் அல்லது நகைக் கடைக்காரர் அவரது சார்பாக ஒரு தவணையை செலுத்துவார், இதன்மூலம் நீங்கள் நகைக் கடைக்காரரிடம் இந்த திட்டத்தின் கீழ் செலுத்திய தொகைக்கு உங்களுக்கு விருப்பமான நகையை வாங்கலாம். இந்தத் திட்டங்களை நாடு முழுவதும் பல நகைக் கடைகளும் வழங்குகின்றன.
இது எவ்வாறு செயல்படுகிறது?
- திட்டம்:
நகை வாங்கும் திட்டமானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் நகைகள் வாங்குவதற்கு திட்டமிட அனுமதிக்கும். நீங்கள் 12 மாதங்களுக்கு ஒரு திட்டத்தில் சேரலாம், இதில் நீங்கள் 11 மாதங்களுக்கு பணம் செலுத்துவீர்கள் நகைக் கடைக்காரர் கடைசி தவணையை செலுத்துவார் அல்லது வாடிக்கையாளருக்கு சில தள்ளுபடிகளை வழங்குவார். பன்னிரண்டாவது மாதத்தில் நீங்கள் சேமித்த தொகையைப் பொறுத்து உங்கள் விருப்பப் படி தங்க நகைகளை வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தவணை மதிப்பு ரூ. 1,000 அல்லது ரூ. 2,000 (நகைக் கடைக்காரரைப் பொறுத்து) ஆக இருக்கும் மேலும் இது ரூ. 1000 மடங்காக அதிகரிக்ப்படும். மீட்கும் நாளில் தங்கத்தின் விலையைப் பொறுத்து நீங்கள் பெறும் தங்கத்தின் அளவு இருக்கும்.
- காலம் மற்றும் தூய்மை:
நகைக் கடைக்காரர்கள் 6, 12 அல்லது 15 மாத காலங்களுக்கு செயல்படும் திட்டங்களை வைத்துள்ளனர் மற்றும் திட்டம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த குறிப்பிட்ட நகையை சில்லறைக் கடையிலிருந்து நகை வடிவில் தங்கத்தை மீட்டுக் கொள்ளலாம். தங்க நகைக் கடைகள் பொதுவாக 18 காரட் அல்லது 22 காரட் தங்கத்தை வாங்குகின்றன. இந்திய தரநிலைகள் இலாக்கா (BIS) மூலம் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே நீங்கள் வாங்க வேண்டும்.
- திட்டத்தில் சேர்தல்:
நகைக் கடையிலுள்ள அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும் மற்றும் நிரப்பப்பட்டட படிவத்துடன் உங்கள் அடையாளச் சான்றுகளையும் சேர்த்து கொடுக்க வேண்டும். முதல் தவணை பொதுவாக பணமாக அல்லது கார்டு மூலமாக கடையில் செலுத்தப்படுகிறது அதன்பின் வரும் தவணைகள் கசோலைகள் மூலம் அல்லது உங்கள் வங்கி கணக்கிலிருந்து நேரடியாக வழங்கப்படுகின்றன.
இது எனக்குத் தானா?ஒரே நேரத்தில் பெரிய அளவு பணத்தை கொடுக்க விரும்பாத அதேநேரத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக நகைகளை வாங்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு முறைப்படுத்தப்பட்ட திட்டமாகும் எனவே ஒவ்வொரு மாதமும் நீங்கள் சேமிக்கும் தொகையானது வருடத்தின் முடிவில் நீங்கள் விரும்பியதை வாங்க உங்களுக்கு உதவும்.
இது உங்களுக்கு வேறு என்ன செய்யும் என்பதை கீழே பார்க்கவும்:
- நீங்கள் தங்கம் வாங்குவதை முன்கூட்டியே திட்டமிடுவது தவிர, அவற்றை தள்ளுபடி விலையிலும் வாங்கலாம்.
- உங்கள் மனைவி அல்லது மகளின் அடுத்த பிறந்தநாள் அல்லது உங்களுக்கு பிரியமானவர்களுக்கு பரிசளிக்க அல்லது உங்கள் அடுத்த திருமண நாளுக்கு அல்லது அடுத்த முக்கியமான பண்டிகை போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு திட்டமிட இந்தத் திட்டத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
- மீட்கும் நாளில் தங்கத்தின் விலையைப் பொறுத்து நீங்கள் பெறும் தங்கத்தின் அளவு இருக்கும்.
- பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக தங்க நகை வாங்குவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், தங்கம் வாங்கும் திட்டமானது நகைக் கடைக்காரரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கிறது, எனவே கால முடிவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் சேமித்த உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்துகிற நகைகளை வாங்கலாம்.
நான் அதை எவ்வாறு மீட்கலாம்?
உங்கள் நகை வாங்கும் திட்டத்தின் முதிர்வு காலத்தில் நீங்கள் 18 காரட் தங்கம் அல்லது 22 காரட் தங்க நகையை சில்லறை விற்பனையாளரிடமிருந்து வாங்கலாம். பெரும்பாலான நகைக் கடைக்காரர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்க நாணயங்களையும் கட்டிகளையும் வாங்குவதற்கு அனுமதிப்பதில்லை. நகையை பெறும் நேரத்தில் மதிப்புக் கூட்டு வரி போன்ற பொருந்தக்கூடிய வரிகளை நீங்கள் செலுத்த வேண்டும்.
பில் தொகையானது பெறுமதியான தொகையை விட அதிகமானால், நகையை பெறுவதற்கு நீங்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டும். நீங்கள் சேர்ந்த நகைக் கடையில் இருந்து மட்டுமே நீங்கள் நகையை வாங்க முடியும். எக்காரணம் கொண்டும் நகைக் கடைக்காரர் பணமாக திருப்பிக் கொடுக்கமாட்டார்.