Published: 18 நவ 2024
டெம்பிள் ஜூவல்லரி: தென்னிந்தியாவின் தலைசிறந்த கைவினைத் தங்க நகைகள்
தென்னிந்தியாவின் பரபரப்பான மையப்பகுதியில், நேர்த்தியான தங்க நகைகளில் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் இழைத்து அவற்றை தலைசிறந்த படைப்புகளாக உருவாக்குகிறார்கள் தென்னிந்திய கைவினைக் கலைஞர்கள்.
திறமைக்கு பெயர் பெற்ற இந்த கலைஞர்கள், கோவில் கட்டிடக்கலை, இயற்கை மற்றும் தெய்வீக வடிவங்களால் ஈர்க்கப்பட்டு, சுத்தமான தங்கத்தை நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தலைசிறந்த படைப்புகளாக மாற்றுவதில் வல்லவர்கள். தெய்வீக உருவங்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் பொதிந்த ஒவ்வொரு டெம்பிள் ஜூவல்லரியும் தென்னிந்திய கலையின் கலாச்சார செழுமையை பிரதிபலிக்கிறது.
அலங்கரிக்கப்பட்ட ஹாரங்கள், தெய்வீக லட்சணம் பொருந்திய ஒட்டியாணங்கள் மற்றும் பிரமிப்பூட்டும் பெண்டண்ட்டுகள் மற்றும் வளையல்கள் போன்ற இந்த கைகளால் செய்யப்படும் நகைகள் அந்த பிராந்தியத்தின் பாரம்பரியத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன அதுவும் குறிப்பாக திருமணங்கள் மற்றும் பண்டிகை விழாக்களின் போது இவை இன்றியமையாததாக இருக்கிறன. பரம்பரை பரம்பரையாகப் பேணப்படும் இந்த டெம்பிள் ஜூவல்லரிகள் பாரம்பரியம், கலைத்திறன் மற்றும் பக்தியின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த இணையில்லா தெய்வீக படைப்பை சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம் கலையும் பாரம்பரியமும் இணையும் தென்னிந்தியாவின் துடிப்பான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் பாரம்பரியத்தை காலத்தை தாண்டி நிலைக்கச் செய்வதாகும்.