Published: 04 நவ 2021
பல்வேறு நிகழ்வுகளுக்கு தங்க நகைகளை அணிவதற்கான புதிய வழிகள்
தொற்றுநோய் நம் வாழ்க்கை முறை நடைமுறைகள் மற்றும் விருப்பங்களில் அதிர்வுடன் கூடிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நகைகள், குறிப்பாக தங்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. தொற்றுநோய்களின்போது மற்ற பொருட்களின் விலைமதிப்பு சரிந்தாலும் தங்கத்தின் விலை உயர்ந்தது, தங்கத்திடம் இருக்கும் முதலீட்டு சக்தி பற்றி, இந்த நிகழ்வு குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு கண் திறப்பாக இருந்திருக்கும்.
நாடு முழுவதும் நிலைமை இப்போது சீராகி வருவதால், மக்கள் அலுவலகங்களுக்குச் செல்வது, வெளியே சாப்பிடுவது, திருமணங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கைக்கு மெதுவாகத் திரும்புகின்றனர். இருப்பினும், இன்னும் எச்சரிக்கைக் காற்று இருந்து கொண்டுதான் இருக்கிறது, அதனால்தான் தங்க நகைகளை வாங்க விரும்பும் பெரும்பாலான மக்கள் தினசரி அணிதல் மற்றும் நிகழ்வுகளுக்கான அணிதல் இரண்டிற்கும் பொருந்தக்கூடிய பல்-பயன்பாட்டு அணிகலன்களைத் தேடுகிறார்கள்.
இதையெல்லாம் மனதில் வைத்து, ஸ்டைல் அடிப்படையில் நீங்கள் மேல் மட்டத்தில் இருப்பதற்காக தங்க நகைகளை அணியக்கூடிய சில புதுமையான வழிகளை ஆராய்வோம்:
1. சிறிய குடும்ப நிகழ்வுகள்/நெருக்கமான கொண்டாட்டங்கள்
திருமணங்கள் போன்ற பாரம்பரிய நிகழ்வுகளுக்கு, பாரம்பரியத் தோற்றம் எப்போதும் அதிக மதிப்பைப் பெறுகிறது. ஒரு தங்க சோக்கருடன் சேர்ந்த ஒரு பிரேஸ்லெட் ஒரு சரியான வெளிப்பாடாக இருக்கும் பொருத்தமான காதணிகள் அணிவது வழக்கமாக இருந்தாலும், பெரிய, தடிமனான காதணிகள் உங்கள் மாஸ்க்கில் சிக்கிக் கொள்ளலாம். எனவே, நகைகளைக் காதுகளில் அணிவதை விட உங்கள் கழுத்து மற்றும் மணிக்கட்டில் நகைகளை அணிவது புத்திசாலித்தனம் (மற்றும் பாதுகாப்பானது).
மெஹந்தி போன்ற துடிப்பான கொண்டாட்டங்களுக்கு, பளபளக்கும் நவரத்னா தங்க செட் விளையாட்டுத்தனமான அதே சமயம் பண்டிகைக்கான அணிகலனாகத் திகழலாம். காக்டெய்ல்கள், திருமண நாள் மற்றும் பாரம்பரியம் சாராத பிற நிகழ்வுகளுக்கு, ரோஸ் கோல்ட் மிகவும் சமகால, புதுப்பாணியான தோற்றத்தை அளிக்கும். உதாரணமாக, ஒரு நுட்பமான ரோஸ் கோல்ட் பதக்கமும் காதணியும் உங்கள் ஆடைக்கு எடுப்பாக இருக்கும், குறிப்பாக நீங்கள் ஆழமான, அடர் நிறத்தில் ஆடை அணிந்திருந்தால்.
2. வீட்டிலிருந்து பணி புரியும்போது வீடியோ அழைப்புகளில் கலந்து கொள்ள
பணியிடங்கள் திறக்கத் தொடங்கி விட்டாலும், பல தொழில்முறை வல்லுநர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றுகின்றனர், அப்படியானால் வீடியோ அழைப்புகள் மூலமான மீட்டிங்குகள் மற்றும் விளக்கக் காட்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும். இந்த அழைப்புகளுக்குத் தொழில்ரீதியாக ஆடை அணிவது, தொழில்முறை தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முக்கியமாக இருப்பது மட்டுமின்றி, உங்கள் சக்தி அளவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். சரியான ஆடை மற்றும் ஆபரணங்களைத் தவிர வேறு எதுவும் உங்களைச் சிறப்பாக உணர வைக்க முடியாது.
நீங்கள் அணிகலன்களை அணியும்போது, தொழில்முறையான தோற்றத்தைப் பெற நெக்லஸ்கள் மற்றும் சிறிய காதணிகளை அணிவது நல்லது. சிறிய வைரங்கள் பதிக்கப்பட்ட ஒரு ஜோடி வட்ட வடிவ தங்கக் காதணிகள் மட்டுமே உங்கள் தொழில்முறையான மற்றும் நேர்த்தியான தோற்றத்திற்கு தேவை. மாற்றாக, ஒரு காதில் தங்கக் காதுக் காப்பு அணிவது உங்களைத் தொழில்முறையானவராகக் காட்டுவதோடு உங்கள் தோற்றத்தையும் உயர்த்தும். நீங்கள் டைப் செய்யும்போது இடைஞ்சலாக இருக்கும் என்பதால் பிரேஸ்லெட்களைத் தவிர்ப்பது நல்லது.
3. ஒரு விரைவான காப்பி சந்திப்பு
இயல்பு நிலை கிட்டத்தட்ட திரும்பியுள்ளது, மேலும் பலர் எளிய காப்பி அருந்தலுடன் நண்பர்களுடன் பழகுவது போன்ற வாழ்க்கையின் எளிமையான இன்பங்களை அனுபவிக்க வெளியில் செல்லத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், அந்த நேரத்தில் ஸ்டைலாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. உங்கள் மாஸ்க்கை அணியும்போதே, உங்கள் எளிமையான டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் தோற்றத்திற்கு இணையாக ஒரு ஜோடி தங்கத் தோடுகள் அல்லது வளையங்களை அணியுங்கள்.
ஒரு எளிய பிரேஸ்லெட் அல்லது ஒரு பதக்கத்துடன் கூடிய ஒரு மெல்லிய சங்கிலியையும் நீங்கள் அணியலாம். ஒரே ஒரு அணிகலனை மட்டும் அணிய வேண்டும் என்பதுதான் முக்கியம். சில நேரங்களில் குறைவாக அணிவதே சிறப்பான தோற்றத்தை அளிக்கும், நீங்கள் ஒரே ஒரு அணிகலனை மட்டுமே அணிந்திருப்பது அதன் மீது இன்னும் அதிக கவனத்தை ஈர்க்கும்.
4. வீட்டில் ஓய்வெடுத்தல்
உங்களுக்காக ஆடை அணிவது முக்கியம் என்றாலும், வீட்டில் அணிவதற்கான ஆடைகள் மற்றும் ஆபரணங்களைத் தேர்ந்தெடுக்கும்போது செளகரியம் ஒரு முக்கிய காரணியாகும். நீங்கள் சோஃபாவில் சாய்ந்திருந்தாலும் அல்லது பனானா பிரெட்டை பேக் செய்து கொண்டிருந்தாலும், எளிய நகைகளே சிறந்த தேர்வாகும்.
குடும்ப வீடியோ அழைப்புகள் போன்றவற்றிற்கு, ஒரு ஸ்டைலான தோற்றத்திற்காக, எளிமையான, மெல்லிய தங்கச் சங்கிலி அல்லது எனாமல் அலங்காரத்துடன் கூடிய சிறிய அலங்காரக் காதணிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். நீண்ட காதணிகள் அல்லது பிரேஸ்லெட்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமானது, ஏனெனில் நீங்கள் உங்கள் வேலைகளைச் செய்யும்போது அவை ஏதோ ஒன்றுடன் சிக்கிக் கொள்ளக் கூடும்
5. சமூக ஊடகங்களில் போஸ் தருதல்
Jewellery credits: Chheda Jewels – Only at Dadar T.T. Circle
Jewellery credits: Curated by the Brand Poonam Soni
பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே அடைந்து கிடப்பதால், உங்கள் சமூக ஊடகப் பதிவுகளில் அதிக பயணப் பதிவுகளை நீங்கள் பார்க்க வாய்ப்பில்லை. தனித்துவமான, பிரமிக்க வைக்கும் நகை ஸ்டைலிங் போன்ற தனித்துவமான ஒன்றை போஸ்ட் செய்ய இதைவிடச் சிறந்த நேரம் எது?
பிரமிக்க வைக்கும் தோற்றத்தை உருவாக்க, புகைப்படங்களில் தனிப்பட்டுத் தெரியும் தனித்துவமான மற்றும் பெரிய டிசைன்களைக் கொண்ட நகைகளைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக, பெரிய ரத்தினக் கற்களைக் கொண்ட ஒரு பெரிய மோதிரத்தை தினந்தோறும் அணிய நீங்கள் தயங்கலாம், ஆனால் அதை வெளிக்காட்ட இது சரியான சந்தர்ப்பமாக இருக்கும்.
பளிச்சென்ற காதணிகளை நீங்கள் விரும்பினால், நுட்பமாகச் செதுக்கப்பட்ட டிசைன்களை அணிய முயற்சிக்கவும் அல்லது பாரம்பரிய மற்றும் நவீன பாணிகளைக் கலந்து மேட்ச் செய்யலாம். உதாரணமாக, சிவப்பு போன்ற பளிச்செனும் நிறத்தில் த்ரீ பீஸ் உடையை அணிந்து, அதை தங்க ஜூம்காக்கள் அல்லது குந்தன் ஸ்டோன்களுடன் கூடிய சந்த்பாலிஸுடன் இணைத்து, ஒரு கச்சிதமான ஃப்யூஷன் தோற்றத்திற்கு முயற்சிக்கவும்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், வீட்டிலிருந்து பணி செய்தாலும் சரி, வீட்டிலேயே பார்ட்டி கொடுத்தாலும் சரி அணிகலன்கள் பிளையின் வனிலாவாக இருக்க வேண்டியதில்லை. வெவ்வேறு தோற்றங்களுடன் பரிசோதனை செய்து பாருங்கள்; எளிய தங்கச் சங்கிலிகளில் தொடங்கி, உங்கள் கற்பனையைப் பயன்படுத்தி நீங்களே ஸ்டைல் செய்து, நீங்கள் விரும்பும் சரியான தோற்றத்தைப் பெறுங்கள்.