Published: 10 அக் 2018
ஹால்மார்க்கிங் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை
நமது வாழ்க்கையின் சிறந்த தருணங்களை தங்க நகைகள், மேலும் நளினமாக்குவதுடன், ஒருவர் தருவதற்கும், பெறுவதற்கும் உள்ள மதிப்புமிக்க பரிசுகளில் ஒன்றாகவும் உள்ளன. ஆனால், நீங்கள் வாங்கும்போது தங்கத்தின் தூய்மையை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும்? இதற்கான பதில் எளிமையானது. நகைகள் ஹால்மார்க்கிங் செய்யப்பட்டுள்ளனவா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும், அவ்வளவுதான்.
ஹால்மார்க்கிங் என்பது என்ன?
ஹால்மார்க்கிங் என்பது ஒரு நகையில் தங்கம் எந்த விகிதாச்சாரத்தில் உள்ளது என்பதைத் துல்லியமாக நிர்ணயிப்பதாகும். அடிப்படையில், ஹால்மார்க்கிங் என்பது சான்றளிக்கப்பட்ட ஒரு தங்க மதிப்பீடு நிலையத்தால் தங்கத்தின் தூய்மை உறுதிசெய்யப்படும் ஒரு நடைமுறை ஆகும்.
ஹால்மார்க்கிங்-ஐ யார் செய்கிறார்கள்?
இந்திய அரசானது, ஹால்மார்க்கிங் திட்டத்திற்கு இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) என்ற ஒரேயொரு முகமையை அடையாளப்படுத்தியுள்ளது. BIS ஹால்மார்க்கிங் திட்டமானது சுயவிருப்ப அடிப்படையிலானது மற்றும் BIS சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், BIS-சான்றளிக்கப்பட்ட நகைக்கடைக்காரர்கள், ஏதாவதொரு BIS உரிமம் பெற்ற தர மதிப்பீட்டு மற்றும் தரக்குறியீட்டு மையங்களில், தங்களின் நகைகளை ஹால்மார்க்டு செய்துகொள்ளலாம்.
ஆக, ஹால்மார்க் என்பது இந்த நுண்மையான மற்றும் விலை மதிப்பு மிக்க உலோகத்தாலான பொருட்களுக்கு உத்தரவாதமாக இடப்படும் ஓர் அலுவல் ரீதியான குறியீடு ஆகும்.
ஹால்மார்க் குறியிடப்பட்ட நகைகள் எப்படி இருக்கும்?
வழக்கமாக, தங்கத்தாலான பொருளின் உள்புறத்தில் காணப்படும் ஹால்மார்க் ஆனது, நான்கு கூறுகளை உள்ளடக்கியது: :
- BIS லோகோ
இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (BIS) கார்ப்பரேட் சின்னம் இதுவாகும். நகையானது BIS ஆல் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு இணங்க உள்ளது என்பதற்கு இது சான்றளிக்கிறது.
- தூய்மையின் தரநிலை மற்றும் உலோகத்தின் நுண்மை
இந்த குறியீடு நீங்கள் வாங்கியதன் தூய்மையைக் குறிக்கிறது.
உதாரணமாக, 22K916 என்பது 22 காரட் தங்கத்துடன் ஒத்திருக்கிறது.
18K750 என்பது 18 காரட் தங்கத்துடன் ஒத்திருக்கிறது. .
14K585 என்பது 14 காரட் தங்கத்துடன் ஒத்திருக்கிறது.
- தர மதிப்பீட்டு மையத்தின் அடையாள குறி
இது ஒரு அயிட்டம் எங்கு தீப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது மற்றும் ஹால்மார்க்டு செய்யப்பட்டதோ, அந்த AHC-ஐ அடையாளப்படுத்துகிறது.
- நகைக்கடைக்காரரின் அடையாள குறி
இந்த லோகோ அல்லது குறியீடு, நகைகளை விற்பனை செய்யும் BIS சான்றளிக்கப்பட்ட நகைக்கடைக்குச் சொந்தமானது.
ஹால்மார்க்கிங் ஏன் அவசியமாகிறது?
- ஒரு ஹால்மார்க்டு நகையானது படிப்படியாக விரிவான தூய்மை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால், அது போலியானதாக, அல்லது குறைந்த காரட் மதிப்புடையதாக இருக்க வாய்ப்பில்லை.
- உங்களின் ஹால்மார்க்டு தங்க நகையை என்றாவது விற்க முடிவெடுத்தீர்கள் எனில், இதன் ஹால்மார்க் உங்களுக்குச் சரியான விலை கிடைப்பதை உறுதிசெய்யும். ஏனெனில், ஹால்மார்க்டு தங்க நகையானது, வாங்குபவருக்கு தர உத்தரவாதமாக உள்ளது. உங்களின் தங்க நகையை விற்பது பற்றி அதிக விபரங்களை தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்..
- ஒரு BIS-சான்றளிக்கப்பட்ட நகைக்கடைக்காரர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார். அவர்களால் விற்கப்படும் தங்கத்தின் தரத்தைப் பரிசோதிக்க, தற்போக்கு முறை சோதனைகளை BIS-ஆல் மேற்கொள்ள முடியும். உலோகத்தின் தூய்மையில் ஏதாவது பிறழ்ச்சி இருக்குமானால், நகைக்கடைக்காரரின் உரிமம் ரத்து செய்யப்படும். இந்தக் கழுகுப்பார்வை கண்காணிப்பு காரணமாக BIS-சான்றளிக்கப்பட்ட நகைக்கடைக்காரர்கள், தரம் குறைந்த தங்கத்தை விற்று, அதனால் உரிமத்தை இழக்க வேண்டிய அபாயத்தை மேற்கொள்ள மாட்டார்கள்.
- ஹால்மார்க்கிங் இல்லாமல், தங்கத்தை வெறுமனே பார்ப்பதன் மூலம், அது எவ்வளவு தூய்மையானது என்பதை குறைந்தபட்சம் தொழில்நுணுக்கம் அறிந்தவர்கள் தவிர, வேறு எவராலும் கூறுவது கடினம்.
தொடர்புடையவை: பொதுவாக நடைபெறும் தங்க மோசடிகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தங்க ஹால்மார்க்கிங் சட்டப்படி கட்டாயமானதா?
அரசானது ஹால்மார்க்கிங்கை ஒரு சட்டப்படி கட்டாயமானதாக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகின்ற போதிலும், தற்சமயம், அது சுயவிருப்ப திட்டமாக உள்ளது.
இந்திய அரசு ஜனவரி 2017-இல் ஹால்மார்க்கிங் தரநிலைகளை திருத்தியமைத்தது. இந்தத் திருத்தமானது, 14K, 18K மற்றும் 22K ஆகிய தரநிலைகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்படுவதை அனுமதித்தது. ஏப்ரல் 2017-இல், அரசு, வரைவு விதிகளை வெளியிட்டு, நகைக்கடைக்காரர்கள் அனைவருக்கும் BIS பதிவை கட்டாயமாக்கியது. அத்துடன், ஜூனில், அரை-தூய்மை தங்கத்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே செல்லத்தக்க உரிமத்தின் மூலம் இறக்குமதி செய்ய முடியும் என்பதை அமல்படுத்தியது.
இந்தக் கடுமையான நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளும் போது, நம் நாட்டில், விரைவில் ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படும் என்பது தெரிகிறது.
இப்போது, அனைத்து ஹால்மார்க்கிங் நடைமுறைகள் மட்டுமின்றி ஹால்மார்க்கிங் செய்த தங்க நகைகளை வாங்க அறிவுறுத்தப்படுவது ஏன் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆக, நம்பத்தகுந்த கொள்வனவு மற்றும் நீண்ட காலத்திற்கான பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய, அடுத்த முறை தங்க நகை வாங்கும் போது, அதில் ஹால்மார்க் குறியிடப்பட்டுள்ளதா என்பதை சரிபாருங்கள்.