Published: 20 பிப் 2018
மதிப்பாய்வு – தங்கத்தின் தூய்மையை பகுப்பாய்வு செய்யும் அறிவியல்
தங்கம் தூய்மையானது என்பதை தெரிந்து கொள்வது எப்படி? நீங்கள் நகைக்கடைக்காரராக இருந்தாலோ அல்லது உலோகத் தயாரிப்பாளராக இருந்தாலோ, தங்கத்தை பரிசோதிக்க ‘மதிப்பாய்வு’ செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். இது தங்கம் அல்லது வேறு ஏதேனும் உலோகப் பொருட்களை மதிப்பிடும் பகுப்பாய்வு ஆகும். நகைகள் முதல் தூய தங்கக் கட்டிகள் வரை அவற்றின் மதிப்பு மற்றும் தூய்மையை தீர்மானிக்க பகுப்பாய்வு சோதனைகள் செய்யப்படுகின்றன. உலோகத்தை மதிப்பாய்வு செய்ய பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் சில முறைகள் பின்வருமாறு:
-
கல் மதிப்பீடு (கைமுறை சோதனை)
பழங்காலம் முதல் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது தங்கத்தின் தூய்மையைச் சொல்லும் எளிமையான முறையாகும். மதிப்பீடு செய்யும் உரைகல் கடினமான, அடர்ந்த நிறமுடைய நுணுக்கமாக துகள்களைக் கொண்ட மேற்பரப்பைக் கொண்டது. நகைக்கடைக்காரர்கள் செய்ய வேண்டியதெல்லாம் உலோகத்தை அந்தக் கல்லின் மீது அழுத்தித் தேய்த்து இழுக்க வேண்டியது தான். அப்போது கண்களுக்கு புலப்படும் ஒரு கோடு விழும். அந்தக் கோட்டின் நிறம் தங்கத்தின் தூய்மையை தீர்மானிக்கும்.
-
எக்ஸ்–ரே ஒளிர்வு (எக்ஸ்ஆர்எஃப்)
கல் மதிப்பாய்வோடு ஒப்பிடும் போது இந்த மதிப்பாய்வு முறை மிகவும் சிக்கலானது. இது உலோகத்தை சேதப்படுத்தாமல் தூய்மையை விரைவாகவும் துல்லியமாகவும் பரிசோதிக்கும். இங்கே, உலோகம் எக்ஸ்-ரே கதிர்களில் நனைக்கப்படுகிறது அதன் பிறகு தங்கத்தின் அணுக்கரு ஆற்றல் மட்டத்தில் உலோகம் ஃப்ளோரசன்ட் ஒளியை வெளிவிடுகிறது. என்ஸ்ஆர்எஃப் இயந்திரம் தங்கத்தின் தூய்மை அத்துடன் அசுத்தங்களின் சதவிகித்தை தீர்மானிக்க ஆற்றல் மட்டங்களை அளவிடுகிறது.
-
நெருப்புச் சோதனை
சிக்கலானதாக இருந்த போதிலும் நெருப்புச் சோதனை தங்கத்தின் தூய்மையை பரிசோதிக்கும் மிகுந்த நம்பகமான மற்றும் துல்லியமான வழியாகும். இருந்தாலும், அதன் அழிக்கும் இயல்பு காரணமாக அது பொதுவாக பெரிய அளவு தங்கக் கட்டிகளை பரிசோதிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், உலோகம் காரீய ஆக்ஸைடு மற்றும் பாய்மங்களின் கலவை (சிலிகா மற்றும் போரக்ஸ் போன்றவை) மற்றும் ஒரு குறைப்பு பொருள் ஆகியவை 1650 பாரன்ஹீட்டில் ஒன்றாகக் கலக்கப்படுகிறது. (தங்கத்திற்கான உருகுநிலை வெப்பம்). இந்தக் கலவையிலுள்ள காரீயம் இந்தப் பதத்தில் தங்கத்துடன் இறுகுகிறது. அதன் பிறகு இந்தக் கலவை அச்சில் ஊற்றப்பட்டு குளிர அனுமதிக்கப்படுகிறது. இந்தக் காரீயம் பிறகு புடமிடும் கலனான சிறிய எலும்புச் சாம்பல் கலனில் மீண்டும் சூடு செய்யப்படுகிறது. இந்தக் காரீயம் புடமிடும் கலனில் கிரகிக்கப்பட்டு விலைமதிப்பற்ற உலோகத்தை கலனில் விட்டுவைக்கிறது.
-
ஈரமான மதிப்பாய்வு
தாதுவை பொடியாக மாற்றி மற்றும் அதை அமிலம் அல்லது அமிலக் கலவையில் கரைத்தல் இதில் அடங்கும். பிறகு மதிப்பீட்டாளர் அந்தக் கரைசலை இரசாயன முறைப்படி மதிப்பீடு செய்வார். கேள்விக்குரிய உலோகத்தைப் பொறுத்து மதிப்பீட்டாளர் அதைப் பிரித்தெடுக்க மின் பகுப்பு அல்லது உப்புக்களை பயன்படுத்துவார்.
தங்கத்தின் தூய்மை காரட்டால் குறிப்பிடப்படுகிறது. 24 காரட் மிகத் தூய்மையானது. தங்க உள்ளடக்கத்தின் சதவிகிதம் 4.167 ஆல் (ஒரு காரட்டுக்கு சதவிகிதம்) பெருக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. எனவே, உதாரணமாக, 18 காரட் தங்கம் (18 x 4.167) 75 சதவிகிதத் தங்கத்தை கொண்டுள்ளது.
தங்கம் பொதுவாக எக்ஸ்ஆர்எஃப் மற்றும் நெருப்புச் சோதனைகளால் பரிசோதிக்கப்படுகிறது. அவை சுருக்கமான சோதனைகளாகும் மேலும் நகைக் கடைக்காரர்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விரைவாக மற்றும் துல்லியமாக பணம் செலுத்த அனுமதிக்கிறது.