Published: 02 ஆக 2017
தங்க ஈ.டி.எப்.களில் (ETFS) முதலீடு செய்யத் துவங்குபவர்களுக்கான வழிகாட்டி
தங்கம் ஒரு நல்ல பல்வகை பயன்பாடாக அறியப்படுவதனால் தங்க ஈ.டி.எப்.களில் முதலீடு செய்வதை நீங்கள் பரிசீலிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. தங்கமானது உலகம் முழுவதிலுமுள்ள முதலீட்டாளர்களுக்கு பணவீக்கம், பணமதிப்பு வீழ்ச்சி மற்றும் அதனைத் தொடரும் ஆபத்துக்களுக்கு எதிரான ஒரு பயனுள்ள பாதுகாப்பு வேலியாக இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளில் நீண்ட காலத்திற்கு தங்கத்தை வைத்திருப்பதின் பயனைப் பெறுவார்கள். பல்வேறு மக்கள் பல்வேறு காரணங்களுக்காக தங்கத்தை வாங்குகிறார்கள். நகைக் கடை, தொழில்நுட்பம், மத்திய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர் தேவை அனைத்தும் பல்வேறு சக்திகளால் இயக்கப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கத்தில் தங்கள் பங்குகளை 2% முதல் 10% வரை வைத்திருப்பதன் மூலம் பயனடைகிறார்கள் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
நகை மற்றும் பொருட் தங்கமே பெரும்பாலனவர்களுக்கு முன்னுரிமையாக இருந்தாலும், எளிய மற்றும் பயனுள்ள ஈ.டி.எப்.களும் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. சேமிப்புக் கட்டணங்கள் இல்லை, செய்கூலி இல்லை மற்றும் ஒரு பட்டனை கிளிக் செய்து எளிதாக வர்த்தகம் செய்துவிடலாம் என்பதனால் ஈ.டி.எப்.கள் கவர்ச்சிகரமானதாகவும் நேரடியான தங்க முதலீடாகவும் இருக்கின்றன. நவீன கால முதலீட்டாளர்கள் பொருட் தங்கத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக தங்கள் முதலீட்டுத் தேர்வுகளை பல விதங்களில் செய்ய விரும்புகிறார்கள் மற்றும் தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.கள் பொருட் தங்கத்தை வைத்திருப்பது போன்ற சிக்கல்கள் எதுவுமில்லாமல் இதைச் செய்ய உதவுகின்றன. இது முதலீட்டாளர்களை தங்கள் முதலீட்டுப் பிரிவின் செயல்திறனை நிர்வகிக்க உதவுகிறது. எனவே, தங்க ஈ.டி.எப்.கள் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு மறைமுக முதலீட்டுத் தேர்வாக மிகவும் பிரபலமடைய ஆரம்பித்திருக்கிறது.
தங்க ஈ.டி.எப்.களில் முதலீடு செய்வதற்கான ஒரு படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது
படி 1: உங்களிடம் ஏற்கனவே ஒரு பொருளற்ற (டிமேட்) கணக்கு இல்லையென்றால் ஒரு கணக்கைத் துவங்கவும். ஒரு டிமேட் கணக்கைத் துவங்க, உங்களுக்கு PAN கார்டு, அடையாள சான்று மற்றும் முகவரி சான்றுகள் தேவைப்படும்.
படி 2: ஒரு தரகர் அல்லது ஒரு வங்கி மூலம் நீங்கள் வாங்கலாம்.
படி 3: முதல் இரண்டு படிகளை முடித்ததும், எந்த தங்க ஈ.டி.எப் -ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மட்டுமே நீங்கள் முடிவு செய்ய வேண்டும் மேலும் நீங்கள் வாங்க வேண்டியவற்றின் எண்ணிக்கையையும் முடிவு செய்ய வேண்டும். இந்தியாவில் தற்போது 14 ஈ.டி.எப்.கள் உள்ளன
படி 4: அதன்பின் உங்கள் தரகரின் வர்த்தகப் பிரிவு மூலம் ஆர்டர் செய்யலாம்.
படி 5: உங்கள் முதலீட்டை தினமும் கண்காணிக்கலாம் மற்றும் பிற பங்குகளை வாங்குவது விற்பது போலவே இதையும் மின்னணு முறையில் வாங்கலாம் விற்கலாம். இந்தியாவில் எந்த ஒரு நிறுவனத்தின் பங்கையும் போலவே தங்க ஈ.டி.எப்.களும் இந்திய தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பம்பாய் பங்குச் சந்தை (BSE) ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன.
படி 6: உங்கள் தங்க ஈ.டி.எப்.களின் பங்குகளை விற்கும்போது, உங்கள் ஆதாயத்தை ரூபாயாக அல்லது தங்கமாக பெறுவீர்கள். உங்கள் ஈ.டி.எப் பங்குகள் 1 கிலோ தங்கத்திற்கு அல்லது அதற்கு மேல் இருந்தால், பொருட் தங்கமாக மட்டுமே மீட்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.