Published: 09 ஏப் 2018
அக்ஷய திருதியை பண்டிகையை கொண்டாட தங்கம் வாங்கும் விருப்பத்தேர்வுகள்
2018ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 18ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பொன்னாளான அக்ஷய திரிதியை இந்துக்களுக்கும் ஜெயினர்களுக்கும் மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. ஒரு புதிய வணிகத்தைத் துவங்குவது, திருமணமாவது, அல்லது ஒரு முதலீட்டை துவக்குவது என்று பல்வேறு வகைககளின் புதிய தொடக்கத்திற்கான சிறந்த நாளாக அக்ஷய திரிதியை கருதப்படுகிறது.
இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் மகாபாரதத்தை எழுதத் துவங்கினர் என்று நம்பப்படுகிறது. கதையின்படி, பாண்டவர்கள் வனவாசம் செய்த போது, அளவற்ற உணவை வழங்கும் அக்ஷய பாத்திரம் என்ற பாத்திரத்தை கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு வழங்கினார். அன்றிலிருந்து அக்ஷய திரிதியை தங்கம் வாங்குவதற்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த விலைமதிப்பற்ற உலோகம் வளமை, செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இதன் மதிப்பு என்றும் குறையாது. பொற்காலம் அல்லது சத்ய யுகம் என்றழைக்கப்படும் யுகத்தின் துவக்கத்தையும் இந்நாள் குறிக்கிறது. இத்தகைய காரணங்களால் அக்ஷய திரிதியையன்று தங்கம் வாங்கும் பண்டைய பழக்கம் இன்று வரை நடைமுறையில் உள்ளது.
அக்ஷய திரிதியைக்கு சில நாட்களுக்கு முன்பு விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது கேரளாவிற்கும் அண்டை மாநிலங்களுக்கும் புத்தாண்டை அளிக்கிறது. முக்கியமான பொருட்களை வாங்குவதற்கான சிறந்த நாளாக விஷூ கருதப்படுகிறது.
நீங்கள் அக்ஷய திரிதியை அன்று தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களா, அல்லது உங்களது நேசத்திற்கரியவருக்கு ஏதேனும் பரிசளிக்க வண்டும் என்று நினைக்கிறீர்களா, அதற்காக பரிசீலிக்க வேண்டிய சில மாதிரிகள் இங்கே:
<தயவு செய்து குறித்துக் கொள்ளவும்: கீழே குறிப்பிட்டப்பட்ட அனைத்தும் படங்களாக மாறும் >
தொடர்புடையது: தங்க நாணயங்களை எவ்வாறு மற்றும் ஏன் வாங்கவேண்டும்
தொடர்புடையது: தங்க இடிஎஃப்களில் எவ்வாறு மற்றும் ஏன் சேரவேண்டும்
உங்களுக்கு வளமான விஷூ மற்றும் அக்ஷய திரிதியை வாழ்த்துக்கள். உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த சிறப்பு தினங்களைக் கொண்டாடி அன்பையும் மிகிழ்ச்சியையும் பகிருங்கள்.