Published: 01 செப் 2017
மூட்டு வலியின் அறிகுறிகளை குணமாக்க தங்கம் உதவுமா?
தங்கத்தின் ஆரம்பகால மருத்துவப் பயன்பாடானது கி.மு. 2500ஆம் ஆண்டில் சீனாவில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்காயிரம் ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும், முடக்குவாதத்துடன் வலி மற்றும் வீக்கம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இன்றைய காலகட்டத்தில் உள்ள மருத்துவர்களாலும் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
தங்க உப்புக்கள் என்பது நோயை மாற்றிமைக்கும் முடக்குவாத-எதிர்ப்புத்திறன் மருந்துகள் (டிஎம்ஏஆர்டி-கள்) எனப்படும் மருந்துகளின் ஒரு குழுவைச் சேர்ந்தவை ஆகும். தங்கத்தின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையானது, நோய்த் தாக்கத்தைக் குறைத்து மூட்டு வலி மற்றும் வீக்கம் போன்ற முடக்குவாத நோய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், ஊனம் மற்றும் எதிர்கால மூட்டு சேதத்தையும் தடுக்கிறது.
தங்கத்தின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன: ஊசி மூலம் உட்செலுத்தப்படும் தங்கம் அல்லது தங்க சோடியம் தியோமாலேட் (ஜிஎஸ்டி) என்பது மிகவும் பொதுவானதாகும். குறைந்த அளவு பயனுள்ளதாகக் கருதப்படும், வாய்வழி செலுத்தப்படும் தங்கமான ரிடயூரா (அவுரனோபின்) என்பது இரண்டாவதாகும்.
தங்கம் மூலமான சிகிச்சை என்பது பொதுவாக வாராந்திர ஊசி முறையில் கொடுக்கப்படும், மேலும் அறிகுறிகள் கணிசமாக குறைந்தால், மாதத்திற்கு ஒருமுறை என வழங்கப்படும். சிகிச்சை என்பது நீண்ட கால அடிப்படையில் அளிக்கப்படும்; சிகிச்சையளிக்கப்படும் பெரும்பாலான மக்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு பிறகு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
முடக்குவாத சிகிச்சைக்கு தங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது நாள்பட்ட கோளாறுகளைத் தூண்டுவதில் தொடர்புடைய அசாதாரண நோயெதிர்ப்புத் தன்மையை பாதிக்கிறது என நம்பப்படுகிறது. முடக்குவாதத்தின் மூலக்காரணம் கண்டுபிடிக்கப்படும்வரை, இந்த நோயை தங்கம் எவ்வாறு குணமாக்குகிறது என்பது ஒரு மர்மமாகவே இருக்கும்.
பெரும்பாலான மருந்துகள் போலவே, இதிலும் ஒரு எச்சரிக்கை மற்றும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய காரணிகள் உள்ளன. தங்கமானது உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை குறைக்கிறது, எனவே இதை எப்பொழுதும் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலைமை, மற்றும் ஒரு சிகிச்சைக்காக தங்கத்தைப் பயன்படுத்துவது குறித்து மேலும் தகவல்களுக்கு,http://www.arthritisresearchuk.org/ என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்.