Published: 17 ஆக 2017
தங்கமும் ஜோதிடமும்
நகை மற்றும் முதலீடு என்று இரண்டு வகையான அம்சங்களையும் பெற்று புனிதமான உலோகமாக தங்கம் கருதப்படுகிறது. வேதகால ஜோதிடத்தின்படி ஜூபிடர் (வியாழன்) கிரகமானது பிரஹஸ்பதி என்று பெயரிடப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? பிரஹஸ்பதி என்றால் தங்க உடல் என்று பொருள்?
Image Source
மிகவும் பிடித்தமான பெருமதிப்பு கொண்ட உலோகமான தங்கத்தைச் சுற்றியுள்ள சில ஜோதிட நம்பிகைகள் இதோ:
-
தங்கம் அதனை அணிபவர்களுக்கு ஆற்றலையும் இதத்தையும் அளிக்கிறது. பல்வேறு இந்திய பண்டிகைகளில், மக்கள் தங்கம் வாங்குகிறார்கள். அது நல்ல அதிர்ஷ்டத்தையும் வளமையையும் கொண்டுவருகிறது என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
-
உங்களது கனவுகளில் நீங்கள் தங்கத்தைக் கண்டால், நீண்ட காலம் உங்கள் குடும்பத்தின் நிதிநிலைமை நிலையாக இருக்கிறது என்று பொருள். உங்களது எதிர்கால திட்டங்களில் எல்லாம் நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
-
நீங்கள் தங்கத்தை சேமித்து வைக்கும்போது, அதனை சிவப்பு அல்லது மஞ்சள் துணியில் சுற்றி வைத்தால் அதனால் அதிர்ஷ்டமும் வளமையும் கிடைக்கும்.
-
கவனிப்புத் திறன் குறைவாக உள்ளவர்கள் ஆள்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிய வேண்டும், புகழ் மற்றும் கௌரவம் குறித்த சிக்கல்கள் தீர வேண்டுமென்றால் நடுவிரலில் தங்க மோதிரம் அணிய வேண்டும், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் சுண்டு விரலில் தங்க மோதிரம் அணிய வேண்டும் என்ற ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
-
நெக்லஸ் அல்லது அட்டிகை வடிவில் உங்கள் கழுத்தைச் சுற்றி தங்கம் அணிவது திருமண சிக்கல்கள் இருந்தால் தீர்க்க உதவும் என்று சொல்லப்படுகிறது.
-
தங்கம் அணிவதால் பெண்கள் எடுப்பான தோற்றம் பெறுவது மட்டுமல்ல, அவர்களை உறுதியானவர்களாகவும் வலுவான எண்ணம் கொண்டவர்களாகவும் இது மாற்றும்.
-
ஒருவரது ஜாதகத்தில் தண்ணீர் ஆற்றல் அதிகமாக இருந்தால் அத்தகைய ஆண்கள் தங்கம் அணிவதன் மூலம் அவர்களது ஜாதகக் கட்டம் சமநிலை பெறும்.