Published: 05 செப் 2017
20களில் உள்ள பெண்களுக்கான தங்க வடிவங்கள்
20களில் இருக்கும் பெண்களாக, நாம் ஒரு மாற்றத்திற்கான பயணம் வழி செல்வோம். பல்வேறு விதமான நவநாகரிக டிரெண்டுகளுக்கு வெளிப்படுவோம். நம்மில் பலருக்கு, இந்த தசாண்டு நாம் கல்லூரியில் இருக்கும்போது துவங்கி சுயமான பெரிய மனுசியாகும்போது முடிகிறது. நமது 20களில் நாம் அனுபவிப்பதற்கு எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. சில பெரிய, சில சிறிய, விஷயங்களை அனுபவிக்க பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
நம்மில் பலருக்கு திருமணத்திற்கான மணியோசை நமது 20களில் ஒலிக்கிறது. பலருக்கு பொருளாதார சுதந்திரத்திற்கான முதல் சுவை கிடைக்கிறது. வாழ்க்கையின் பல்வேறு பொக்கிஷங்களை அகழ்வாராய்ச்சி செய்து அனுபவிக்க ஏற்ற நேரம் இது.
நம்முடைய சொந்த நகை என்று சொல்லிகொண்டு தங்கம் அணிவது நம்மை நாம் வெளிப்படுத்தும் மற்றொரு முறை. அந்த நாளுக்கான உடையாக நீங்கள் மறுமுறை அணியும்போது நீங்கள் அணிய வேண்டிய சில வடிவங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
-
இளம் தொழில் வல்லுனராக உங்கள் முதல் சில ஆண்டுகளில் இந்த நகைகள் உங்களுக்கென சிறப்பான தோற்றத்தை அளிக்கக்கூடியவை. நாம் நமது 20களின் வழியே செல்லும்போது இங்குள்ள குழப்பமான வடிவங்கள் நளினத்தையும் பிராம்மாண்டத்தையும் இணைக்கும்.
நன்றி: bluestone.com
-
பழங்குடியினர் பாணியிலான கவர்ச்சிகரமான தங்க நெக்லெசை கேசுவல் டி ஷர்ட்டுடனும் டைட்சுடன் குர்த்தி அணியும்போதும் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.
-
மேற்கத்திய உடைகளுடன் பட்டையான தங்க வளையல்கள் அணியும்போது கவர்ச்சிகரமாக இருக்கும்.
-
நீங்கள் ஏதாவது ஒரு நண்பரின் திருமணத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது உடன் பிறந்தோர் திருமணத்திற்கு செல்ல வேண்டுமா, பாரம்பரிய லெகங்கா உடையுடன் தங்க நகையையும் நீங்கள் இணைக்கலாம். மிகவும் மெல்லிய நிறம் கொண்ட வண்ண மயமான ஜரிகை புடவை, அல்லது நீண்ட பாவடையுடன் அணியப்பட்ட வேலைபாடுள்ள மேல் சட்டை, ஆகியவற்றை அணிந்து செல்லலாம். தற்போது நவநாகரிகமாக கருதப்படும் இந்த உடைகள், அந்த நன்னாளை மேலும் சிறப்பாக்கும். உங்களை மிகவும் இளமையாகவும் நவநாகரிகம் உடையவராகவும் காட்டும்.
-
தங்க நகையானது சிறப்பு நாட்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு நாள் ஆடையையும் அது எடுத்துக்காட்டும். அன்றாட உடைகளை எடுத்துக்காட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள அமைதியான, சொகுசான நவீன வடிவங்களை பரிசீலனை செய்யவும்.
நம்மை தனித்துவமாகக் காட்டுவது எது என்று நம்மை நாமே கண்டறிந்து நமக்காக ஒரு அடையாளத்தை வழங்குவது நமது 20கள். எல்லா தருணங்களையும் விட நமது தனித்துவமான அடையாளம் பிரகாசமாக தோன்றும் சிறப்பு தினம் நமது மணநாள். அந்த மணநாளுக்கு முன்பே, திருமண நாளன்று ஒரு மணமகள் எப்படியெல்லாம் நகை அணியலாம் என்பது குறித்த 7 வழிகளைக் காண்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.