Published: 04 செப் 2017
நாற்பதுகளில் உள்ள பெண்களுக்கான தங்க நகைகள்
நாம் 40களில் நுழையும்போது பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகின்றன. நமது குழந்தைகள் வளர்ந்திருப்பார்கள். அவர்களது வாழ்கையோடு ஒன்றிச் செல்ல வேண்டியிருக்கும். நமது பணி வளர்ந்து கொண்டிருக்கும். நம்முடைய பழக்க வழக்கங்கள் நிறைவு அடைந்திருக்கும். நமக்காகவும் நாம் சில நொடிகளை ஒதுக்கலாம். நாம் நேசிக்கும் விஷயங்களை நாம் செய்வதற்கு, நமக்கு வசதியான ஆடைகளை நாம் அணிவதற்கு , நமக்கு சந்தோஷம் அளிக்கும் மனிதர்களுடன் நேரம் ஒதுக்குவதற்கு என பல்வேறு தருணங்கள் நமக்குக் கிடைக்கும். இவைதான் ந்மது 40கள்.
நமது நவநாகரிக தன்மை பெரும் மாற்றமடையும். சளசளவென்ற புடவைகளை உடுத்திகொண்டு நம் அன்னையர் அணிந்தது போன்ற நளினமான நகைகளை அணிய நாம் விரும்புவோம்!!
பல்வேறு தருணங்களில் நீங்கள் சேகரித்த தங்க வடிவங்கள் உங்களுக்கு நன்றாக பொருந்தும்.
- நமது தொழில் வாழ்கையின் உச்ச கட்டத்தில் நாம் இருக்கிறோம். மாநாடுகளில் பங்குபெறுவதிலிருந்து அவற்றை வழிநடத்துவது வரை பல்வேறு உச்சத்தில் நாம் இருப்போம். நமது வாழ்வில் முதன்முறையக நமது 40களில்தான் நாம் ஒரு நிகழ்வில் கௌரவிக்கப்படுவோம்.
-
ஒரு இந்திய தோற்றம் வேண்டும் என்று விரும்பினால், அதாவது பட்டுப்புடவை அல்லது நன்கு எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவை வேண்டும என்று விரும்பினால் பின்வரும் அழகிய தைரியமான நகைகள் உங்கள் தோற்றத்தை எடுத்துக்காட்டும். உங்கள் அழகிற்கும் நளினத்திற்கும் இறுதி வடிவம் கொடுக்கும்.
Courtesy: Fellows UK
-
மேற்கத்திய உடைகள் உங்களுக்கு வசதியாக இருந்தால், இந்த ஆபரணங்கள் உங்கள் உடையுடன் பொருந்தும். ஸ்டைல் இரகசியமானது தங்க வடிவங்களுடன் ஒத்துப்போகும். நவீனத்தை குறுக்கீடு செய்யாமல் நாம் பணிபுரிய முடியும்.
-
நாம் நமது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்காக ஒரு இரவு விருந்து அளிப்பதாக இருந்தால், நமது வீட்டின் பிரம்மாண்டம் மட்டுமல்ல, நமது தோற்றமும் அதற்கு ஏற்றபடி இருக்க வேண்டும்! நாம் நமது சிறந்த தோற்றத்தை அளித்தே ஆகவேண்டும். இந்த அமைதியான நளிமான நகை வடிவங்கள் சிறிய உழைப்பில் நமது தோற்றத்தை எடுத்துக்காட்டும். நவநாகரிகமா ஆனால் வசதியாக தோற்றம் அளிக்க ஒரு எளிய வழி. என்ன இருந்தாலும் இது நம் வீடுதானே
Courtesy: BlueStone
-
உங்கள் ஒன்று விட்ட சகோதரன் அல்லது சகோதரியின் திருமணத்திற்கு நீங்கள் வெளிநாட்டிற்கு செல்லும் சந்தர்ப்பம் ஏற்படலாம். உங்களது சொந்த குழந்தைகள்ள தங்கள் படிப்பை முடிக்கலாம. அவர்களது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நீங்கள் செல்லலாம். மேற்கத்திய கலாச்சார அமைப்பில், தங்கத்தின் மினுமினுப்பைவிட இந்தியத்துவத்தை உணர்த்துவது வேறென்ன? மின்னுவதற்கான தருணம் அதுதான்! நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டிய சில தங்க வடிவங்கள் இதோ.