Published: 04 அக் 2017
ஃபெங் சூயியில் தங்கம்
ஃபெங் சூயியின் படி உங்களது வீட்டின் மீன்தொட்டியில் ஒரு கருப்பு நிற தங்க மீனையும் 8 தங்க அரொவானா மீனையும் வைத்திருப்பது உங்களுக்கு அதிர்ஷ்டம், வளமை மற்றும் நேர்மறை ஆற்றல் ஆகியவற்றைக் கவரும் என்று உங்களுக்குத் தெரியுமா?
ஃபெங் சூயி என்றால் என்ன?
ஃபெங் சூயி என்பது ஜியோ மேன்சி குறித்த பண்டைய சீன முறையாகும். இது பொருட்களை அழகாக வைக்குக் கலை. இதனால் தெய்வீக ஆற்றல் கிடைக்கும். ஃபெங் என்ற வார்தையும் சூயி என்ற வார்த்தையும் முறையே காற்றையும தண்ணீரையும் குறிக்கின்றன. பண்டைய கிராமங்கள் நீர்நிலையின் அருகாமையின் அடிப்படையிலும் காற்றோட்டத்தின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டன என்ற உண்மையில் இது உருவாகியுள்ளதாக நம்பப்படுகிறது.
ஃபெங் சூயி என்பது அழகியல் (எந்த இடத்தில் எந்த பொருளை வைத்தால் அழகாக இருக்கும் என்பது) மற்றும் யதார்த்தத்தின்(எந்த இடத்தில் எந்த பொருளை வைத்தால் மிகவும் பயன் கிடைக்கும் என்பது) இணைப்பு. இது 3000 ஆண்டுகளுக்கு முன்னால் சீனாவில் வளர்க்கப்பட்ட ஒரு சிக்கலான அறிவுத்தொகுப்பு. கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் அங்கு வாழும் மக்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் பொருட்டு ஆற்றலை எவ்வாறு கவர்வது என்று இந்தக் கலைக் கற்றுத்தருகிறது . நமது வாழ்கையை சீ (chi) யுடன் இணைப்பதால் இது நடைபெறுகிறது. சீ (chi) என்றால் சுகாதாரத்தையும் சந்தோஷத்தையும் கொண்டுவரும் இந்த பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல ஆற்றல் என்று பொருள்.
ஃபெங் சூயியில் தங்கம் ஆற்றும் பணியின் பங்கு என்ன?
தங்கம் நேர்மறையான, துடிப்பான ஆற்றலை பிரதிபலிக்கிறது. உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது. பண்டைய சீன கலையான ஃபெங் சூயி உலோகத் தங்கம் அல்லது தங்கத்தின் குவியலைக் குறிக்கிறது.
தங்கம் பணம், செல்வம் மற்றும் வளமைக்கான குறியீடு. ஃபெங் சூயியின் படி, உங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் தங்கத்தை வைப்பது உங்கள் இல்லத்திற்கு வளமையைக் கொடுக்கும்.
சீனக் கலாச்சாரத்தில் மிகவும் பிரபலமான தங்கப் பொருட்கள் தங்க இங்காட்டுகள்(Gold ingots) எனப்படும் தங்கக் கட்டிகள். ஃபெங் சூயியின் படி, அமைதி மற்றும் சமத்தன்மையை உருவாக்கி செல்வத்தைக் கவர்ந்து மகிழ்ச்சியை உருவாக்கும். உங்கள் வீட்டின் நுழைவாயில் அல்லது உங்கள் வாழ்வரையில் அவற்றை வைக்க வேண்டும். உங்கள் நிதி அதிர்ஷ்டத்தை அதிகரிக்க உங்கள் அலுவலகத்திலோ அல்லது பணியிடத்திலோ அதனை வைக்க வேண்டும்.
பண்டைய ஃபெங் சூயி நிபுணர்களின் கருத்துப்படி, தங்கத்தால் வீட்டை அலங்கரிப்பது இதயத்தைப் பலப்படுத்தி ஆயுளை அதிகரிக்கும். நவீன உள்பூச்சு அலங்காரக் கருத்துக்கள் உங்கள் வீட்டை அபரிமிதமான ஆற்றலால் நிறைக்கும். செல்வத்தையும் வெற்றியையும் கவர்வதற்கான பெரிய சுற்றுச்சூழலை உருவாக்கும்.
தொடர்புடையது: அன்றாட வாழ்வில் தங்கம்
உங்கள் வீட்டில் ஃபெங் சூயிக்கு தங்கம் எவ்வாறு உதவ முடியும்?
-
ஃபெங் சூயியில் தங்கத்தின் துடிப்பானது அக்னியைக் குறிக்கும். இதனால் உங்கள் படுக்கை அறையில் இதமான மென்மையான ஆற்றல் கிடைக்கும். உங்களது புகைப்படங்களுக்கு பாரம்பரிய தங்க ஃப்ரேம்களை அளியுங்கள். இந்த அமைப்பை நிறைவு செய்ய சுவர் அலங்காரத்தை அதிகரியுங்கள். தங்க பார்டர் கொண்ட கண்ணாடி உங்களது தனிப்பட்ட பகுதிகளுக்கான இராஜ கம்பீரத்தை அளிக்கும்.
-
உங்களது வாழ்வரையில் தங்கத்திலான சிரிக்கும் புத்தரை வைத்திருங்கள். இதனால் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ஷ்டமும் நல்லாசியும் கிடைக்கும். உங்களது காபி மேசையில் ஒரு தங்கத்திலான அலங்காரப் பொருளையும் தங்க எம்ப்ராய்டரி வடிவத்தையும் வைத்திருங்கள்.
-
ஃபெங் சூயியில் உள்ள முக்கியமான பொருளான செல்வக் கப்பல் தங்க நாணயங்களும் தங்க கட்டிகளும் நிறைந்தது. இது செல்வத்தைக் கவர்ந்து பாதுகாக்கும்.
-
கதவுக்கு அருகில் வைக்கப்படும் தங்கத் தேரையானது செல்வத்தை சேர்க்கும் என்று சொல்லப்படுகிறது.
-
தங்க டிராகன் ‘Golden Dragon’ என்று சீனர்களால் அழைக்கப்படும் அரோவானா மீன் நல்ல அதிர்ஷ்டத்தை அளிக்கும். உங்களது வீட்டிற்கு எல்லையில்லாத செல்வத்தை அளிக்க அது உதவும்.
-
சீனர்கள் தங்க நாணயங்களை மூன்றாகவோ அல்லது ஒன்பதாகவோ சிவப்பு நாடாவில் கட்டி வைப்பார்க்ள. இதனால் இல்லங்களில் அதிர்ஷ்டமும் வளமையும் வரும் என்று நம்பப்படுகிறது.
பண்டிகைகள், நகைப் பெட்டிகள், முதலீட்டு போர்ட்ஃபோலியோக்கள் ஆகியற்றின் இன்றியமையாக அங்கம் தங்கம். ஃபெங் சூயியின் மலம் தங்கம் நமது இல்லத்தின் முக்கிய பகுதியாகவும் மாறியுள்ளது.