Published: 07 ஜூலை 2017
உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட தங்க நகைத் திட்டங்கள்
நீங்கள் தங்க நகைகளில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் சிறிய தவணைகளாக சேர்ப்பது நீங்கள் நகையை வாங்க திட்டமிடும் நாளில் அது போதுமான ஒரு பெரிய தொகையாக வளர்ந்துவிடும். பல நகைக்கடைகள் உங்களுக்காக தங்களுடைய சொந்த தங்க சேமிப்புத் திட்டங்களை கொண்டுள்ளனர்.
இந்தத் திட்டங்கள் எதை வழங்குகின்றன என்பன இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
எளிய வார்த்தைகளில் கூறுவதானால், இது நீங்கள் ஒரு வங்கியில் துவங்கும் ஒரு தொடர் வைப்பு நிதித் திட்டம் போன்றதாகும். வித்தியாசம் என்னவென்றால், உங்கள் தங்க சேமிப்புத் திட்டத்தின் முதிர்வு காலத்தில், நீங்கள் வைப்புக் கணக்கு துவங்கியிருந்த நகைக் கடைக்காரரிடம் இருந்து உங்கள் பணத்தை நீங்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்.
திட்டத்தின் காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை செலுத்தும்படி கேட்டுக்கொள்வதே இந்த திட்டத்தின் மிகவும் பொதுவான தன்மையாகும். பெரும்பாலான நகைக் கடைக்காரர்கள் தங்களின் கல்லாவிலிருந்து உங்கள் கணக்கில் கூடுதல் மாத தவணையை செலுத்துகிறார்கள்.
இவ்விதத்தில் சேரும் பணத்தை நீங்கள் நகை வாங்க முடிவு செய்த நாளின் தங்க விலைக்கே நகைக் கடைக்காரரிடம் தங்கம் வாங்குவதற்கு பயன்படுத்த வேண்டும்.
சில நகைக் கடைக்காரர்கள் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு தங்க நாணயங்களை வாங்க அனுமதிப்பார்கள். ஆனால் இந்தத் திட்டங்களில் நீங்கள் சேர்க்கும் பணத்தை ரொக்க பணமாக மீட்க முடியாது, இந்தத் திட்டங்களில் ஒவ்வொன்றும் சரியானதை முன்னிலைப்படுத்துகின்றன.
பெரும்பாலான நகைக் கடைக்காரர்கள் செய்கூலி மற்றும் சேதாரத்திற்கு தள்ளுபடி கொடுக்கின்றனர், சிலர் முற்றிலுமாக தள்ளுபடி செய்கின்றனர், மேலும் சிலர் மதிப்பு கூட்டு வரிகளையும் (VAT) தள்ளுபடி செய்கின்றனர்.
நகைக் கடைக்காரர்கள் நீங்கள் மாதந்தோறும் செலுத்தும் பணத்தின் அளவிற்கு தங்கத்தை சேர்க்கும் விருப்பத்தையும் அனுமதிப்பது இந்த திட்டத்தின் மற்றொரு வகையாகும்.
எனவே, நீங்கள் ரூ. 1000 தவணை செலுத்துவதாகவும் மற்றும் நீங்கள் மாதத் தவணை செலுத்தும் நாளில் தங்கத்தின் விலை ரூ. 2500 என்றிருப்பதாகவும் வைத்துக் கொண்டால், நீங்கள் அந்த மாதத்தில் ரூ. 1000/2500 - 0.4 கிராம் தங்கம் சேர்த்திருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இதேபோலவே பிற மாதத்திலும் உங்கள் பணம் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். இது ஒரு வகையான தங்க எஸ்.ஐ.பி (முறையான முதலீட்டுத் திட்டம்) ஆக மாறிவிடும்.
சில நகைக் கடைக்காரர்கள் நிலையான எடை திட்டங்களை வழங்குகின்றனர். ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் எவ்வளவு தங்கம் சேர்க்க வேண்டுமென்பது குறித்து திட்டத்தின் ஆரம்பத்தில் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
அதன்பின் தங்கத்தின் எடைக்கு அந்த நாளில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் முடிவில், இவ்விதத்தில் சேர்ந்த தங்கத்தை மீட்டுக் கொள்ளலாம், வழக்கம் போல நகைகளாகவும் மீட்டுக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்திலும், பொதுவாக செய்கூலி, சேதாரம் மற்றும் மதிப்புக் கூட்டு வரி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
நீங்கள் எதை உறுதிப்படுத்த வேண்டும்
நீங்கள் நன்கு அறிந்த நகைக் கடைக்காரரிடம் தான் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நிறுவனச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட் போதிலும், பொது நிறுவனங்களின் திட்டங்கள் உட்பட அனைத்து திட்டங்களும் ஏற்கனவே உள்ள “வைப்புத் தொகை” விதிமுறைகளின் படி தகுதி பெறுவதில்லை. எனவே, நகைக் கடைக்காரரின் நற்பெயர் மற்றும் கடந்தகால பதிவு மட்டுமே சலுகை குறித்த பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது.
நன்கு அறியப்பட்ட நகைக் கடைக்காரரிடம் நீங்கள் வாங்குவது அவரிடம் அதிகமான நகை வாங்க உங்களுக்கு உதவும்.
சலுகைகளில் சிறிய மாறுபாடுகள்/நன்மைகள் இருக்கும் என்பதனால் திட்டத்தை நீங்கள் முழுமையாக புரிந்துகொண்டீர்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். திட்டத்தில் இருந்து வெளியேறும் பிரிவுகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும், ஒருவேளை நீங்கள் முதிர்வுக்கு முன்பே திட்டத்தை விட்டு வெளியேற விரும்பினால், அது உங்களுக்கு உதவும். வாக்குறுதியளித்த தூய்மையை உறுதிப்படுத்த எப்போதும் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே வாங்குங்கள்.