Published: 04 ஆக 2017

என்றும் நிலைத்திருக்கும் பந்தத்தைக் கொண்டாடுவதற்கு தங்க இராக்கி

Personalised Gold Rakhi For Perfect Bond

ஒவ்வோர் ஆண்டும் மாபெரும் கோலாகலத்துடன் இரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இலட்சக்கணக்கான சகோதரர்களும் சகோதரிகளும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். வாழ்நாள் முழுக்க நீடித்திருக்கும் ஆதரவிற்கும் அன்பிற்குமான சத்தியம் செய்யப்பட்டபோதும், சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்குக் கட்டும் இராக்கி கயிறுகள் சில நாட்களே நீடித்திருக்கும்.

சாதாரண இராக்கியை விட என்றும் நிலைத்திருக்கும் இராக்கி எது என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு தங்க இராக்கி!

அதனை தனித்துவமாக்குங்கள்

உங்களது சொந்த இராக்கியை நீங்களே வடிவமைக்கலாம் என்று பல்வேறு நகைக்கடைக்காரர்கள் உங்களை விட்டுவிடுவார்கள். அல்லது ஏற்கெனவே இருக்கும் மாதிரியில் உங்களது சிறப்பம்சத்தை கலக்க விரும்புவார்கள். பெயர்கள், முன்னெழுத்துக்கள், குறியீடுகள் என்று உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுங்கள். உங்களது தம்பிக்கு நீங்கள் கட்டும் இராக்கி கயிற்றில் சிறிய தங்க டெடி பேர் பொம்பை இருக்கலாம். அல்லது உங்களது சகோதரனின் பெயர் பொறித்த தங்க நாணயம் இருக்கலாம்.

இந்த இராக்கிக்கள் நவநாகரிகமான ஆபரணமாக மட்டுமல்ல, ஒரு முதலீடாகவும் உங்கள் சகோதரருக்கு இருக்கும். தங்கத்தை எந்த வடிவத்தில் அளித்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதன் மதிப்பு அதிகரிக்கும். உங்களது பாரம்பரியத்தின் அங்கமாகவும் அது மாறி தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படும். மேலும், ராக்கிக்கு தனிப்பட்ட வடிவங்கள் அளித்தால் நினைவுகள் கலைப்படைப்பாக உருவெடுக்கும்!

வடிவங்கள்

பல்வேறு வடிவங்களில் தங்க இராக்கிக்கள் கிடைக்கின்றன. பல்வேறு அடுக்குகள் கொண்ட தங்க நூல்களாகவோ, அல்லது தங்க சங்கிலிகளாகவோ அல்லது அடர்ந்த கத்தரிப்பூ நிறம் அல்லது சிவப்பு நிறமாகவோ இது இருக்கலாம். மத்தியில் ஓம் அல்லது கணேசா என்று பொறிக்கப்பட்ட இராக்கிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதனால் ஓர் ஆன்மிக தொடுதல் கிடைக்கும்.

Designer Gold Rakhi

தங்க முலாம் பூசப்பட்ட அல்லது திடமான இராக்கியை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஓம், திரிசூலம் ஆகிய முத்திரைகள் பெற்ற நாணயங்களையோ கடவுள்கள் மற்றும் அம்மன்களின் உருவம் பொறித்த நாணயங்களையோ அதில் இணைக்கலாம்.

Designer Gold Rakhi 2

ஒரு நட்சத்திரம், ஒரு பூ வடிவம் அல்லது உங்கள் சகோதரரின் பெயர் அல்லது பிறந்தநாள் பொறிக்கப்பட்ட அர்த்தமுள்ள ஒரு கருத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். எந்த பண்டிகையிலும் அணிவதற்கேற்ற அணிகலம் தங்க பிரேஸ்லெட்டால் ஆன இராக்கியாகும். ஒரு சங்கிலி வடிவத்தில் இருந்த தங்க இராக்கி அல்லது ஒரு கயிறானது பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைத்த வடிவமாகும்.

Gold Bracelet Rakhi

எங்கே வாங்குவது

உங்களுக்கு மிகவும் அருகாமையில் உள்ள நம்பிக்கையான நகைக்கடையில் நீங்கள் தங்க இராக்கியை வாங்கலாம். நீங்கள் ஆன்லைனில் வாங்க விரும்பினால், மற்ற வாடிக்கையாளர்கள் அளித்துள்ள கருத்தோட்டங்களை (reviews )படித்துவிட்டு வாங்கவும். நீளம், தூய்மை, பயன்படுத்தப்பட்டுள்ள தங்கத்தின் அளவு, தங்கத்தின் நிறம் ஆகிய சிறப்பு அம்சங்களை (specifications) அறிந்துகொண்டு வாங்கவும். திடமான தங்க இராக்கியை நீங்கள் வாங்குவதென்றால், அந்த இராக்கி ஹால்மார்க் தங்கத்தினால் ஆனது என்பதை உறுதி செய்துகொள்ளவும். தொடர்புடையது.தங்கம் வாங்குவதற்கு முன்பு அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படை சொற்றொடர்கள்

Related: Basic Terms to know Before Buying Gold

உங்களுக்கும் உங்கள் சகோதரர்க்கும் இரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!