Published: 10 ஆக 2017
தஞ்சாவூர் ஓவியங்களில் தங்கம்: கலை உண்மையிலேயே விலை மதிப்பற்றதாக இருக்கும்போது
நகை என்பதை விட பொன்னான கலை என்பதில் நிறைய அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்திற்கு செல்லுங்கள். அங்குள்ள மகத்துவமான தஞ்சாவூர் ஓவியங்களைக் கண்டு களியுங்கள்.
அவை யாவை?
தஞ்சாவூர் ஓவியங்கள் ஒரு பிரபலமான கலை வடிவம். இவை தென்னிந்தியாவில் தோன்றின. 16ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்த ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை. சோழப் பேரரசர்களின் காலத்தில் இவை தோன்றின. இதில் தங்கம் பயன்படுவதால் இது மிகவும் பிரபலம். தமிழ்நாட்டில் மராத்தியர்கள் படையெடுத்தபோது பல்வேறு ஓவியர்களும் கலைஞர்களும் அங்கே இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் ஆட்சியின் கீழ் இந்த ஓவிய முறை தழைத்தது.
இந்த விதமான ஓவியத்தில் தங்கமும் விலைமதிப்புள்ள கற்களும் பயன்படுத்தப்பட்டு அதன் வடிவத்திற்கு எழில் சேர்த்தன.
ஒவ்வொரு ஓவியமும் ஒரு கதையை சொல்லும். பொதுவாக இந்தக் கதைகள், இந்து கடவுள், அம்மன்கள், துறவிகள் ஆகியோரைப் பற்றியதாக இருக்கும்.
பண்டைய காலத்தில், தஞ்சாவூர் ஓவியங்கள் இருண்ட கோவில்களில் சக்கரவர்த்திகளால் வைக்கப்பட்டிருந்தன. மங்கலான இடத்தில், இந்த ஓவியத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கமானது அதனை ஒளிரச் செய்து காட்டும்.
தஞ்சாவூர் ஓவியங்கள் எவ்வாறு உருவாகின்றன?
தஞ்சாவூர் ஓவியம் முழுவதும் கைகளால் வரையப்படுவது. இதில் எந்த இயந்திரமும் பயன்படுவதில்லை.
ஒரு தஞ்சாவூர் ஓவியத்தை உருவாக்க, அதன் உருவப்படம் முதலில் ஒரு துணியில் வரையப்படும்.
அதன் பின்னர் இந்த துணியானது ஒரு மரச்சட்டத்தில் ஒட்டப்படும். வரலாற்று ரீதியாக இந்த மரச்சட்டம் பலா மரத்திலிருந்து உருவாக்கப்படும். இந்நாட்களில் மாற்றாக ப்ளைவுட் பயன்படுகிறது.
இந்த ஓவியத்தாள் மீது சுண்ணாம்புக்கல்லால் ஆன பூச்சு பூசப்படுகிறது. இது இணைக்கும் ஊடகமாக செயல்படுகிறது.
காய்ந்த பிறகு, இந்த ஓவியத்தை சுற்றி அடர் பழுப்பு நிறமோ அல்லது கறுப்பு வண்ணமோ பூசப்படும். அதன் பின்னர் பிரகாசமான நிறங்களால் வண்ணம் தீட்டப்படும்.
இந்த ஓவியங்களில் நுட்பமான தூரிகையால் வளைவுகள் தீட்டப்படுவதுடன் வணங்கக்கூடிய உருவங்களும் உள்ளன. இந்த ஓவியத்தின் வாழ்விற்கும் ஆழமான தன்மைக்கும் தங்கம் உயிரூட்டுகிறது.
கி.மு.2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.7ஆம் நூற்றாண்டு வரை இந்த ஓவியத்தில் உள்ள தங்கம் பக்தி உணர்வை ஈர்த்தது.
பண்டைய நாட்களில் காய்கறி மற்றும் தாதுப் பொருட்களிலிருந்து கிடைத்த சாயம் ஓவியத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் இந்த ஓவியத்தின் பல்வேறு பாகங்களுக்கென பிரத்தியேகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக,
- பின்னணி நிறங்கள் பொதுவாக சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் இருக்கும்.
- பகவான் விஷ்ணு நீல நிறத்திலும் பகவான் நடராஜர் வெள்ளை நிறத்திலும் வண்ணம் தீட்டப்பட்டிருப்பார்
- அம்மன்களுக்கு வண்ணம் தீட்ட மஞ்சள் நிறம் பயன்படுத்தப்பட்டது.
- கதைக்கேற்றபடி வானம் நீல நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.
- கடவுள்களும் அம்மன்களும் அணிந்திருந்த ஆடைகளும் ஆபரணங்களும் சுத்தமான தங்கத்தில் இருந்தன.
இந்த ஓவியத்தின் மீது தங்கம், விலை உயர்ந்த கற்கள், முத்துக்கள், கண்ணாடி மணிகள், மாணிக்கங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருந்தன.
இதனால் ஓவியத்திற்கு முப்பரிமாண விளைவு கிடைத்தது .
பொதுவாக இந்த ஓவியங்களில் தங்கத் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில் சுத்தமான தங்க பால் அல்லது தங்க தூசி பயன்படுத்தப்படுகிறது.
சுத்தமான தங்கம் பயன்படுத்தப்படும்போது அந்த ஓவியம் அற்புதமான காட்சி விருந்தாக உருவாகிறது. தங்கத்தின் பயன்பாடு இந்த ஓவியத்தில் அதிகமாக இருப்பதால், இந்த ஓவியம் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.
இந்த ஓவியத்தின் பளபளப்பு 80-100 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஏனெனில் சுத்தமான தங்கம் எப்போதும் மங்குவதில்லை.
தஞ்சாவூர் ஓவியர்கள் அதிகம் விரும்பும் கருத்து, பால கிருஷ்ணனின் உருவம். பால கிருஷ்ணன் தங்க சிம்மானத்தில் கையில் வெண்ணெய் பானையுடன் அமர்ந்திருப்பது பல்வேறு ஓவியர்களையும் கவர்ந்த கருத்து. இந்த ஓவியம் எண்ணற்ற ஆபரணங்களைப் பெற்றது. இந்த ஓவியத்தில் நகைகள், துணி மற்றும் கிரீடம் ஆகியவை பொன்னால் செய்யப்பட்டிருக்கும்.
தஞ்சாவூர் ஓவியத்தின் வடிவங்கள்:
ஒவ்வொரு பிராந்தியத்திற்கென தஞ்சாவூர் ஓவியத்தில் பல்வேறு வடிவங்கள் உள்ளன. அவையாவன:
-
செட்டிநாட்டு தஞ்சாவூர் ஓவியம்
- தஞ்சையில் துவங்கியது
- கி.பி.1600 வரை பழக்கத்தில் இருந்தது.
- பிரகாசமான வண்ணங்களும் அடர்த்தியான கோடுகளும் கொண்டது
-
மைசூர் தஞ்சாவூர் ஓவியம்
- மைசூரில் துவங்கியது.
- நுணக்கமான கோடுகள், நுட்பமான தூரிகை தீண்டல்கள், கடவுள்கள் மற்றும் அம்மன்களின் கண்ணியமான உருவங்கள் ஆகியவை இதன் அம்சம். பிரகாசமான வண்ணங்கள் பளபளப்பான தங்க இலைகள் ஆகியவை இந்த ஓவியத்தை எடுத்துக்காட்டப் பயன்படுத்தப்படும்.
இன்றும் இந்த ஓவியங்கள் அப்படியேதான் உள்ளன. அனால் இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நவீன காலத்திற்கேற்ப தரம் உயர்ந்துள்ளது.7 தஞ்சாவூர் கலை வடிவங்கள் பல்வேறு பிரந்தியங்களில் தனக்கென பிரத்தியேகமான வடிவம் பெற்று உள்ளன.