Published: 05 செப் 2017
இந்தியாவின் தங்க சிம்மாசனங்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், நதியின் நீரோட்டத்தில் பளபளப்பான மஞ்சள் நிறத்தில் ஒரு பொருளை ஒரு குழந்தை கண்டெடுத்தது, அவ்வாறுதான் "தங்கம்" என்றழைக்கப்படும் ஒரு அழகிய உலோகமானது மனிதகுலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது மஞ்சள் உலோகத்தின் தோற்றத்தின் பின்னால் உள்ள கதைகளில் ஒன்றாகும். இருப்பினும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நாகரிகங்கள் மற்றும் கலாசாரங்கள் முழுவதும் கடவுள்கள், ஆற்றல் மற்றும் செல்வம் ஆகியவற்றோடு தொடர்புடைய உலோகம் என்பது நிச்சயம் நமக்குத் தெரியும்.
பணமும் பொருளாதாரமும் கண்டுபிடிக்கப்படாத பண்டைய காலங்களில் தங்கம் ஆனது பெருமை மற்றும் செல்வத்தை வெளிக்காட்டியது. இது ஒரு உலோகமாக மட்டுமல்லாமல், செல்வச்செழிப்பான ஆட்சியாளர்களால் தங்கள் ஆடைகளை அழகுபடுத்தும் பொருளாக அல்லது ஆபரணங்களாக அணிய விரும்பும் ஒரு விருப்பமான பொருளாக இருந்தது. அரசகுல ஆட்சியாளர்கள் தங்களுடைய கிரீடங்கள் மற்றும் கம்பீரமான சிம்மாசனங்களை முற்றிலும் தங்கத்தால் கட்டமைத்தார்கள்.
இந்திய நாடானது "சோனே கி சிடியா", தங்கப் பறவையின் நிலம் என பிரபலமாக அறியப்பட்டது. இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்கள், இன்றைய காலகட்டத்தில் நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு விலைமதிப்பற்ற உலோகத்தை வைத்திருந்தனர். இந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய சிம்மாசனங்களை தங்கத்தால் செய்திருந்தனர், எனவே இன்றும் உலகம் அதை நினைவுகூர்ந்து, மகிழும் வகையில் அவை கவர்ச்சிகரமானதாக இருந்தது. மேலும், அவை இந்தியாவின் அழகு மற்றும் செல்வத்தின் அடையாளமாக காட்டப்படுகிறது. இந்தக் கட்டுரையானது, உலகம் இன்னும் ஆச்சரியமாகப் பார்க்கும் புகழ்பெற்ற சிம்மாசனங்கள் பற்றியது ஆகும்!
முகலாயர்களுக்கு சொந்தமான மயில் சிம்மாசனம்:தற்போது தகவல்களின்படி, இந்த சிம்மாசனமானது தெஹ்ரானில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. ஷாஜகானால் செய்யப்பட்ட இந்த சிம்மாசனம் முதலில் முகலாயர்களுக்கு சொந்தமாக இருந்தது. அந்தக் காலத்தில் 90 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சிம்மாசனம் கொண்டிருந்தது.
மைசூரின் தங்க சிம்மாசனம்இந்த அழகானது மைசூர் உடையார் வம்சத்துக்கு சொந்தமானது ஆகும். இது இந்தியா முழுவதும் உள்ள ஆட்சியாளர்களின் சிம்மாசனங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த சிம்மாசனமானது ஹஸ்தினாபூரை சேர்ந்த பாண்டவர்களுக்கு சொந்தமானது என்று வரலாறு சொல்கிறது. கிலோக்கணக்கிலான தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இந்த சிம்மாசனத்தில், மூன்று தெய்வங்கள், யானை, குதிரைகள் மற்றும் பெண்கள் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது; இது உண்மையில் பிரம்மாண்டமான ஒன்றாகும்.
இந்த சிம்மாசனமானது சின்னடா சிம்மாசனம் அல்லது இரத்தின சிம்மாசனம் (கன்னட மொழியில் தங்க சிம்மாசனம்) என்று அழைக்கப்படுகிறது. தசரா திருநாளின்பொழுது, இந்த சிம்மாசனம் பொது மக்களுக்கு காட்சிக்கு வைக்கப்படுகிறது.
மகாராஜா ரஞ்சித் சிங்கின் தங்க சிம்மாசனம்இந்த சிம்மாசனம் தற்போது இலண்டன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் செழிப்பான தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த கண்கவர் சிம்மாசனத்தின் வடிவமைப்பானது தாமரை வடிவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஒரு புலி வடிவத்தில் இருந்த திப்பு சுல்தானின் அரச சிம்மாசனம்இந்தக் கலை வடிவமானது, தங்கத்தால் ஜொலிக்கும் உண்மையான புலியின் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் மிகவும் விலையுயர்ந்த கற்கள் அதில் பதிக்கப்பட்டிருந்தது. சுமார் 8 அடி உயரமும் 11 அடி அகலமும் கொண்ட இந்த கம்பீரமான சிம்மாசனம், பிரிட்டிஷ் படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது.