Published: 20 பிப் 2018
ஜிஎஸ்டி: சாலையில் ஒரு புடைப்பு?

ஜிஎஸ்டி-இன் புதிய வரி திட்டவீத அளவுமுறை அல்லது அமைப்பு ஆனது நகைத் தொழில்துறையை ஒரு குழப்பத்தில் தள்ளியுள்ளது. நகைத் தொழில்துறையானது ஒழுங்குபடுத்தப்படாத பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரு தொழிலாகும். இதில், இந்தப் புதிய வரி திட்டவீத அளவுமுறையானது ஏராளமான இணக்க பிரச்சினைகளைக் கொண்டுவந்துள்ளபடியால், இது, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் அன்றாட பணி வாழ்க்கையில் ஒரு தடையாக இருப்பதாக நிரூபித்துள்ளது. வேறுவகையில் சொல்வதெனில், நுணுக்கமான தங்க நகையில் நுண்ணிய அழகு வேலைப்பாடுகளைச் செய்வதில் கலைநயமிக்கக் கைவினைஞர்கள் டிஜிட்டல் கையொப்பத்தின் தேவையால் குழப்பத்தில் விழிபிதுங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது - அவர்கள் ஜிஎஸ்டி வரிக்கு இணக்கமாக இருக்க வேண்டும் எனில், இந்த டிஜிட்டல் கையொப்பம் தவிர்க்க முடியாததாக உள்ளது.
இந்திய தங்கம், மணிக்கற்கள், வைர நகை சந்தையில் கிட்டத்தட்ட 75% அளவு ஒழுங்கமைக்கப்படாதது. இந்த ஒழுங்கமைக்கப்படாத சதவீதத்தினர், மிகச்சிறிய தொழில் முனைவோர்களாக இருப்பதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிக்கைகளின்படி, ஜிஎஸ்டி-இன் கீழ், ரூ. 20 இலட்சம் முதல் ரூ. 75 இலட்சம் வரையிலான விற்றுமுதல் ஆனது ஒருங்கு சேர்க்கப்பட்ட பட்டியலின் கீழ் வரும், அதே வேளையில் ரூ. 75 இலட்சத்திற்கும் அப்பால் உள்ள விற்றுமுதல் ஆனது முழுமையான நிகரவரியின் கீழ் வரும்.
இந்தச் சூழ்நிலையில், தொழில்துறை ஒரு அமைப்பாகப் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க நாடுகிறது:
- அரசு இந்தக் கலைஞர்களின் / பொற்கொல்லர்களின் திறன்களைத் தரமுயர்த்துவதற்கு நகை தொழில்துறைக்கு உதவுவதற்கு, எளிமையாகச் சொல்வதெனில் அவர்களை ஜிஎஸ்டி-க்கு இணக்கமானவர்களாக ஆக்குவதற்கு எவ்வாறு முன்மொழிகிறது?
- அரசு அந்தந்த ஜிஎஸ்டி சட்டப்பொறுப்புகள் தெரியவரும் வகையில் ஒவ்வொரு தனியுருவின் - அதாவது கைவினைஞர், சில்லறை விற்பனையாளர், மொத்த விற்பனையாளர் ஆகியோரின் பல்வேறு பணிகளின் மற்றும் இடநிலைகளின் வரையறையை நகை மதிப்புச் சங்கிலியில் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
- தங்கம் மற்றும் நகைகள் வர்த்தகச் சேவையுறுநர்கள் பெரும்பாலும் பண்டமாற்று பாதையை எடுக்கின்றனர் மற்றும் தமது தங்கத்தின் ஒரு பகுதியுடன் செய்கூலியை செலுத்துகின்றனர். இந்தப் பரிமாற்றங்களில் வரி எப்படி கணக்கிடப்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை?
மஞ்சள் உலோகம் மீது இந்தியர்கள் கொண்டுள்ள அன்பு மற்றும் ஜிஎஸ்டி விகிதம் 3% மற்றும் 10% இறக்குமதி தீர்வை ஆகியவற்றின் காரணமாக, இது தங்கம் கடத்தலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே கவலைகள் உள்ளன, ஏனெனில் விற்பவர் மற்றும் வாங்குபவர் ஆகிய இருவரும் அநேகமாக ஒரு ரசீது இல்லாமல் பரிமாற்றம் செய்வதற்குத் தூண்டப்படக்கூடும். அரசாங்கம் வரி செலுத்தாமல் தப்பிக்கத் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு வழிக்கான அணுகலை எதிர்பாராத விதமாகக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு சில நகை வணிகர்களைப் பொறுத்தவரை இதிலுள்ள ஒரே சாதகமான அம்சம் என்னவெனில், ஜிஎஸ்டி-ஐ நிறைவேற்றுவதால் சில மாநிலங்களால் அனுபவிக்கப்படும் வரிச் சாதகம் ஒழிக்கப்படும் என்பதாகும். ஏனெனில் இது மண்டல அளவில் சிறப்புத்தொழில்திறன் பெற்ற நகை வணிகர்கள் குடிப்பெயர்வதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும்.