Published: 17 ஆக 2017
நீங்கள் இனிமேல் அணியப்போவதில்லை என்று கருதும தங்க நகைகள் உள்ளனவா? அவற்றை என்ன செய்ய முடியும் என்பது குறித்த 5 விஷயங்கள் இங்கே.
நீங்கள விடை கொடுகக வேண்டும் என்று பரிசீலனை செய்யும் தங்க நகைகள் உங்கள் வீட்டில் உள்ளனவா? அவற்றை விற்று பணமாக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மையிலேயே சிறந்த தேர்வா?
நீங்கள் உங்கள் தங்க நகையை விற்றால் நீங்கள் எதிர்பார்த்த தொகை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம் . ஏனெனில் நீங்கள் விற்கும்போது செய்கூலிகள் குறைத்துக் கொள்ளப்படும். வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கும்.
அப்படி என்றால், மற்ற மாதிரித் தேர்வுகள் என்ன? நாம் சற்று காண்போம்.
-
தங்க நகையை மறுவார்ப்பு செய்யவும்
உங்களது ஆளுமைகோ அல்லது உங்களது உடைத் தேர்வுகோ துணையாக உங்கள் தற்போதைய தங்க நகை இல்லை என்றால், அதனை நவநாகரிகம் உடையதாகவும் தனித்துவமானதாகவும் மாற்ற நீங்கள் அதனை வடிவமைக்கலாம். எடுத்துககாட்டாக, பாரம்பரிய தங்க காதனிகள் நவநாகரிகமான மாட்டல்களுடன் இணைக்கப்படலாம்.
பல்வேறு அடுக்குக் கொண்ட நெக்லேஸ்கள் ஒற்றை தங்க சங்கிலாக பிரிக்கப்படலாம். மோதிரங்களை ஹாத்ஃபூல்களாக மாற்றலாம். இரட்டை அடுக்குக் கொண்ட காது வளையங்கள் இரண்டு ஜோடிகளாக மாற்றப்படலாம். இதர.
-
வண்ண தங்கத்துடன் தங்கம் தங்க நகைகளை பரிமாறிக் கொள்ளுங்கள்
சுத்தமான தங்கமானது அடர் மஞ்சள் நிறம்அல்லது சிவப்பு மஞ்சள் நிறத்தினால் ஆனது. அதில் வேறுபட்ட பார்வையோ சாயலோ தேவை என்று நினைத்தால், உங்கள் தங்க நகைகளை மாற்றி மற்ற உலோகங்களுடன் கலந்த தங்கமாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கலவைகள் பல்வேறு விகிதங்களில் இருக்கும். வெள்ளை, சிவப்பு மற்றும் பச்சை நிற தங்க ஆபரணங்களைப் பெற உங்கள் நகைக்கடைக்காரர் உங்களுக்கு உதவுவார். இவை தனித்துவமாக இருக்கும். பல்வேறு வடிவங்களில் உங்களுக்கு உதவும்.
-
தங்கத்தைப் பணமாக்குங்கள்
உங்களது தங்கம் வங்கி பெட்கத்தில் சும்மா இருப்பதற்காக அதனைப் பராமரிக்கும் கட்டணத்தையும் நீங்கள் செலுத்த ◌ே வ்ணடியிருக்கும். அதற்குப் பதிலாக அதனை தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் (Gold Monetisation Scheme). முதலீடு செய்யுங்கள். இந்தத் திட்டத்தில் நகைகள், நாணயங்கள், தங்கக் கட்டிகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். அதிலிருந்து வட்டி பெறலாம்.
-
தங்கத்தை நாணயங்களாக உருக்கவும்
உங்கள் தங்க நகை உருக்கப்டலாம். இப்படிச் செய்வதன் மூலம் நாணயங்கள் கொண்ட தங்க நெக்லெசாக உருப் பெறலாம். மாற்றாக, பதிலுக்கு அளிக்கப்பட்ட நாணயங்கள் சேமிக்கப்படலாம். இவை மதிப்பிற்குரிய பரிசுப்பொருட்களாகவோ, வம்சாவழியாக பரிமாறப்படும சொத்தாகவோ மாறலாம். காலப்போக்கில் இவற்றை பணமாக்கலாம்.
தங்கம் எல்லா வகைகளிலும் மின்னுகிறது. தங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக நலன்களில் ஏதாவது ஒன்று உங்களுக்கு உதவவில்லை என்றால், நீங்கள் வேறொரு மாதிரியைத் தேர்ந்தெடுக்கலாம். உங்களது தங்கத்தை நீங்கள் விற்க வேண்டும் என்று நினைத்தால், அதன் தற்போதைய சந்தை மதிப்பை கவனிக்க வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள். அதன் கலைத்துவம் முடிந்த பிறகு எஞ்சிய பகுதிய உங்களுக்கு கிடைக்கும். நகை வடிவமைக்கும் செய்கூலி குறைத்துக்கொள்ளப்படும். தங்கத்தின் தூய்மையைப் பொறத்து உங்களுக்கு பணம் கிடைக்கும். நீங்கள் பயன்படுத்தாத தங்கத்தை என்ன செய்வது என்று முடிவெடுப்பதில் உங்களுக்குத் தெளிவில்லை எனில் மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளை பரிசீலனை செய்யவும்.