Published: 04 செப் 2017
பண்டைய ரோமானியர்கள் இந்தியாவை தங்க வளம் மிக்கதாக எவ்வாறு விட்டுச் சென்றார்கள்
இந்தியாவின் கலைகள், வாசனைப்பொருட்கள், நகைகள் மற்றும் அழகாக நெய்யப்பட்ட ஆடைகள் போன்ற அழகான ஆடம்பர இந்தியப் பொருட்களை பழங்கால ரோமானியர்கள் விரும்பினார்கள். ஒரு ரோமானிய எழுத்தாளரும், இயற்கை தத்துவஞானியுமான பிளின்னி என்பவர், இந்திய ஆடம்பரப் பொருட்கள் மீது ரோமானியர்கள் அடிமையாக இருந்ததைக் குறித்து எழுதியுள்ளார். கி.பி 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அவரது நூல்கள், ரோமில் இருந்து இந்தியாவினுள் தங்கம் குவிந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
தங்கம் போன்ற நீண்டகால மதிப்பு இல்லாத வாசனைப் பொருட்கள், மஸ்லின், பட்டு மற்றும் இதர விலையுயர்ந்த ஆடம்பர பொருட்களுக்கு பதிலாக, ரோமில் இருந்து அதிகளவிலான தங்கம் தென்னிந்தியாவுக்கு செல்வது குறித்து பிளின்னி புலம்பியுள்ளதாக, தனது புத்தகமான இந்திய நிலப்பிரபுத்துவம் (1965) என்பதில் ஆர்.எஸ்.ஷர்மா விளக்குகிறார். ஒப்பிட முடியாத அளவுக்கு மதிப்புமிக்கதாக இருந்த ரோம் அளிக்கும் தங்கத்துடன் ஒப்பிடுகையில், தங்கத்திற்குப் பதிலாக ஏற்றுமதி செய்யப்படும் இந்திய ஏற்றுமதிகளை "வீண் ஆடம்பரங்கள்" என்று பிளின்னி நம்பினார்.
அந்த நேரத்தில், ரோமானியர்கள் தங்கத்தை அதிக மதிப்பில் வைத்திருந்தனர், அதை ஒரு பணமாக மட்டுமல்லாமல், அதன் தகடாக்கும்தன்மை மற்றும் வளையும்தன்மை ஆகியவற்றுக்காகவும், ஆடம்பரப் பொருளாகவும் அதை அங்கீகரித்தனர். அரச குல ஆடைகளில் தங்கம் எவ்வாறு நெய்யப்பட்டிருந்தது என்பதைப் போன்ற தங்கத்தின் உயர் மதிப்பு பற்றிய விவரங்களை பிளின்னி எழுதியிருந்தாலும், தங்கத்தின் மீது பேராசையை அவர் தொடர்ந்து விமர்சித்தார் என்று, தனது வரலாற்று புத்தகமான ‘கலை மற்றும் சமுதாயம் குறித்து பிளின்னி: கலை வரலாறு பற்றிய எல்டர் பிளின்னியின் அத்தியாயங்கள்' என்பதில் ஜேக்கப் இசகெர் குறிப்பிட்டுள்ளார்: "இந்தியா, சீனா மற்றும் அரேபிய தீபகற்பம் ஆகியவை ஆண்டுதோறும் எங்களின் சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு நூறு மில்லியன் செஸ்டர்களை எடுத்துக்கொள்கின்றனர்: இது எங்களின் ஆடம்பரங்களும், பெண்களும் எங்களுக்கு ஏற்படுத்தும் செலவாகும். இந்த இறக்குமதிகளில் எத்தனை சதவிகிதங்களானது, கடவுள்களின் தியாகங்களுக்கும் அல்லது இறந்தவர்களின் ஆவிகளுக்கும் தேவை?" - பிளின்னி. ஹிஸ்டோரியா நேச்சுரே, 12.41.84.
தமிழ் சங்கத்தைச் சேர்ந்த பண்டைய இந்திய இலக்கியங்களும் ரோமானிய வணிகர்கள் குறித்துக் குறிப்பிடுகிறது. "உலகின் கப்பல் தொழில் குறித்த ஒரு குறுகிய வரலாறு" என்ற புத்தகத்தில் சார்லஸ் எர்னஸ்ட் ஃபாய்லே என்பவர் சங்கம் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க வகையில் விவரிக்கிறார்: "யவனர்களின் அழகாக கட்டப்பட்ட கப்பல்களானது தங்கத்துடன் வந்து, மிளகுகள் நிரப்பிக்கொண்டு சென்றது, முசிறியில் ஒரே சத்தமாக இருந்தது."
பார்பாரிக்கம் (நவீன கராச்சி), பரூச் (குஜராத்), தென்னிந்தியாவில் முசிறி மற்றும் அரிக்கமேடு ஆகியவை முக்கிய வர்த்தக மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன. இங்கு ரோமானியர்களின் தங்கம் அதிக அளவில் தரையிறக்கப்பட்டது, அவற்றில் பெரும்பாலானவை அந்தப் பகுதிகளில் கோவில்களில் இன்னமும் இருக்கிறது.