Published: 08 ஆக 2017
நீங்கள் கோவிலுக்கு அளிக்கும் தங்க நன்கொடைகளுக்கு என்ன கணக்கு?
கடவுள்களை வழிபடுவதில் பல்வேறு நூற்றாண்டுகளாக இந்தியர்கள் இறை வழிபாட்டையும் தாண்டி பயணித்துள்ளார்கள். நாம் நமது கடவுள்களிடம் எவ்வளவு அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்று காட்டுவதற்காக மாபெரும் கோலாகலங்களுடன் திருவிழாக்களும் சடங்குகளும் கொண்டாடப்படுகின்றன. சுவையான உணவு, மலர் வளையங்கள் ஆகியவற்றுடன் இந்த கொண்டாட்டங்களில் மற்றொரு பொருளுக்கும் முக்கிய இடம் உண்டு. அவை கோவில்களுக்கு அளிக்கப்படும் தங்க நன்கொடைகள். இந்தியக் கோவில்கள் 2000லிருந்து 4000 டன்கள் தங்கம் வரை பெற்றுள்ளது என்ற உலக தங்க கவுன்சில் கணக்கிட்டுள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை நன்கொடைகள். இந்த தங்கம் எங்கு சேமிக்கப்பட்டுள்ளது மற்றும் இவற்றில் பெரும்பகுதியை வைத்திருப்பவர் யார் என்பது குறித்த ஒரு பார்வை.
-
பத்மநாபசாமி கோவில், கேரளா (Padmanabhaswamy Temple, Kerala)
நாட்டின் பழமையான கோவில்களுன் ஒன்றான இந்த பகவான் விஷ்ணு ஆலயம் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. உலகின் பணக்கார கோவில்களுள் இது ஒன்று. 2011ஆம் ஆண்டில் ரூ.1.2 டில்லியன் மதிப்புள்ள ஆபரணங்கள் பல்வேறு விலை உயர்ந்த உலோகங்கள், கற்கள், ஆகியவை ஐந்து இரகசிய பெட்டகங்களில் இந்த கோவிலில் கண்டறியப்பட்டன.
Sources: Image
-
2. பநீ வெங்கேடேஸ்வரா கோவில் , ஆந்திர பிரதேசம்
திருப்பதி பாலாஜி என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் 50,000லிருந்து 1,00,000 பக்தர்கள் வரை வருகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ரூ.6.5 பில்லியன் அளவிற்கு நன்கொடைகளை இந்தக் கோவில் பெறுகிறது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கோவில் 11 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 250 லிருந்து 300 டன்கள் தங்க ஆபரணங்களும் நகைகளும் உள்ளன. இந்தக் கோவில் இந்திய அரசின் தங்க நகை சேமிப்புத்திட்டத்தின் கீழ் தங்கத்தை வைப்பாக வைத்துள்ளது என்பது சுவாரஸ்யமான தகவல்.
Sources: Image
-
வைஷ்ணவோ தேவி கோவில், ஜம்மு காஷ்மீர்
ஒவ்வோர் ஆண்டும் வைஷ்ணவதேவி கோவிலின் கதவுகள் 80இலட்சம் பக்தர்களுக்கு திறந்துவிடப்படுகிறது. இந்த கோவிலானது மாதா வைஷ்ணவ தேவியின் ஆலயம். இந்தக் கோவிலுக்கு செல்வதற்கான சிறந்த தருணம் நவராத்திரி நேரமாகும். ஏனெனில் முதன் முதலாக நவராத்திரி விரதம் இருந்தவர் (9 நாள் விரதம்) அம்பாள் வைஷ்ணவ தேவி என்று நம்பப்படுகிறது. இந்தக் கோவிலுக்கென்று குறைந்த பட்சம் 1.2 டன்கள் தங்கம் உள்ளது.
Sources: Image
-
ஜகந்நாதர் கோவில், ஒரிசா
இரத யாத்திரைக்கு பிரபலமான இந்தக் கோவிலின் தங்க பொக்கிஷங்கள் திறக்கப்படாமலேயே உள்ளன. சுனா பேஷாவின்போது இதன் தெய்வங்களுக்கு தங்க நகையால் அலங்காரம் செய்யப்படும். அவற்றின் எடை 208 கிலோ கிராம்கள்.
Sources: Image
-
சாய்பாபா கோவில், மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் மிகவும் பிரபலமான கோவிலான இந்த சாய்பாபா கோவில் ஆண்டுதோறும் 60,000 பயணிகளைப் பெறுகிறது. இந்த கோவிலில் 376 கிலோகிராம் தங்கம் உள்ளது.
Sources: Image
-
6. சித்தி விநாயகர் கோவில்,மகாராஷ்டிரா
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் ஆலயம் என்று பாலிவுட் பிரபலங்களால் கொண்டாடப்படும் இந்த ஆலயமானது, 160 கிலோ தங்கத்தைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
Sources: Image
-
சோம்நாதர் கோவில், குஜராத்
1951ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பகவான் சிவனின் ஆலயமானது பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகவும் பிரபலமான மதரீதியான இடம். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கக் கோவில்களில் முதல் கோவில் இது. இந்தக் கோவிலில் 35 கிலோ தங்கம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Sources: Image
-
பநீகிருஷ்ணா கோவில், கேரளா
உடுப்பியில் உள்ள 13ஆம் நூற்றாண்டு பகவான் கிருஷ்ணரின் கோவிலில் குறைந்தபட்சம் 15 கிலோ தங்கமாவது இருக்கும். ஆண்டுதோறும் பக்தர்கள் அளிப்பதால் இவை சேர்ந்திருக்கும்
Sources: Image