Published: 01 செப் 2017

செல்வங்களின் கடவுளான குபேரனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

Kubera

இந்தியாவில், செல்வத்தின் கடவுள் குபேரன் ஆவார். ஒரு செல்வந்தரை நாம் குபேர அம்சம் பெற்றவன் என்று குறிப்பிடுகிறோம். புராணங்களில் தங்க பொக்கிஷங்களும், பரவலாக உள்ள செல்வங்களும் பொதுவாக 'குபேரனின் பொக்கிஷம்' அல்லது 'குபேரனின் செல்வம்' என்று குறிப்பிடப்படுகின்றன. ஆனால் குபேரன் என்பவர் யார், எது அவரை செல்வத்தின் கடவுளாக ஆக்கியது?

குபேரன் என்ற ஒரு யக்ஷன் (அரக்கன்), தென்கடலின் நடுவில் உள்ள இலங்கையில் தங்க நகரத்தைக் கட்டிய மன்னர் ஆவார். அவர் புஷ்பக விமானம் எனப்படும் பறக்கும் வாகனத்தை பயணம் செய்யப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும், குபேரனின் ஒன்றுவிட்ட சகோதரனான இராவணன், பிரம்மாவிடமிருந்து ஒரு வரம் பெற்று அவரை வெளியேற்றிய பிறகு, இலங்கையின் புகழ்பெற்ற நாட்கள் முடிவுக்கு வந்தன. மனம் வருந்திய குபேரன் இலங்கையை விட்டு வெளியேறி, கைலாஷ் அருகே உள்ள அலாகாபுரியில் குடியேறினார்.

வேதாகமக் குறிப்புகளானது, குபேரனை ஒரு அரக்கனாகக் குறிக்கின்றன. இருப்பினும், மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற மற்ற இந்து மத புராணங்களில், அவர் செல்வந்தர்களின் தேவன் மற்றும் வளமான தேவன் (இந்து கடவுள்) ஆகும். சுவாரஸ்யமாக பார்த்தால், குபேரன் என்ற பெயருக்கு, 'சிதைவுற்ற' அல்லது 'அசுரத்தனமான' என்று சமஸ்கிருதத்தில் அர்த்தமாகும். இந்துக் கதைகளும், சிற்பங்களும் குபேரனை பெரிய வயிறு மற்றும் தாமரை இலை நிறம் கொண்ட ஒரு குள்ளமானவராக சித்தரிக்கின்றன.

இந்து மத இதிகாசங்களில் 'குபேரனின் பொக்கிஷம்' அல்லது 'குபேரனின் செல்வம்' என்பது தங்க பொக்கிஷங்கள் அல்லது செல்வந்தர்களின் செல்வங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுவான சொற்கள் ஆகும். தற்போதைய கலைவடிவம் மற்றும் படங்களில் உள்ள குபேரரின் உருவமானது தங்கத்துடன் உள்ள லக்ஷ்மி தேவியுடன் பிரதானமாக உள்ளது. 'தங்கத்தை அள்ளித்தருபவர்' என்று கூறப்படும் குபேரன், குறிப்பாக தீபாவளியின்பொழுது, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், செல்வத்திற்கும், வெற்றிக்குமான லக்ஷ்மி தேவியுடன் பெரும்பாலும் வணங்கப்படுகிறார். தனது மந்திரமான 'ஓம் ஷாம் குபேராய நம' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கும் பக்தர்களுக்கு குபேரர் தனது பொக்கிஷத்திலிருந்து தங்கம் மற்றும் இதர விலைமதிப்பற்ற இரத்தினங்களை அளிக்கிறார் என்று நம்பப்படுகிறது.

குபேரன் இந்து மதத்தைத் தாண்டி, வைணவ மற்றும் பௌத்த மத புராணங்களிலும் இடம்பெற்றுள்ளார். பௌத்த நூல்களில், குபேரன் என்பவர் நான்கு திசை வழிகளோடு தொடர்புடைய நான்கு சொர்க்க லோக அரசர்களில் ஒருவராகும். வைணவ மதத்தில், குபேரன் என்பவர் 19வது தீர்த்தங்காராகிய மல்லிநாதரின் உதவியாளர் யக்ஷாவைச் சேர்ந்தவர் ஆகும், அதில் அவர் சரவனுபுதி அல்லது சர்வாஹ்னா என்று பெயரிடப்பட்டார்.

தனது பரவலான இருப்பின் மூலமாக, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பக்தர்களும் குபேரனை வழிபடுகிறார்கள். அவரை அர்ப்பணிப்போடு வழிபட்டால் அவரது பக்தர்களுக்கு ஒரு தங்கமான வெற்றி உறுதியாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.