Published: 28 ஆக 2017
லக்ஷ்மி – செல்வத்தின் கடவுள்
இந்து இதிகாசங்களின்படி, 'லக்ஷ்மி' என்ற பெயரானது செல்வம் மற்றும் வளத்தைக் குறிக்கிறது, முக்கியமாக தங்க நகை மற்றும் தங்க நாணயங்களைக் குறிக்கிறது. ஒரு சிவப்பு புடவை போர்த்தப்பட்டு, தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மற்றும் தங்க நாணயங்கள் பொழிவது போன்று உள்ள ஒரு அழகிய தேவியின் உருவமே - செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் அழகு ஆகியவற்றின் தெய்வமாகக் கருதப்படும் லக்ஷ்மி தேவி ஆகும்.
லக்ஷ்மி தேவியின் தெய்வீக இருப்பானது அவரின் பக்தர்களுக்கு தங்கம், பணம், ஆகியவற்றை அதிகரித்து, செல்வத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுவதால், இந்துக்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகியோர் அந்தப் புனிதமான தேவியை தங்கள் வீடுகளிலும், பணியிடங்களிலும் வணங்குகின்றனர்.
உங்கள் வாழ்க்கையை தங்கம் மற்றும் செல்வத்தால் நிரப்பும் சக்தி லக்ஷ்மி தேவிக்கு இருக்கிறது. எனவே, நீங்கள் பிரார்த்தனை செய்ய விரைந்து வருவதற்கு முன்பு, தங்கத்தின் தெய்வத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளையும் நம்பிக்கையையும் உங்களிடம் கொண்டு வருகிறோம்.
- லக்ஷ்மி என்ற பெயரானது 'லேக்ஸ்' என்ற வார்த்தையில் இருந்து உருவாகியது ஆகும், இதற்கு ‘கண்காணித்தல், புரிந்து கொள்ளுதல், மற்றும் இலக்கு வைத்தல்’ என்பது அர்த்தமாகும். வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகளை கண்காணித்துப் புரிந்துகொள்ளவும், திறமையுடன் அவற்றை இலக்காக கொள்வதற்கும், கடவுள் தனது பக்தர்களுக்கு வழிகாட்டுகிறார்.
- தங்கத்தால் ஓரப் பகுதியைக் கொண்ட சிவப்பு சேலையில் லக்ஷ்மி தேவி வீற்றிருக்கிறார், இது நேர்மறை ஆற்றல் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.
- லக்ஷ்மி தேவியின் பொன்னிற மேனியானது கருணை மற்றும் செழிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
- அவரின் கைகளில் இருந்து கொட்டும் தங்க நாணயங்களானது, 'தங்கத்தை அள்ளிக் கொடுக்கும்' அவரின் தன்மையைக் காட்டுகிறது
- இந்து மதக் கருத்தின்படி, லக்ஷ்மியின் நான்கு கைகளானது மனித வாழ்க்கையின் நான்கு இலக்குகளை வெளிப்படுத்துகின்றன- தர்மா (நெறிமிக்க வாழ்க்கை), காமா (மனநிறைவு), அர்த்தா (செல்வம்) மற்றும் மோக்ஷா (சுதந்திரம்).
- அஷ்ட (எட்டு) லக்ஷ்மி என்பது செல்வத்தின் எட்டு வடிவத்தை பிரதிபலிக்கும் தேவியின் எட்டு வெளிப்பாடுகள் ஆகும்.
- கடவுள் விஷ்ணுவுடன் நடந்த லக்ஷ்மி தேவியின் திருமணமானது, பாரம்பரிய இந்து திருமணங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.
- சில நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு யானைகளுடனும், எப்போதாவது, ஒரு ஆந்தையுடனும் லக்ஷ்மி தேவி காட்சி தருகிறார். யானைகள் என்பது வேலை, உழைப்பு மற்றும் வலிமை ஆகியவற்றையும், அதே போல் அளப்பரிய செல்வத்துக்கான தண்ணீர், மழை மற்றும் வளம் ஆகியவற்றையும் அடையாளப்படுத்துகின்றன. ஆந்தை என்பது இருள் சூழந்து இருக்கும்பொழுது, பொறுமையுடன் கண்காணிப்பதையும், பார்ப்பதையும், அறிவைக் கண்டறிவதையும் குறிக்கிறது. பகல் நேரத்தில் குருட்டுத்தனமாக இருப்பதாக சித்தரிக்கப்படும் பறவையான ஆந்தை என்பது, அறிவையும் செல்வத்தையும் பெற்ற பிறகு, குருட்டுத்தனத்தில் இருந்தும், பேராசையில் இருந்தும் விலகியிருக்க வேண்டும் என்பதை நினைவூட்டும் ஒரு குறியீடாக செயல்படுகிறது.
- லக்ஷ்மி தேவி என்பவர் சுத்தமான வீடுகளுக்கு மட்டுமே வருகை தருவார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது, எனவே ஒருவர் தனது வீட்டையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- வெள்ளிக்கிழமையே லக்ஷ்மி தேவியை வழிபட சிறந்த நாள் என்று நம்பப்படுகிறது.
- பக்தர்கள் தங்கள் அன்புக்குரிய தெய்வத்தை வெற்றிலை, பாக்கு வைத்து குங்குமம், சந்தனக்கட்டை, தங்க ஆபரணங்கள் மற்றும் தாமரை மலர்களால் அலங்கரிக்கிறார்கள்.
- லக்ஷ்மி தேவியை சாந்தப்படுத்த, பழங்கள் மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி பல்வேறு இனிப்புகள், தேங்காய் மற்றும் அரிசி ஆகியவற்றை பிரசாதமாக தயாரித்து, மக்களுக்கு வழங்க வேண்டும்.
- சிலை மட்டுமல்லாமல், செல்வச்செழிப்பு மற்றும் வளம் ஆகியவற்றை குறிக்கும் மங்களகரமான யந்திரமான ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தையும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
- லக்ஷ்மி தேவியின் 108 பெயர்களை உச்சரித்து பக்தர்கள் லக்ஷ்மி தேவியைப் போற்றுகிறார்கள், எ.கா. லக்ஷ்மி சூதம், லக்ஷ்மி பீஜ் மந்திரம் போன்றவை.
லக்ஷ்மி தேவியின் தெய்வீக இருப்பின் மூலம், உங்கள் கனவுகளை நீங்கள் நிஜமாக்க முடியும். ஏராளமான செல்வத்தையும், செழிப்பையும் பெற, தினமும் மாலை வேளையில் நெய்-விளக்கு ஏற்றி, தேவியை பிரார்த்திக்க வேண்டும்.