Published: 09 பிப் 2018
இந்திய தங்க நாணயம் நமக்கு ஏன் வேண்டும்?
நவம்பர் 2015-ல் பிரதமர் நரேந்திர மோடி இந்திய தங்க நாணயம் மற்றும் இந்திய தங்கக்கட்டியை முதன் முதலாக இந்திய அரசாங்கத்தின் அளிப்பாக அறிமுகப்படுத்தினார். இது 'மேக் இன் இந்தியா' உடன் இணைக்கமான தங்க சீர்திருத்த திட்ட முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாகும்.
தங்க நாணயங்கள் 5 மற்றும் 10 கிராம் எடையிலும், தங்கக்கட்டி 20 கிராம் எடையிலும் கிடைக்கின்றன. நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாணயங்கள் போலியாக தயாரிக்க முடியாத நவீன அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.
அரசாங்கத்தில் உள்ள பலருக்கும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அரசாங்கத்தின் மாபெரும் முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது. உலக தங்கக் கவுன்சில் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளபடி, "இந்திய தங்க நாணயம் மற்றும் தங்கத்தை பணமாக்கும் திட்டம் போன்றவை இந்தியாவில் முறைப்படியான தங்க மறுசுழற்சிக்கு மேலும் உத்வேகமளிக்கும் மற்றும் இது இந்திய பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தவும் உதவும்."
இந்த முன்னெடுப்பானது நுகர்வோர் மீதும் தாக்கத்தை உண்டாக்கும். இந்தியா மற்றும் உலக நாடுகளில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் விரும்பப்படும் சொத்து வகையாக தங்கம் உள்ளது. உண்மையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள், பரந்த வகையில் முதலீடு செய்வதற்காக ஒருவர் தனது மொத்த சொத்தில் சுமார் 8-10% தங்கமாக வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். திறந்தவெளி சந்தையில் தங்கத்தை விற்பனை செய்வது மற்றும் பணமாக மாற்றுவது மிக எளிதானது.
தற்போதைய தங்க நாணய திட்டத்தின் கீழ், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விலை ஆகியவற்றுக்கு அரசாங்கத்தால் உறுதியளிக்கப்படுகிறது. இன்னும் பொருத்தமாக சொன்னால், உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அதற்கு மட்டுமே நீங்கள் செலுத்துகிறீர்கள். மேலும், இந்தத் தங்க நாணயங்கள், ப்யூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) ஹால்மார்க் முத்திரையுடன் நீங்கள் 24 காரட் தங்கத்தை 99.9% தூய்மையுடன் பெறுகிறீர்கள். இந்த நாணயங்கள் போலியாக தயாரிக்க முடியாத பேக்கேஜிங்கில், திரும்ப வாங்கிக்கொள்ளும் விருப்பத்தேர்வுடன் கிடைக்கின்றன.
ஆக, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? ஒரு இந்திய தங்க நாணயத்தை உங்களுக்காக வாங்குங்கள்.