Published: 20 ஏப் 2020
மயக்கும் மீனாகாரி நகைகள் மற்றும் அதன் வெவ்வேறு பாணிகள்
மீனாகாரி என்பது வேறு எந்த வகையிலும் இல்லாத கைவினைஞர்களால் செய்யப்பட்ட தங்க நகை வடிவமாகும். உயர்தர பாரம்பரிய நகைகள் முதல் நவீன சமகால நகைகள் வரை மீனாகாரி ஆபரணங்கள் பல நூற்றாண்டுகளாக ராணிகள், பிரபலங்கள் மற்றும் மணப்பெண்களை அழகுப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் ஆடம்பரமாகவும் பகட்டாகவும், சில சமயங்களில் அடக்கமாகவும் புதுமையாகவும் உருவாக்கப்படும் மீனாகாரி நகைகளின் வண்ணங்கள் ஒரு பெண்ணின் உள்ளார்ந்த உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு மீனாகாரி ஆபரணமும் இந்திய கைவினைக் கலைஞர்களின் திறமை, படைப்பாற்றல், மற்றும் செயல்திறனின் தனித்துவமான காட்சிப் பொருளாகும்.

மீனாகாரி நகைகளின் பாணிகள்
பல்வேறு வகையான மீனாகாரி நகைகள் காலப்போக்கில் உருவாகியுள்ளன. தங்கத்துடன் இந்த வண்ணங்களின் கலவை ஒவ்வொன்றையும் வரையறுத்து வேறுபடுத்துகின்றன.
குல மீனா
மீனாகாரி நகைகளின் இந்த பாணி இயற்கையில் நிகழும் நான்கு வண்ணங்களை அழகாக இணைக்கிறது – அவை சிகப்பு, நீலம், பச்சை மற்றும் வெள்ளை. குலா அல்லது திறந்த மினா வகை நகைகள், பல விதமான வடிவமைப்புகளையும் பண்புகளையும் உருவாக்க மஞ்சள் தங்க அடித்தளத்தின் மேல் மெல்லிய அடுக்கு வண்ண எனாமல் பூசப்பட்டு உருவாக்கப்படுகிறது. இந்த எனாமல் ஒளி ஊடுருவக்கூடியது. அதனால் தான் அடிப்புற தங்கத்தின் ஒளி அதன் வழியே ஊடுருவி மின்னுகிறது.
படங்கள் உதவி: கீத் ஜுவல்ஸ், ஜெய்பூர்
படங்கள் உதவி: S.D ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி (ஜெய்பூர்)
பேண்ட் மீனா
குல மீனாவுக்கு முற்றிலும் மாறாக, மஞ்சள் தங்கத்தின் அடிப்புறத்தில் ஒளிபுகாத எனாமலை அடர்த்தியாக பூசுவதன் மூலம் பேண்ட் அல்லது ‘மூடிய’ மீனா பாணி உருவாக்கப்படுகிறது. இந்த எனாமல் தங்க அடித்தளத்தை மூடுகிறது, ஆனால் தங்கச் சட்டத்தை எடுப்பாக காட்டுகிறது. இதில் வண்ணங்கள் கவர்ச்சியான நுட்பமான அமைப்பை உருவாக்க அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாணி மீனாகாரி நகைகள் கலைநயத்தோடு வண்ணங்களை கலக்கிறது, அவை கிளிப்பச்சை, பிங்க் மற்றும் கருநீலம் போன்ற மற்ற நிறங்களை கலப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
படங்கள் உதவி: S.D ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி (ஜெய்பூர்)
படங்கள் உதவி: சேதா ஜுவல்ஸ் – தாதர் T.T வட்டத்தில் மட்டும்
படங்கள் உதவி:நெமிசந்த் சோனி தயாரிப்பாளர்கள், ஜெய்பூர்
தொடர்பு எண். 0141-2573760, 0141-2310120
படங்கள் உதவி: :நெமிசந்த் சோனி தயாரிப்பாளர்கள், ஜெய்பூர்
தொடர்பு எண். 0141-2573760, 0141-2310120
படங்கள் உதவி: S.D ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி (ஜெய்பூர்)
பஞ்ச்ரங்க மீனா
கலைநயமிக்க வண்ணங்களின் தட்டான பஞ்ச்ரங்க ஐந்து நிறங்களின் கலவையைப் பயன்படுத்தி செய்யப்படும் கைவினைக்கலையாகும், அவற்றில் இரண்டு நீல நிறத்தி்ன் சாயல்கள், அத்துடன் வெள்ளை, சிகப்பு, மற்றும் பச்சை நிறங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஐந்து தனித்துவமான வண்ணங்களின் ஒருங்கிணைப்பு பஞ்சரங்க மீனாவுக்கு ஒரு அப்பழுக்கற்ற தோற்றத்தை அளிக்கிறது. இந்த மீனாகாரி பாணியிலான நகைகளில் தங்கத்தின் வெளிப்புற கோடுகள் கவர்ச்சியை மட்டும் சேர்க்கின்றன. மற்ற ஐந்து வண்ணங்களும் கூர்மையான அழகை தருகிறது. பஞ்சரங்க மீனா நகைகளின் பிரகாசமானது எந்தவிதமான ஆடையையும், நிகழ்ச்சியையும் சந்தர்ப்பத்தையும் ஒளிரச் செய்யும்.
படங்கள் உதவி: கோவிந்த் MS ஜுவல்லர்ஸ் மற்றும் தயாரிப்பாளர்கள், ஜெய்பூர்
தொடர்பு எண். +9197999 98981
படங்கள் உதவி: S.D ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி (ஜெய்பூர்)
படங்கள் உதவி: கீத் ஜுவல்ஸ், ஜெய்பூர்
படங்கள் உதவி: DC கரேல் சன்ஸ் (ஜெய்பூர்)
குலாபி அல்லது பன்சாரி மீனா
குலாபி மீனா என்பது வாரணாசியின் (பனாரஸ்) பிரத்யேக பாணி மீனாகாரி நகைகளாகும், இது உங்கள் நகைப் பெட்டிக்கு தேவையான சிகப்பு வண்ணச் சாயலின் கைவண்ணமாகும். குலாபி மீனா நகைகளில் பிங்க் வண்ணமே கதாநாயகனாக இருந்த போதிலும், நகையைச் சுற்றியுள்ள வடிவங்களை நிரப்ப இதர வண்ணங்களின் சாயல்கள் பயன்படுத்தப்படுகிறது. மீனாகாரி நகைகளின் இந்த பிரத்யேக பாணியை தயாரிப்பவர்கள் பெருமிதம் கொள்கின்றனர். மேலும் இந்த பாணிக்கு புவியியல் குறிசார் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. (GI)
படங்கள் உதவி: கீத் ஜுவல்ஸ், ஜெய்பூர்
படங்கள் உதவி:கீத் ஜுவல்ஸ், ஜெய்பூர்
படங்கள் உதவி : DC கரேல் சன்ஸ் (ஜெய்பூர்)
மீனாகாரி நகைகளின் ஒவ்வொரு பாணியும் தனித்தன்மையானது மனதை மயக்கக்கூடியது, மேலும் ஒவ்வொரு ஆபரணமும் இந்தியாவில் கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த நகைகள் உலகின் வேறு எந்த பகுதியிலும் கிடைக்காது என்பதற்கான சான்றாகும்.