Published: 04 செப் 2017
தங்கச் சுரங்கத்தில் கடந்த காலம் மற்றும் எதிர்காலம்
இந்தியாவின் புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) வலைத்தளத்தின்படி, கி.மு 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தங்கத்தால் ஆன பொருட்களை வைத்துப் பார்க்கும் பொழுது, அமைப்புரீதியான தங்கச் சுரங்கம் அமைத்தல் மற்றும் தோண்டுதல் ஆகியவற்றை ரோமானியர்கள் முதன்முதலாக செய்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது.
இந்தியாவில், ரிக் வேதம், புராணங்கள், மகாபாரதம் மற்றும் இராமாயணம் மற்றும் பிற காப்பியங்களில் தங்கம் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இருப்பினும், கர்நாடகத்தின் ஹட்டி தங்க சுரங்கங்களில் கி.பி 200-க்கு முன்னர், தங்கச் சுரங்கத் தொழில் இருந்ததற்கான சான்று உள்ளது. போதுமான தரவுகள் இல்லாத காரணத்தினால், இந்தியாவில் தங்கச் சுரங்கத் தொழில் இருந்ததற்கான வரலாறு தெளிவற்றதாக உள்ளது என்று ஜிஎஸ்ஐ கூறுகிறது. இது நாட்டின் அனைத்துப் பகுதியிலும் தங்க சுரங்கங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் மறுகண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.
ஆசியா நாடுகளில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக திகழும் இந்தியாவில், பல நூற்றாண்டுகளாக, இலட்சக்கணக்கான மக்களின் குடும்ப சேமிப்புக்கான முதன்மை விருப்பத்தேர்வாக தங்கம் இருந்துவருகிறது. திருமண காலத்தின் போது தங்கத்தின் தேவை மிகவும் அதிகரிக்கும். அப்பொழுது தங்கத்தின் விலை உலகளாவிய அளவில் அதிகரிக்கச் செய்யும். உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க இறக்குமதியாளராக இந்தியா உள்ளது என்றும், வெளிநாடுகளிலிருந்து தங்கம் வாங்குவதற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறது என்றும் உலக தங்க கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது. கச்சா எண்ணெய்க்குப் பிறகு இந்த விலைமதிப்பற்ற உலோகமானது இரண்டாவது மிகப்பெரிய இறக்குமதி பொருளாக உள்ளது - இது எண்ணிக்கையானது, இந்திய அதிகாரிகளை கவலை கொள்ளச் செய்யும் ஒன்றாகும்.
2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்திய அரசின் சுரங்கங்கள் அமைச்சகமானது, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கு இந்திய துணைக் கண்டம் முழுவதும் சுரங்கங்களை புதுப்பிப்பதற்கும், கண்டுபிடிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சகமானது, தென்னிந்திய மாநிலமான கர்நாடகாத்தில் உள்ள காலனித்துவ-காலத்திய தங்கச் சுரங்கங்களை ஆராய்வதற்காக, அரசால் இயக்கப்படும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்துகிறது. 15 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கோலார் தங்கச் சுரங்கங்களில், $2.1 பில்லியன் மதிப்புள்ள இருப்புகள் மீதமுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கோலார் சுரங்கங்களை மீட்டெடுப்பதில் முதலீடு செய்தால், அரசுக்கு அதன் இறக்குமதி செலவுகளைக் குறைக்க உதவும் என்று சுரங்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு பகுதியில் அறியப்படாத தங்க இருப்புகள் மேலும் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுரங்கங்களை புதுப்பித்து, மிகப்பெரிய ஆற்றல் கொண்ட ஒரு தொழிற்சாலையை தொடங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாக, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற இடங்களில் புதிய மற்றும் மறக்கப்பட்ட இருப்புக்கள் ஆராயப்படும். ஆய்வு செய்தல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் ஆகியவற்றுக்கான உரிமம் வழங்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முழு ஆதரவுடன், மிகப்பெரிய தங்கம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா ஆவதற்கு சாத்தியம் உள்ளது.