Published: 08 நவ 2017
இந்தக் கோயில் தங்கத்தையே பிரசாதமாகத் தருகிறது!
இந்திய பல கோயில்களுக்கும் புகலிடமாக விளங்குகிறது, ஒவ்வொரு வருடமும் அவற்றைப் பராமரிக்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. இருப்பினும், இனிப்பு மற்றும் பலகாரங்களை “பிரசாதமாகப்” பெறுவதே பொதுவானதாக இருக்கின்ற அதேநேரத்தில், தங்கமே ஒரு பிரசாதமாக வழங்கப்படுகின்ற ஒரு கோயிலைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு கோயிலின் கதைதான் இது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லமில் இருக்கும் மகாலட்சுமி கோயில் இப்படிப்பட்ட ஒன்றுதான் -- ஒவ்வொரு வருடமும் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்ட, கோடிக்கணக்கில் மதிப்புள்ள நன்கொடைகளை இந்தக் கோயில் பெறுகிறது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில், இந்த நன்கொடையின் ஒரு குறிப்பிட்ட பகுதி பிரசாத வடிவத்தில் பக்தர்களுக்கே திருப்பியளிக்கப்படுகிறது – இந்தப் பிரசாதத்தைப் பெறுவதற்காக மக்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்; பிரசாதத்தின் செலவைக் காட்டிலும் பயணம் செய்வதற்கான செலவே எப்போதும் அதிகமாக இருக்கும்! ஆனாலும்கூட, இங்கு கிடைக்கின்ற தங்கம் மற்றும் வெள்ளிப் பிரசாதமானது நகை வடிவிலானதாக கருதப்படுவதில்லை, உண்மையில் அது செல்வச்செழிப்பின் இறைவியிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதமாகவே கருதப்படுகிறது என்பதுடன் அது செலவு செய்யப்படுவதில்லை --- மாறாக, அது வீட்டில் உள்ள பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.
இந்த இறைவிக்கு அளிக்கப்படுகின்ற நன்கொடை அனைத்தும் கணக்கில் எடுக்கப்படுகிறது, அதனால் பிரசாத வடிவில் திருப்பியளிக்க வேண்டிய தங்கம் எவ்வளவு என்பதை அதிகாரிகளால் தெரிந்துகொள்ள முடிகிறது!