Published: 31 ஆக 2017
ஹால்மார்க் தங்கத்தை வாங்கும்போது சோதிக்க வேண்டியவை
தங்க நகைகள் வாங்கும்போது தனிநபர்கள் தற்போது ஹால்மார்க் தங்கத்தை விரும்பி தேர்ந்தெடுக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. கடந்த காலத்தில், விற்கப்படும் தங்கத்தின் தூய்மை குறித்து சில தீவிரமான கவலைகள் இருந்துவந்ததாலேயே, BIS-சான்றளிக்கப்பட்ட ஹால்மார்க் தங்க நகைகள் அதிகளவு முக்கியத்துவம் பெற்றன.
BIS தங்க ஹால்மார்க்கிங் என்றால் என்ன?
தங்க ஹால்மார்க்கிங் திட்டத்தை செயற்படுத்த இந்திய அரசாங்கம், இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) என்ற ஒரேயொரு முகவாண்மையை நியமித்துள்ளது. BIS ஹால்மார்க்கிங் திட்டமானது, சுயவிருப்பத்தின் பேரிலானது; இது BIS சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நகை உற்பத்தியாளர்களுக்கு BIS ஆல் சான்றளிக்கப்படுவதுடன், அவ்வாறு சான்றளிக்கப்பட்ட நகை உற்பத்தியாளர்கள் தங்களது நகைகளுக்கு BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அஸேயிங் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்திலும் ஹால்மார்க் தர முத்திரையைப் பெறலாம்.
ஒரு BIS ஹால்மார்க் ஆனது ஒருவர் வாங்குகின்ற நகையின் தூய்மையை, குறிப்பாக தங்கத்துடன் சேர்க்கப்பட்ட உலோகக் கலவையின் அளவை உறுதிசெய்துகொள்ள முடியும். எனவே, தனிநபர்கள், தாங்கள் வாங்குகின்ற 22 காரட் தங்க நகையானது 22 காரட்டினால் ஆனது என்ற உத்தரவாதத்தைப் பெறுவார்கள்
ஹால்மார்க் தங்க நகையை அடையாளம் காண்பதெப்படி – சோதிக்க வேண்டிய 4 விஷயங்கள்
BIS விதிகளின் படி, எந்தவொரு ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகையும், கீழ்கண்ட 4 அடையாளக் குறிகள் அல்லது ஹால்மார்க் சின்னங்களைக் கொண்டிருக்க வேண்டும்:
-
இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) லோகோ
இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வரையறுத்துள்ள தரங்களின் படி ஹால்மார்க்கிங் மற்றும் அஸேயிங் செய்யப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது.
-
காரட் மதிப்பில் தங்கத்தின் தூய்மை மற்றும் நுண்மை
இந்தியாவில் ஹால்மார்க்கிங் ஆனது, 22 காரட், 18 காரட் மற்றும் 14 காரட் ஆகிய 3 தர நிலைகளுக்கு மட்டுமே ஹால்மார்க்கிங் அளிக்கப்படுகிறது. ஆகவே, 22 காரட் தங்கமானது 22k916 என்று சான்றளிக்கப்படும். நீங்கள் வாங்கப்போகும் தங்கத்தின் தூய்மையை அறிய இந்தச் சின்னத்தைப் பாருங்கள்.
-
அஸேயிங் மற்றும் தங்க ஹால்மார்க்கிங் மையத்தின் குறி
தங்க நகையானது BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்த அஸேயிங் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தால் சோதிக்கப்பட்டு ஹால்மார்க் செய்யப்பட்டதோ, அந்த மையத்தின் லோகோவை தங்கம் வாங்கும் தனிநபர்கள் சோதிக்க வேண்டும்.
-
BIS சான்றளிக்கப்பட்ட நகை உற்பத்தியாளரின் அடையாளக் குறி
மேற்கண்டவை தவிர, BIS சான்றளிக்கப்பட்ட ஜூவல்லர் / நகை உற்பத்தியாளரின் ஒரு அடையாளக் குறி, ஹால்மார்க் தங்கத்தில் இடப்பட்டிருக்கும். , BIS இணையதளத்தில் இந்தியாவிலுள்ள ஹால்மார்க் ஜூவல்லர்களின் முழு பட்டியலைக் காண முடியும்.
தங்க நகைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
-
தங்க காரட்
தங்கம், காரட் -ஆல் அளவிடப்படுகிறது. நீங்கள் வாங்க பரிசீலிக்கும் ஒரு தங்க ஆபரணம் அல்லது தங்க நாணயத்தின் விலை மற்றும் நீடித்திருக்கும் தன்மையை எவ்வாறு அது பாதிக்கிறது என்பதை ஒரு தனிநபர் தெரிந்து கொள்ள வேண்டும். 24 காரட் தங்கம் தூய்மையான தங்கம் (99.99 சதவீதம் தூயது), 22 காரட் தங்கம் 91.6 சதவிகித தூய்மையானது. தங்க ஆபரணங்கள் ஒருபோதும் 24 காரட் தங்கத்தால் தயாரிக்கப்படுவதில்லை. ஏனென்றால், தூய்மையான தங்கம் மிகவும் மென்மையாக இருப்பதால், அது நகைகள் செய்வதற்கு ஏற்றதல்ல. எனவே, 24 காரட் தங்கமானது, நகைகள் தயாரிப்பதற்காக செம்பு, வெள்ளி, நிக்கல் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களுடன் கலக்கப்படுகிறது.
-
தங்க நகைகளுக்கு செய்கூலி
தங்க வளையல்கள், சங்கிலிகள், நெக்லேஸ்கள் முதலிய தங்க நகைகளை வாங்கும் போது, வாங்குபவர்கள், அவற்ற்கு விதிக்கப்படும் செய்கூலியை பரிசீலிக்க வேண்டும். தங்க நகைகள் மீதான செய்கூலியானது பொதுவாக கிராம் அடிப்படையில் விதிக்கப்படும்.
-
தங்க ஜுவல்லரின் நன்மதிப்பு
தங்கத்தை வாங்கும்போது ஜுவல்லரின் நன்மதிப்பை தெரிந்துவைத்திருப்பது புத்திசாலித்தனம். அறியாதவர்களிடமிருந்து வாங்குவது, தங்கத்தின் தூய்மை விஷயத்தில் நமக்கு மிகப்பெரிய நஷ்டத்தை உண்டாக்கக்கூடும்.
ஹால்மார்க் தங்க நகைகள் வாங்கும்போது நீங்கள் பரிசீலிக்க வேண்டிய முக்கிய விஷயங்களைப் புரிந்துகொண்ட பிறகு, நாம் தங்க ஹால்மார்க்கிங் வரையறை மற்றும் ஹால்மார்க்கிங் செயல்முறையைப் பற்றி சற்று விவரமாக பார்ப்போம்.