Published: 21 மே 2018
தங்கத்தை சுத்திகரிப்பதற்கு முன்பு நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
தங்க நகை வடிவங்கள் நிலையாக பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கின்றன. தங்க நகைகளின் நவநாகரிக பாணிகளுககுக் கொண்டுவர, தங்க உரிமையாளர்கள் தங்களது பாரம்பரிய தங்க நகைகளையும் காலாவதியாகிய நகைகளை தரம் உயர்த்தவும் தங்கத்தை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்று சிந்தித்து வருகிறார்கள். உங்களது தங்க நகையை நவீனமாக்க அதனை மறு சுழற்சி செயய வேண்டுமானால், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.
-
உங்கள் தங்க நகையின் உண்மையான மதிப்பீடு
ஒரு தங்க சோதனை அல்லது தரமதிப்பீட்டு மையத்திற்கோ அல்லது ஒரு சில்லரை வியாபாரியின் கடைக்ககோ உங்களது தங்கத்தை எடுத்துச்சென்று அதன் தூய்மையை சோதிக்கவும்.
தங்கத்தை சோதிக்கவும் எடைபோடவும் ஒரு மின்னணு சோதனை முறையை நகைக்கடைக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு ஒரு சோதனை அறிக்கை சான்றிதழ் கிடைக்கும். அதில் அந்த உலோகத்தின் அசல் எடை மற்றும் அதன் தூய்மை காரட் அல்லது சதவீதத்தில் அறியப்படும்.
ரட்டின் தூய்மையை அறிய இதோ ஒரு எளிய சூத்திரம்
- பழைய தங்கத்தின் மதிப்பு = ( பழைய தங்கத்தின் எடை x தங்கத்தின் தூய்மை (சோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி) x தங்கத்தின் தற்போதைய விகிதம் /24
தூய்மையை சதவீதத்தில் அறிய இதோ ஒரு எளிய சூத்திரம்
- பழைய தங்கத்தின் மதிப்பு = ( பழைய தங்கத்தின் எடை x தங்கத்தின் தூய்மை (சோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி) x தங்கத்தின் தற்போதைய விகிதம் /100
ஒரு பழைய தங்க நகையின் எடை 20 கிராம்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் தூய்மை 18 காரட்டுகள். அதன் தற்போதைய விகிதம் ஒரு கிராமிற்கு ரூ.3,055 என்று வைத்துக்கொள்வோம். பின்னர்,
- பழைய தங்கத்தின் மதிப்பு (காரட்டேஜ்ஜை பயன்படுத்தி) = 20 x 18 x 3,055 / 24 = ரூ. 45,825
- பழைய தங்கத்தின் மதிப்பு (சதவீதத்தைப் பயன்படுத்தி) = 20 x 75 x 3,055 / 100 = ரூ. 45,825
- கற்கள் பதிக்கப்பட்ட நகையை நீங்கள் வாங்கினால், தங்கத்தின் விகிதத்தில் நீங்கள் கற்களுக்குப் பணம் செலுத்த மாட்டீர்கள் என்று உறுதிசெய்துகொள்ளவும். அந்த நகைக்கான பயன்பட்ட தங்கத்தின் மொத்த எடையிலிருந்து கற்களின் எடையைக் கழிக்கவும். அந்தத் தங்கத்தின் எடைக்கு மட்டும் பணம் செலுத்தவும்.
-
தங்கத்தை மறுசுழற்சி செய்யுமபோது பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றுள் ஒன்று செய்கூலிகள். நீங்கள் உங்களுடைய தங்கத்தை விற்கும்போது, செய்கூலிகள் பொருந்தாது. உங்களது பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்து அதிலிருந்து புதிய கையை நீங்கள் வாங்க விரும்பினால், அதனுடன் செய்கூலிகள் சேர்க்கப்படும்.
தங்கத்தை நவீனமாக்குவதிலிருந்து ஒரு குறிப்பிட்ட நகை வடிவத்திற்கு மாற்றுவதற்கு பல்வேறு திறன்கள் தேவைப்படுகின்றன. இதில பல்வேறு திறமைகள் சூழ்ந்துள்ளன. இதனால் நகைக்கடைக்காரருக்கு நகைக்கடைக்காரர் இவை வேறுபடும். மொத்த சந்தையின் தெளிவான வடிவங்களில் 3 சதவீதத்திலிருந்து இந்த கட்டணங்கள் மாறுபடும். மிகவும் நுட்பமான கல் பதிக்கப்பட்ட நகைகளுக்கு இது 25 சதவிதம் வரை செல்லும்.
உங்களது பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்வதற்கு முன்பு தற்போதைய தங்கத்தின் மதிப்பு என்ன என்று சோதித்துக் கொள்ளவும். இதனால் நிலையான செய்கூலிக்கட்டணங்கள் என்ன என்பது குறித்து உங்களுக்கு நல்ல கருத்து கிடைக்கும்.
-
சேதாரம் கட்டணங்கள்
புதிய வடிவங்களுக்கு தங்கத்தை மறுசுழற்சி செய்யும்போது அவை அனைத்தும் பயன்படுவதில்லை. உருக்குதல், சம்மட்டியால் அடித்தல் மற்றும் வெட்டுதல் ஆகிய முறைகளின் மூலம் தங்கம் பல்வேறு சுழற்சிகளை அடைகிறது. இந்தத் தங்கமானது பயன்பாட்டிற்கு அப்பாற்பட்டு உள்ளதால் நகைக்கடை வாங்குபவருக்கு சேதார வகையில் கட்டணம் விதிக்கிறது. சேதாரக் கட்டணங்கள் 5% to 7% வரை மாறுகின்றன. நீங்கள் செய்யும் நகையின் வகையைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும்.
மற்ற கட்டணங்கள் விதிக்கும் தங்க சில்லரை விற்பனையாளர்கள் குறித்து, அதிலும் உருக்குதல் மற்றும் கையாள்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, எச்சரிக்கையுடன் இருக்கவும்.