Published: 08 மார் 2018
உங்கள் வாழ்வில் உள்ள பெண்களுக்கான பெண் சிந்தனையாளர் தினப் பரிசுகள்
செழிப்பின் குறியீடு, நேர்த்தியின் பறைசாற்றல், கலாச்சாரத்தின் உருவம் மற்றும் காதலின் அழகிய வெளிபாடு. உங்கள் வாழ்வில் உள்ள பெண்களைப் போன்றே, தங்கமும் பலதரப்பட்ட பாத்திரங்களை வகித்துள்ளது. அதனால், இந்தப் பெண்கள் தினத்தை,, உங்களுடைய பயணத்தில் மிக முக்கியமான பங்காற்றியுள்ள பொன்மகள்கள் எல்லோருக்கும் தங்கத்தாலான பரிசை கொடுத்து ஏன் கொண்டாடக்கூடாது.
- பாட்டி – நேர்த்தியான தோற்றம்கொண்ட பெண்ணுக்கு தங்க மோதிரம் அவரை நீங்கள் எந்தளவுக்கு ஆராதிக்கிறீர்கள், அவருடைய ஆசீர்வாதங்களும் நிபந்தனையற்ற பாசத்திற்காக எந்தளவுக்கு நன்றி செலுத்துகிறீர்கள் என்பதை அவருக்கே நினைவுபடுத்தக்கூடியது
- அம்மா – வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உங்களுக்கு சொல்லிக்கொடுத்த பெண்ணுக்கான தங்கத் தோடுகள்/ தங்க வளையல்கள் உங்கள் வாழ்க்கையின் ஆதார சக்தியாக அவர் இருந்தமைக்கு அவரை எந்தளவுக்கு நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்பதைச் சொல்லிடுங்கள். உங்களுடைய கனவுகளில் எப்போதுமே நம்பிக்கை வைத்த அவருக்கு நன்றி செலுத்திடுங்கள்
- மனைவி – உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு பெண்ணுக்கான தங்கக் காப்பு/ தங்க நெக்லஸ் அவர் உங்களுடைய முயற்சிகள் எல்லாவற்றுக்கும் ஆதரவாய் இருந்திருக்கிறார், நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு உங்களுக்கு ஒரு துணையாக இருந்திருக்கிறார்.
- மகள் – மதிப்புமிக்க பெண்ணின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய ஒரு கோல்டு ETF இந்தப் பெண்கள் தினத்தில், அவருக்கு நீங்கள் எப்போதுமே ஆதரவாய் இருப்பதற்கான உறுதிமொழியாக பரிசளித்திடுங்கள்.
- மாமியார் – குடும்பத்திற்குள் உங்களை வரவேற்று, வாழ்க்கை குறித்து உங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்த பெண்ணுக்காக ஒரு தங்க முலாமிட்ட தெய்வச்சிலை.
- பாஸ் – உலகில் ஒருபடி முன்னே இருக்க வேண்டியதன் அவசியத்தை உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பெண்ணுக்கு ஒரு தங்க கைக்கடிகாரம்.
இந்த மினுமினுப்பான தங்கப் பரிசுகள் காதலை நேர்த்தியாக வெளிப்படுத்துவதற்கும், உங்கள் வாழ்க்கைத் துணைவரின் ஓர் விசேஷ நாளில் அவர் மீதான மரியாதையை வெளிப்படுத்துவதற்கும் தகுதியானவை.