Published: 10 ஆக 2017
இந்தியா முழுவதும் அணியப்படும் தங்க நகைகள்
பல்வேறு கலாச்சார பாரம்பரியமும் மரபும் கொண்ட நாடு இந்தியா. அதன் பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்கள் அணியும் ஆபரணமும் ஆடைகளும் இதில் அடையாளப்படுத்தப்படுகின்றன. மதரீதியான, கலாச்சார, சமூக கூட்டங்களில் அணியப்படும் இந்த பாரம்பரிய உடைகள் பல்வேறு விதமான தங்க நகைகளுடன் அணியப்படும்போது அணிவோரின் அழகிற்கு அழகு சேர்க்கும். நம்முடைய நாடுகளின் எல்லைகளில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில் அணியப்படும் சில தனித்துவமான நகைகள் குறித்த ஒரு பார்வை.
-
அசாம்
தேயிலை தோட்டங்கள், பண்டிகைகள், பாடல்கள், நடனங்கள் என்று பல்வேறு பிரபலங்கள் கொண்ட மாநிலமான அசாம் அதன் அழகான பாரம்பரிய தங்க நகைகளுக்கும் பெயர் பெற்றது. அசாம் மாநில நகையானது அதன் தாவரங்கள், விலங்குகள், வனவாழ்க்கை, இசைக் கருவிகள் ஆகியவற்றின் செல்வாக்கைப் பெற்றது. கம்காரு என்ற தங்க பூச்சு பூசப்பட்ட வளையல் உள்ளது. இதில் அழகான பூ வேலைப்பாடுகள் இருக்கும். மோள வடிவிலான மோடாபிரி என்ற அட்டிகையும் உள்ளது. முதலில் இதை ஆண்கள்தான் அணிந்திருந்தார்கள். தற்போது பெண்களும் அணிகிறார்கள்.
-
உத்தர பிரதேசம்
உத்தரபிரதேசத்தில் தலையில் பாசா (மாங் டிக்கா) Paasa (maang tika) என்ற தங்க நகை, திருமணத்திற்காக அணியப்படுகிறது. அது பல்வேறு விதமான நூதன வேலைப்பாடுகளுடன் வரும். எளிய பளபளப்பான வடிவத்திலிருந்து சாண்டிலியர் போன்ற அடுக்கடுக்கான துண்டாகவும் மாங் டிக்கா இருக்கும். இது மணப்பெண்ணின் நகை. இந்த புராணத்தின்படி உள்ள மூன்றாவது கண் அல்லது ஆன்மாவின் பலனை உணர்த்தும் ஆறாவது சக்கரத்தில் ஓய்வெடுக்குமாறு இது அமைக்கப்பட்டுள்ளது. சில மணப்பெண்கள் நெற்றியின் நடுவில் தொங்குவது போல் அணிந்திருப்பார்கள். ஒருவரது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் கவன ஈர்ப்புத் திறனை அதிகரிக்கவும் இது உதவும்.
இதன் பிரபல்யத்தால், மாங் டிக்காவை இப்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் அணிகிறார்கள்.
-
பிகார்
பாகல்புரி பட்டுப் புடவைகளுக்கு பிரபலமான பிகாரில் அதன் பாரம்பரிய நகையும் ஒரு கலை பொக்கிஷம்தான். இங்குள்ள ஹன்சுலி (Hansuli) என்பது தங்க முலாம் பூசப்பட்ட நெக்லேஸ். கழுத்தைச் சுற்றி பட்டை வடிவத்தில் சுற்றியுள்ளதுபோல் இந்த நெக்லேஸ் இருக்கும். டோக்ரா பழங்குடியினர் இந்த ஹன்சுலிக்கள் செய்வதில் கைதேர்ந்தவர்கள். இடுப்பை அலங்கரிக்கும் கமர்பேண்டுகள் (kamarbands) சங்கிலிகள் மணிகள் உள்பட பல்வேறு வடிவங்களில் வருகின்றன.
-
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் என்ற அழகிய நிலம் அதன் அழகுடன் ஒத்து போகும் பாரம்பரிய நகைகளைக் கொண்டுள்ளது. அங்கு திருமணங்களில் மணமக்கள் அணியும் காதணிக்கு தேஜ்ஹூர்(Dejhoor) என்று பெயர். இந்த மணமகள் நகையானது நீண்ட காதுவளையங்களைக் கொண்டது. இது தங்க நூல்களின் வழியாக தொங்கி காதுகள் வழியாக செல்லும்.
-
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் அதன் பாரம்பரிய கோவில் நகைகளுடன் இணைந்துகொள்ளும். இத்தகைய நகைகள் கடவுள்கள் மற்றும் அம்மன்களை கோவில்களில் அலங்காரம் செய்வதற்காக இந்தப் பெயர் பெற்றுள்ளது. இலக்ஷ்மி அம்மனின் வடிவங்கள் கொண்ட தங்க வடிவங்கள் ஒட்டியானத்தில் உள்ளன. மூக்கின் மத்தியில் தொங்கவிடப்படும் நூதனமான மூக்குத்திக்கு புல்லாக்கு என்று பெயர்.
Sources:
Source1, Source2, Source3, Source4, Source5, Source6, Source7