Published: 10 செப் 2018

உடனடி தங்கப் பரிமாற்றகம் என்றால் என்ன?

Understanding the Gold Spot Exchange Market in India

இந்தியாவில் உடனடி தங்க பரிமாற்றகம் அறிமுகப்படுத்தப்பட்டதும், அதில் விலையின் வெளிப்படைத்தன்மை எப்படி சாத்தியம் என்கிற எதிர்பார்ப்பும், எளிய மறுசுழற்சி முறையும் நாட்டின் தங்க ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஒருவேளை அது உங்கள் மீது எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் திகைத்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

உடனடி தங்கப் பரிமாற்றகம் என்றால் என்ன?

உடனடி தங்கப் பரிமாற்றகம் என்பது உடனடியாக பணத்தை செலுத்துவதன் மூலம் கட்டித் தங்கத்தை வாங்குவதையும் விற்பதையும் சாத்தியமாக்குகிறது. (பரிவர்த்தனை தேதியிலிருந்து இரண்டு நாட்களில்) அதாவது வாங்குபவருக்கும் விற்பவருக்கும் உடனடி தங்கம் மற்றும் பண விநியோகம். அது விலை கண்டுபிடிப்பு மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலிலும் நேரடி விநியோகத்திலும் கவனம் செலுத்துகிறது. எனவே, இந்தியாவின் உடனடி தங்க பரிமாற்றகம் ப்யூச்சர் பரிமாற்றகங்களிலிருந்து மாறுபட்டது, அவை தங்கத்தின் விலைகளில் ஏற்படும் அபாயங்களுக்கு எதிரான காப்பரணாகவும், தங்க விலை இயக்கத்திலிருந்து வியாபார லாபங்களை பெறவும் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது.

உடனடி தங்கப் பரிமாற்றகத்தின் கட்டமைப்பு

பரிமாற்றகம் ஒரு நிலையான ஒழுங்கமைக்கப்பட்ட உறுப்பினர் கட்டமைப்பை பின்பற்றலாம் – தீர்வக உறுப்பினர்கள் நேரடி பங்கேற்பாளர்களாகவும் மேலும் அவர்களுடைய வாடிக்கையாளர்கள் மறைமுக பங்கேற்பாளர்களாக இருப்பார்கள். பங்கேற்பாளர்கள் என்போர் உள்ளடங்கிய இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், நியமிக்கப்பட்ட முகவர்கள், வங்கிகள், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள், நகைக் கடைக்காரர்கள்/சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர், இதர நிதி நிறுவனங்கள் ஆகியோர் ஆவர்.

உடனடி தங்க பரிமாற்றகம் வர்த்தகத்திற்கான ஒரு மையக் களத்தை வழங்கும் சூழலமைப்பாக இருக்கும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெட்டக இயக்குனர்களால் சேவை வழங்கப்படும் நன்கு இணைக்கப்பட்ட பிணைய அமைப்பாகும், மேலும் வர்த்தகங்களை முடிக்கும் மற்றும் தீர்க்கும் ஒரு மைய எதிர்ப்பகுதியாகும். ஒரு சுய – ஒழுங்குமுறை அமைப்பாக செயல்பட்டு இந்தப் பரிமாற்றகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விநியோக தரநிலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வழங்குனர்களுக்கு விதிமுறைகளை வகுத்து மேற்பார்வையிடும்.

முன்மொழியப்பட்ட உடனடி தங்கப் பரிமாற்றகத்தின் உட்கூறுகள்

ஒரு வர்த்தகராக இது உங்களை எப்படி பாதிக்கும்

இந்த பரிமாற்றக மேடையானது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் தங்கத்தை நியாயமான சந்தை விலையில் வர்த்தகம் செய்ய களம் அமைத்துக் கொடுக்கும். கூடுதலாக, சமீபத்திய அறியப்பட்ட விலைகள் (அல்லது ஏலங்கள் மற்றும் சலுகைகள்) பற்றிய தகவல்கள், பரிமாற்றகத்தின் இணையதளங்கள், தகவல் வழங்குனர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களில் உண்மையான நேரத்தில் காட்சிப்படுத்தப்படும்.

பரிமாற்றகத்தின் நன்மைகள்

உடனடி தங்கப் பரிமாற்றகங்கள் நல்ல விநியோக தரநிலைகளை நிறுவனப்படுத்துதலின் மூலம் இந்திய சந்தையில் தரநிலைப்படுத்தலை உருவாக்கும். பின்வருபவை இதர பயன்களாகும்:

  • உங்களைப் போன்ற தங்கம் வாங்குபவர்களுக்கு நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும்
  • சந்தை பங்கேற்பாளர்கள் மற்றும் உங்களைப் போன்ற தங்கம் வாங்குபவர்களுக்கு வெளிப்படையான விலையை கண்டறியும் தொழில்நுட்பத்திற்கு களம் அமைத்துக் கொடுக்கும்.
  • இது தங்க மதிப்பீட்டு இணைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முறைசார்ந்த வர்த்தகர்கள் அடங்கிய முறைப்படுத்தப்பட்ட சந்தை வசதியை வழங்குகிறது. முறைசாராத நகைக்கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகளிடமிருந்து விலகி இருக்கவும் மேலும் அவர்களை முறைசார்ந்த பிரிவில் ஒருங்கிணைய ஊக்குவிக்கவும் உதவும்.
  • இது தங்கம் வாங்குபவர்களை தங்கத்தை நேரடியாக சொந்தமாக வைத்திருப்பதற்கு பதிலாக மாற்றுத் தேர்வுகளில் முதலீடு செய்ய அனுமதிக்கும் தங்க ஈடிஎஃப் போன்ற தங்கத்தைப் பின்னணியாகக் கொண்ட தயாரிப்புகளின் அமைப்பு சார்ந்த அறிமுகத்தை சாத்தியமாக்குகிறது.

உடனடி தங்கப் பரிமாற்றகத்திற்கு காரண விளக்கம்

இந்த நன்மைகள் உங்களை பாதிக்கக்கூடிய பின்வரும் பிரச்சனைகளை குறிப்பிடுகிறது:

  • தர உறுதியில் குறைபாடு
    • தங்கத்திற்கான நல்ல விநியோகத் தரத்தில் குறைபாடு
    • தூயத் தங்கம் மற்றும் தங்க நகைகளில் தர வாக்குறுதியில் பற்றாக்குறை
    • இந்திய நகைகளுக்கு வரையறுக்கப்பட்ட சர்வதேச தேவை
  • விலையின் வெளிப்படைத்தன்மையில் பலவீனம்
    • மதிப்பீட்டு இணைப்புகள் முழுவதும் விலை நிர்ணயம் மற்றும் விலை திரிபு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையில் குறைபாடு.
  • நாடு முழுவதும் தங்கத்தின் வலைகளில் பரந்த அளவில் மாறுபாடு.

இந்தியா உடனடித் தங்கப் பரிமாற்றகங்களைப் பெறுவதற்கு முன்பும் பெற்ற பின்பும் பொருட்கள் எப்படி வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் என்பதைப் பற்றிய பார்வை இங்கே.

இறுதியாக, ஒரு உடனடி தங்கப் பரிமாற்றகமானது நடப்பு சந்தை விலையில் தரமான தங்கத்தின் கொள்முதல் மற்றும் விற்பனைக்கு தயார் நிலையில் சந்தையை வழங்குகிறது. மறைமுகமாக, இந்தப் பரிமாற்றகத்தின் வழியாக ஒரு நுகர்வோராகவும், முதலீட்டாளராகவும் உங்களுக்கு தங்கத்தின் தரத்தை மேம்படுத்தப்படும், வெளிப்படைத்தன்மையுடைய விலைகளை விளைவிக்கும், புதுமையான தங்கப் பின்னணி கொண்ட பொருட்களுக்கு ஆதரவளிக்கும்.

ஆதாரம்