Published: 31 ஜூலை 2017

இந்தியாவிற்கு தங்கம் எங்கிருந்து வருகிறது?

Where does gold in India come from?

இந்தியா 550 டன்களுக்கும் அதிகமான தங்கத்துடன் உலகிலேயே 11 வது மிகப் பெரிய பெரிய தங்க பெட்டகமாக திகழ்கிறது. ஆனால் இந்த தங்கம் அனைத்தும் எங்கிருந்து வருகிறது? நாம் அதை கண்டறிவோம்.

 

இந்தியாவில் தங்கம் இறக்குமதி

 

2015 ஆம் ஆண்டில், இந்தியா அதன் தங்கத் தேவையை பூர்த்தி செய்ய 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.

 

இந்தியாவில் யாரெல்லாம் தங்கத்தை இறக்குமதி செய்யலாம்?

 

விலையுயர்ந்த உலோகம் மிக அதிக மதிப்புடையதாகும். எனவே, நாட்டில் யாரெல்லாம் தங்கத்தை இறக்குமதி செய்யலாம் என்பது குறித்து கடுமையான விதிகள் உள்ளன. இதற்காகவே பிரத்யேகமாக அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் முன்னணி நிறுவனங்கள் இதை காண்காணிக்கின்றன மற்றும் கட்டுப்படுத்துகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI), DGFT மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை இதில் அடங்கும். நாட்டில் யாரெல்லாம் தங்கத்தை இறக்குமதி செய்யலாம் என்பது போன்ற முழு கட்டுப்பாடும் அவர்களிடமே உள்ளது. வங்கிகள் மற்றும் வர்த்தக மையங்கள் போன்ற குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்யலாம். கீழேயுள்ள பட்டியல் தங்கத்தை இறக்குமதி செய்யும் பல்வேறு நிறுவனங்களை குறிப்பிடுகிறது.

 

  1. இந்தியாவில் தங்கத்தை மறுசுழற்சி செய்தல்


    சுரங்கம் மூலமாக மட்டுமே மிகப் பெரிய தேவையை சந்திப்பது கடினமாகும். எனவே, மறுசுழற்சி செய்தல் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. 2015 இல், சுமார் 180 டன் தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டிலிருந்தே தோராயமாக 15% இந்திய நகை உற்பத்தி தேவைகள் இருந்து வருகிறது . இது பெரும்பாலும் நகை உற்பத்திக் கழிவு மற்றும் ஆயுள் முடிந்த தொழிற்சாலைப் பொருட்களில் இருந்தே பெறப்படுகிறது. 

     


  2. இந்தியாவில் தங்கச் சுரங்கத் தொழில்


    தங்கத்தின் என்றும் மங்காத தேவையை சந்திக்க, இந்தியா அதனுடைய பங்கிற்கு தங்கச் சுரங்கங்களை கொண்டிருக்கின்றன. இது சிறிதளவு மட்டுமே பங்களிப்பு செய்வதாக சொல்லப்படுகிறது. 2015 இல், 2 டன்களுக்கும் குறைவான தங்கம் மட்டுமே சுரங்கத்திலிருந்து பெறப்பட்டது . இந்தியாவிலுள்ள முக்கியமான சில தங்கங்களை நாம் சற்று பார்ப்போம். 

     

 

இந்திய சுரங்க இலாகா படி, 1947 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியா சுமார் 90 டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது . இவை அனைத்துமே ஹட்டி என்ற ஒரே சுரங்கத்திலிருந்து பெறப்பட்டதாகும்.

ஆதாரங்கள்: 

  • http://sciencing.com/gold-recycled-10776.html
  • இந்திய தங்கச் சந்தை: WGC இன் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அறிக்கை