Published: 27 செப் 2017
தங்களுடைய திருமண நாளில் அதிகத் தங்கம் அணிபவர் யார்?
உலக தங்கக் கவுன்சில் அறிக்கையான ‘இந்தியாவின் தங்கச் சந்தை: பரிணாமம் மற்றும் புத்தாக்கம்" என்பதின்படி, கேரள மணமகள் தன்னுடைய திருமண நாளில் அதிக அளவு தங்கத்தை அணிந்துகொள்கிறார். உண்மையில், மணமகள் சராசரியாக 40 பவுன்கள் அல்லது 320 கிராம் தங்கம் வரை அணிந்திருப்பதைக் காண முடியும்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மணமகள்கள் இதில் வெகுதூரத்தில் இல்லை, அவர்களது திருமணங்களில் சராசரியாக 300 கிராம் தங்கத்தை அணிகின்றனர். உண்மையில், “நான்கு தென்னிந்திய மாநிலங்களில் மணமகள்களால் பயன்படுத்தப்படும் நகை என்பது 280 கிராம் முதல் 320 கிராம் வரை ஆகும் - இது வேறு எந்தப் பிராந்தியத்தையும் விட மிகவும் அதிகமாகும். இந்திய தங்க ஆபரண சந்தையில் 40% அளவை தென்னிந்திய பிராந்தியங்கள் கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை” என்று ஃபைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் உடனான பேட்டியில் உலக தங்கக் கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் (இந்தியா), சோமாசுந்தரம் PR என்பவர் கூறினார்.
ஒரு இந்திய மணமகளுக்கு கொடுக்கப்படும் தங்கம் என்பது 'சீதனம்' என்று அழைக்கப்படுகிறது, இது திருமணத்தின் போது ஒரு பெண்ணுக்கு அளிக்கப்படும் செல்வம் ஆகும். அவருக்கு வழங்கப்படும் தங்கம் என்பது மங்களகரமானது என்று மட்டுமே கருதப்படுவதில்லை, அது செல்வம் மற்றும் பாதுகாப்பிற்கான அறிகுறியாகவும் கருதப்படுகிறது. இந்தச் சடங்கானது பண்டைய காலங்களில் இருந்தே நடைமுறையில் உள்ளது. பெற்றோர், தமது சொத்துக்களில் ஒரு பங்கை மகள் அனுபவிப்பதற்காக வழங்குவதே இதன் அடிப்படையாகும்.
இது இந்தியா முழுவதும் காணப்படக்கூடிய நடைமுறை ஆகும். ‘இந்தியாவின் தங்கச் சந்தை: பரிணாமம் மற்றும் புத்தாக்கம்" என்ற அறிக்கையின்படி, "இந்தியாவில் வாங்கப்படும் தங்க நகைகள், கட்டிகள் மற்றும் மற்றும் நாணயங்கள் ஆகியவற்றில் சுமார் 40% -50% திருமணத்திற்காக வாங்கப்படுகிறது. திருமணங்களில் எண்ணிக்கைக்கு அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை என்றாலும், அது வருடத்திற்கு 8 மில்லியன் முதல் 10 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருக்கும்". இது பாரம்பரிய மதிப்புகளை இன்னும் பின்பற்றக்கூடிய இளைஞர்களினால் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஆனால் மணமகள் மட்டுமே தனது சிறப்புமிக்க நாளில் தங்கம் அணிந்திருக்கவில்லை. “இது தவிர, சிறிய அளவில் இருந்தாலும், திருமணம் தொடர்பான தங்க ஆபரணங்கள் என்பது மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தினருக்குப் பரிசாக அளிக்கப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு வரும் விருந்தாளிகளும் திருமணத்திற்கு தங்க நகைகளை அணிய வேண்டும் என்பதற்காக நகைகள் வாங்குகின்றனர்" என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
திருமணம் என்பது மங்களகரமான நாள் ஆகும், ஒரு சராசரி கேரள மணமகள் பின்வருபவைகளில் இருந்து தேர்வு செய்கிறார் – முல்லை மொட்டு மாலை (நீண்ட மல்லிகை மொட்டுகள் அல்லது இதழ்கள் கொண்ட நீண்ட தங்கச் சங்கிலியாக அணியப்படுகிறது), தங்கக் காசுகள் காதணிகளுடன் இணைந்த லக்ஷ்மி மாலை, பாலக்கல் நெக்லஸ் (மரகதம் மற்றும் மாணிக்கத்தின் ஒரு கலவை), நாகபாட தாலி, மாங்கா மாலை, காசு மாலை, பூ தாலி மாலை, கருமணி மாலை மற்றும் மேலும் பல ... உண்மையில் நீங்கள் அவளை ஏதாவது குறை சொல்ல முடியுமா?