Published: 16 ஆக 2017
பணவீக்கத்தை மீறி வளரும் சக்தி தங்கத்திற்கு உண்டு என்று ஏன் கருதப்படுகிறது?
வங்கி வைப்புநிதியில் பணத்தை வைத்தால் உங்களுக்கு 7-8% இலாபமே கிடைக்கும். அப்போது பணவீக்கம் 5% ஆக இருந்தால் உங்களுக்கு எதுவுமே கிடைக்காது. நீங்கள் புத்திசாலித்தனமான முதலீட்டாளர் என்றால் பணவீக்கத்தை விட அதிகமாக அல்லது அதற்கு சமமாக இலாபம் கொடுக்கும் முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களது போர்ட்ஃபோலியோவில் பணவீக்கத்தை தாண்டிய பாதுகாப்பு அம்சங்களை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். பணவீக்கத்துக்கு இணையாக இந்த முதலீட்டு அம்சங்கள் வளர்ந்து உங்கள் முதலீட்டை வளர்க்கும்.
தங்கம்: பணவீக்கத்திற்கு மேல் உள்ள முகடா?பணவீக்கத்தின் போது, ஈக்விட்டி மற்றும் கடன் பத்திரங்கள் விலை உயர்ந்தவையாக இருக்கும். அவற்றின் செயல்திறன் குறைவாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுவார்கள். உயர் பணவீக்கக் காலங்களின்போது தங்கம் வரலாற்று ரீதியாக செயல்பட்டுள்ளது.
1946, 1974, 1975,1979 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் வெளிவந்த, மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான சர்வதேச பத்திரிக்கையின்படி, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருந்த போதெல்லாம், டோவ்வின் கணக்குப்படி, பங்குகளின் சராசரி இலாபமானது -12.33%, ஆக இருந்துள்ளது. அதே சமயம் தங்கத்தின் மீதான இலாபம் 130.4%ஆக இருந்துள்ளது.
பணவீக்கம் உயரத்தில் இருக்கும்போது தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதன் காரணம் என்னவென்றால் பணவீக்கத்தினால் பாண்டுகளும் மற்ற நிலையான வருமானங்களும் நீண்ட கால முதலீட்டாளர்களை கவரக்கூடியவையாக இல்லை.
பணவீக்கத்தையும் தாண்டி தங்கம் நன்றாக செயல்படுகிறது. இதற்கு அதன் அளவான வினியோகம், பல்வேறு கலாச்சாரங்களில் உள்ள அதன் மதிப்பீடு ஆகியவை காரணமாகும். சந்தையில் ஸ்திரத்தன்மை இல்லாதபோது தங்கம் வாங்குவது சிறந்தது என்று மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இதனால் அதன் விலைகள் உயர்ந்துகொண்டே இருக்கும். உலகப் பொருளாதாரமும் டாலர் மதிப்பும் தங்கத்திற்கு எதிர் திசையில் செல்கின்றன. முதலீட்டாளரின் வாங்கும் சக்தியை தற்போதிருந்து எதிர்காலம் வரை தங்கத்தின் மீதான முதலீடு மாற்றுகிறது.
பணவீக்கம் என்ற இடரை தங்கம் மட்டுப்படுத்துகிறது. ஏனெனில் பணவீக்கத்தின் மதிப்பு பொதுவாக உயர்ந்து இருக்கும்போது, தங்கத்தின் மதிப்பு கூடுகிறது. இது எதனால் என்றால் தங்கம் ஒரு பொருள், அரசு பத்திரங்களைப் போன்று தாள் அல்ல. பணவீக்கம் செங்குத்தாக உயரும்போது காகித சொத்துக்களின் இலாபத்தின் மீதான அச்சமும் அதிகரிக்கும்.
தொடர்புடையது How is gold price determined?
இந்தியாவில் தங்கத்திற்கும் பணவீக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்புவிலைவாசி உயர்விலிருந்து காத்துக்கொள்ள, பணவீக்கத்திற்கு எதிரான ஆயுதமாக பாரம்பரிய ரீதியாகவே இந்திய மக்கள் தங்கத்தை நோக்கி படை எடுத்துள்ளனர். உலக தங்க கவுன்சிலின் ஆய்வுப்படி, பணவீக்கத்தில் உள்ள ஒவ்வொரு சதவீத உயர்வுக்கும் இந்தியாவில் தங்கத்தின் தேவை 2.6% உயர்கிறது.
இந்தியாவில், வரலாற்று ரீதியாக, கடந்த மூன்றிலிருந்து நான்கு வருடம் நீங்கலாக, நீண்ட கால முதலீட்டில் பணவீக்கத்தை வென்று தங்கம் நன்றாகவே செயல்பட்டுள்ளது. அரசின் முயற்சிகளின் பயனாக (வளர்ந்துவரும் தீர்வைகள்), தங்கத்தின் உயர்ந்து வரும் தேவை அடக்கி வைக்கப்பட்டுள்ளது. தேவையில் உள்ள வீழ்ச்சி விலை உயர்வை பிரதிபலிக்கிறது.
வளர்ச்சியடைந்த சந்தைகளில் உள்ள முதலீட்டாளர்கள் தங்கத்தை பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாகக் கருதுகின்றனர். எனினும் இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு, நாணயத்தின் வீழ்ச்சிக்கு எதிராகவும் தங்கம் செயல்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் (2001-2016), சர்வதேச சந்தைகளில் இந்த மஞ்சன் உலோகத்தின் அளவு அதிகரிக்கும்போதும் பங்குச்சந்தை பலவீனமடைந்தபோதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் தங்கம் சென்செக்ஸ் இலாபத்திற்கு இணையாக உதவியது.
உங்களது முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் நீங்கள் தங்கத்தை சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா, 2017ஆம் ஆண்டுக்கான உங்கள் முதலீட்டில் நீங்கள் எவ்வாறு தங்கத்தை சேர்க்கலாம் என்பதற்கான திட்டம்..