Published: 04 நவ 2021
உங்களின் சிறப்பான ஜோடிக்கு சரியான தங்க நகையை தேர்வு செய்வது எப்படி?
அணிகலன்களை, குறிப்பாக நகைகளை உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது முக்கியமான இன்னொருவருக்காகத் தேர்ந்தெடுக்கும் போது, அதற்கு ஒரு குறிப்பிட்ட சாமர்த்தியம் வேண்டும். தங்க நகைகளைப் பரிசளிப்பது ஒரு நல்ல யோசனையாகும், ஏனென்றால் தங்கம் எப்போதும் நிலையான மதிப்பைக் கொண்டுள்ளது, அது தூய்மை மற்றும் அன்பைக் குறிக்கிறது. முக்கியமான இன்னொருவருக்காக வாங்கும்போது, அவர்கள் ஒரு ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, , சரியான ஒன்றை எப்படித் தேர்ந்தெடுப்பது? உங்கள் வாழ்க்கைத்துணைக்கு தங்க நகைகளை வாங்குவதற்கான ஒரு நடைமுறை வழிகாட்டி இதோ.
மனைவிக்காக:
1. அவரின் ஸ்டைலில் அதிக கவனம் செலுத்தவும்
Jewellery Credits: Horse studs (Curated by the Brand Poonam Soni)
அவளது தனிப்பட்ட பாணியை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால், அவள் விரும்பும் தங்க நகைகள் பற்றிய குறிப்புகள் அதில் இருக்கும். அவளுடைய விருப்பங்களைத் தெரிந்து கொள்ள நீங்கள் அவளுடைய அலமாரிகளைப் பார்க்கலாம் - அவள் சாதாரண, குறைந்தபட்ச பாணியை விரும்பினால், எளிமையான டிசைன்கள், குறைந்தபட்ச அலங்காரங்கள் மற்றும் நேர்த்தியான மேல்தோற்றம் ஆகியவற்றுடனான நுட்பமான தங்க நகைகளைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கலாம். இருப்பினும், அவர் இன்னும் ஆடம்பரமான அல்லது போஹேமியன் பாணியைக் கொண்டிருந்தால், நுட்பமான டிசைன்கள் அல்லது விலையுயர்ந்த கற்கள் கொண்ட பெரிய தங்க நகைகளை அவர் விரும்பலாம்.
2. ஒரு Pinterest போர்டை உருவாக்குங்கள்
Jewellery Credits: DC Karel & Sons (Jaipur)
நீங்கள் உங்கள் ஆராய்ச்சியை முன்கூட்டியே தொடங்கினால், நீங்கள் ஒரு பரிசைத் தேர்ந்தெடுத்து அல்லது அதைத் தனிப்பயனாக்கும் நேரத்தில் தேர்ந்தெடுக்க போதுமான யோசனைகளும் விருப்பங்களும் இருக்கக் கூடும். Pinterest இல் தங்க நகைகளுக்கு பாரம்பரிய முதல் சமகால வடிவமைப்பு வரை ஏராளமான விருப்பத் தேர்வுகள் உள்ளன.
ஒரு நடிகை வெள்ளித்திரையிலோ அல்லது சிவப்புக் கம்பளத்தில் நடக்கும்போதோ வெளிக்காட்டிய ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை அவள் பாராட்டியிருக்கிறாளா? இந்த யோசனைகளையும் படங்களையும் சேகரித்து வையுங்கள்; நீங்கள் அதே மாதிரியான டிசைன்களில் தங்க நகைகளை வாங்க வேண்டியிருக்கும்போது அவற்றைக் குறிப்புகளாகப் பயன்படுத்தலாம். நீங்கள் அதே டிசைனை விரும்பினால் அவற்றை உங்களுக்கேற்றவாறு தனிப்பயனாக்கவும் செய்யலாம்.
3. அவரின் குடும்பத்தார் அல்லது நண்பர்களிடம் கேளுங்கள்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் (குறிப்பாக அம்மாக்கள், சகோதரிகள் மற்றும் சிறந்த நண்பர்கள்) இந்த விஷயங்களை மற்றவர்களை விட நன்கு அறிந்திருப்பார்கள் மற்றும் புரிந்திருப்பார்கள்- எனவே இது உங்களுக்கு தகவலுக்கான சிறந்த ஆதாரமாக இருக்கலாம். உங்கள் நகை பரிந்துரைகளை அவர்கள் மூலம் செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள் அல்லது பரிசு வாங்கும் போது அவர்களை அழைத்துச் செல்லுங்கள். இது இந்த நேரத்தில் உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் துணை விரும்புவது மற்றும் விரும்பாதது பற்றிய நுட்பமான நுண்ணறிவுகளையும் வழங்கும், இதனால் எதிர்காலத்தில் அவர்களுக்கான ஷாப்பிங் எளிதாக இருக்கும்.
கணவருக்காக:
1. அவருடைய அலமாரியில் கவனம் செலுத்துங்கள்
எந்த வகையான பரிசு மிகவும் பொருத்தமானது என்பதைக் கண்டுபிடிக்க அவரது அலமாரி மற்றும் அணிகலன்களை கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, அவர் ஃபார்மல் சட்டை மற்றும் டை உடன் உள்ள தோற்றத்தை விரும்பினால், ஒரு தங்க டை பின் மற்றும் கஃப்லிங்க்ஸ் செட் ஒரு சிறந்த பரிசாக இருக்கும். இருப்பினும், அவரது ஸ்டைல் மிகவும் இளமையாக இருந்து, ஜாக்கெட்டுகளுடன் கூடிய டீ-ஷர்ட்களை அணிய விரும்புபவராக அவர் இருந்தால், நீங்கள் ஒரு பளிச்சென்ற தங்க செயின் அல்லது ஒற்றை தங்கக் காதணியை தேர்வு செய்யலாம்.
2. ராசிக்கல்
ஆண்கள் அதிகம் விரும்பும் நகைகளில் மிகவும் பொதுவான ஒன்று அவர்களின் பிறந்த மாதத்தை அடிப்படையாகக் கொண்ட ராசிக்கல் பதித்த ஒன்றாக இருக்கலாம். மோதிரங்கள் முதல் தோடுகள், கஃப்லிங்க்ஸ் வரை ராசிக்கல் நகைகள் கொண்டு நீங்கள் பல பரிசுகளைத் தேர்வு செய்ய முடியும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட ராசிக்கல்லைத் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் நவரத்தினக்கல் விருப்பத்திற்கும் செல்லலாம். உண்மையில், இந்த வகை தங்க நகைகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒரு சிறந்த பரிசுத் தேர்வாக இருக்கும்.
3. சமகால அல்லது பளிச்சென்ற டிசைன்கள்
ஆண்கள் பொதுவாக நவீன, ஜியோமெட்ரிக் வடிவங்கள் அல்லது பளிச்சென்ற சங்க்கி நகைகளை விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் ஒரு ஸ்டைலை வெளிக்காட்ட விரும்புவார்கள் மற்றும் பலவிதமான உடைகளுடன் நன்கு பொருந்த வேண்டும் என எண்ணுவார்கள். கடா என்பது பல பயன் கொண்ட ஒரு ஸ்மார்ட் நகையாகும், இதை பல்வேறு ஆடைகளுக்கு பொருந்தும் எளிய டிசைனில் தங்கத்தில் நீங்கள் வாங்கலாம் நீங்கள் ஒரு மோதிரத்தை வாங்கத் திட்டமிட்டால், ஆண்களுக்கான பிரபலமான டிசைன் ஒரு வடிவம் செதுக்கப்பட்ட தட்டையான மேற்புறம் கொண்ட மோதிரமாகும்
இரு தரப்பினருக்கும் ஒத்து வரக்கூடிய பொதுவான ஒன்று என்ன?
தனிப்பயனாக்கப்பட்ட நகைகள் எப்போதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒரு சிறந்த பரிசாகும். நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டால், ஒரு சிறப்பு தேதி, சின்னம் அல்லது வாசகத்துடன் உங்கள் பரிசைத் தனிப்பயனாக்குவது சாத்தியமாகும். அது உங்கள் திருமணத் தேதியாக இருந்தாலும் சரி அல்லது ஒரு அர்த்தமுள்ள வாசகமாக இருந்தாலும் சரி, செதுக்கப்பட்ட பரிசு, உங்கள் ஜோடிக்காக நீங்கள் அதிக நேரம் செலவழித்துள்ளீர்கள் என்பதைக் காட்டுகிறது, மேலும் பரிசை மிகவும் தனித்துவமாகவும் மறக்கமுடியாததாகவும் ஆக்குகிறது.
பரிசுகளை வழங்குவது தம்பதிகளுக்கு ஒரு நெருக்கமான மற்றும் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும். எனவே, உங்கள் முக்கியமான இன்னொருவருக்கு நீங்கள் பரிசளிக்கும் தங்க நகைகள், நீங்கள் அதற்காக எடுத்த முயற்சியையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.