Published: 03 மே 2024

காலத்தை வென்ற பாரம்பரிய தங்க நகைகள் ஒரு கம்பீரத்தை உருவாக்குகின்றன

Traditionally gold jewellery

வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள சிக்கிம், இயற்கை அழகு மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் நேர்த்தியான கலவை கொண்ட ஒரு தனித்துவமான மாநிலமாகும். இது அதன் பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகளுக்கு மட்டுமல்ல, அதன் சிறந்த பாரம்பரியத்திற்கும் பிரபலமானதாகும். சிக்கிம் மக்களின் வரலாறு மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் பூட்டான், திபெத் மற்றும் நேபாளம் உள்ளிட்ட அண்டை பிராந்தியங்களின் கலாச்சாரம் மற்றும் செல்வாக்குடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன.

இம்மாநிலத்தில் பூட்டியா, நேபாளிகள் மற்றும் லெப்சாக்கள் உட்பட பல்வேறு இனக்குழுக்கள் கொண்ட மக்கள்தொகை உள்ளது. இந்த சிக்கிம் மக்கள், இயற்கை அன்னையின் பாதுகாப்பான அரவணைப்பு மற்றும் டிராகன்கள், நெருப்பின் புனிதம் மற்றும் 'வாழ்க்கை எனும் வட்டம்' போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.  இதை தங்கள் நகைகள் மற்றும் பிற ஆபரணங்களிலும் வெளிப்படுத்துகின்றனர். 

ஒவ்வொரு சமுகத்தின் உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடு, பாரம்பரியம், நம்பிக்கைகள் மற்றும் தங்கத்தை அவர்கள் அழகான, நுண்ணிய நகைகளாக வடிவமைக்கும் கலை பற்றிய அவர்களின் பார்வைகளைப் புரிந்துகொள்ளவும் இந்தக் கட்டுரை உதவும்.

பூட்டியா சமூகம் தங்கள் ஆபரணங்கள் மூலம் பௌத்தத்தை வழிபடுகிறார்கள்

பூட்டியா சமூகம் திபெத்தில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தது, மேலும் அவர்களின் முக்கிய மதமான பௌத்தத்தின் தாக்கத்தை அவர்களின் நகைகள் கொண்டுள்ளன. இந்த ஆபரணங்கள் அவர்கள் மடாலயத்தின் சுவர்களில் வரையப்பட்ட புனித சின்னங்களை பிரதிபலிக்கின்றன. சில முக்கிய பூட்டியா ஆபரணங்கள்:
 

யென்சோ என்பது ஒரு ஜோடி தங்க முலாம் பூசப்பட்ட காதணிகளாகும், இது பொதுவாக தட்டையானது மற்றும் வட்ட வடிவமானது. இவை மெழுகு மற்றும் தங்க வார்ப்பு முறையால் செய்யப்பட்டவை மற்றும் அவை குணப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்ற, நீலம் (டர்க்வைஸ், ) சிவப்பு பவளம் போன்ற ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Yencho earringsதங்க முலாம் பூசப்பட்ட காதணிகள் யென்சோ

காவ் நெக்லஸ் <வீடியோ மற்றும் ஹைப்பர்லிங்கைச் சேர்க்கவும்> என்பது பூட்டியா பெண்கள் அணியும் பிரபலமான பாரம்பரிய நகையாகும். இது விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரத்தினக் கற்களுக்கும் மேலாக ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில், இது ஒரு தாயத்து பெட்டியாக இருந்தது, அதில் போர்க்காலத்தில் பாதுகாக்க பழங்குடி வீரர்களுக்கு துறவிகள் அல்லது அவர்களின் குலத்தாரால் வழங்கப்பட்ட ஒரு சிறப்பு தாயத்து இருந்தது. தாயத்து சேதமடையாமல் பாதுகாக்கும் வண்ணம் அந்தப் பெட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஒரு மன்னர் அவர்களின் மத நம்பிக்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 'மண்டலா' போன்ற சுருக்கமான வடிவத்தில் மிகவும் நவீனமான மற்றும் எளிமையான வடிவமைப்பை விரும்பினார்.

a pair of Khaosகுறியீடுகள் சமச்சீர் தன்மையை (Symmetry) சந்திப்பதின் ஒரு பிரதிநிதித்துவமாக காவ்ஸ்கள் விளங்குகின்றன.

ஆரம்பத்தில், காவ் கனமான 100 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இருப்பினும், வடிவமைப்பு பின்னர் மாற்றப்பட்டது, இதன் மூலம் அது ஒரு தனித்துவமான கலாச்சார பேஷன் கம்பீரமாக மாறியது. ஒவ்வொரு காவ்வையும் செதுக்க மூன்று வாரங்கள் எடுக்கும் மற்றும் அது வட்ட வடிவமாகவோ அல்லது செவ்வகமாகவோ, ஆனால் எப்போதும் சமச்சீராகவே இருக்கும். அதன் எட்டு பக்கங்களும் அஷ்டமங்கலாவைக் குறிக்கின்றன, இது புத்த மதத்தின் எட்டு நல்ல அறிகுறிகளைக் குறிக்கிறது.

கருவுறுதல், போரில் பாதுகாப்பு மற்றும் செழிப்பு போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு காவ்கள் அணியப்பட்டன. இது இரண்டு வகையானது - ஒன்று முற்றிலும் தங்கம் மற்றும் நீலம் (டர்க்வைஸ்) போன்ற விலைமதிப்பற்ற ரத்தினங்களால் ஆனது, மற்றொன்று மணிகள் மற்றும் ஆபரணக்கற்களால் ஆனது.

மற்ற பிரபலமான பூட்டியா நகைகளில் ஒன்று ஃபிரு ஆகும், இது நீலம் (டர்க்கைஸ்) மற்றும் டிஜி மணிகள் அதிகம் கொண்டிருக்கும் ஒரு முத்து நெக்லஸ் ஆகும்; டியூ, இது சிக்கிமின் திருமணமான பெண்ணால் அணியப்படும் ஒரு பாரம்பரிய மற்றும் காலத்தை வென்ற வளையல் மற்றும் ஜோகோ, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அணியக்கூடிய இது சிவப்பு பவளத்துடன் கூடிய மோதிரமாகும்.

 Heavy gold bangle ‘Diu’ and Joko ring worn by Sikkimese women.திருமணமான பெண்களால் அணியப்படும் கனமான தங்க வளையல் டியூ ஆகும்.

இந்த ஆபரணங்கள் அனைத்தும் டிராகன்கள் மற்றும் தாமரைகள் போன்ற வடிவங்களுடன் நுண்ணிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் பல்வேறு விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வண்ணமயமான இதர கற்களால் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. பூட்டியா மக்கள் தங்கத்தின் தூய்மை மற்றும் நீலம் (டர்க்கைஸ்) மற்றும் சிவப்பு பவளத்தின் குணப்படுத்தும் பண்புகளில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

நேபாளிகள் மற்றும் அவர்களின் ஆன்மீக நம்பிக்கைகள் அவர்களின் ஆபரணங்கள்

மூலம் பிரதிபலிக்கின்றன நேபாள நகைகள் சிக்கிமின் வளமான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் வசீகரிக்கும் பிரதிபலிப்பாகும். இது இந்து மற்றும் பௌத்த தாக்கங்களை இணைத்து ஒரு தனித்துவமான அழகை அளிக்கிறது. அவை பொதுவாக ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தாமரை அல்லது ஓம் வடிவங்களைக் கொண்டுள்ளன.

காந்தா <வீடியோ மற்றும் ஹைப்பர்லிங்க் சேர்க்கவும்> என்பது சிவப்பு நூல் வேலைகளால் பின்னப்பட்ட தங்க கழுத்து அணிகலனாகும் மற்றும் இது மூதாதையர்களின் ஆசீர்வாதங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சிக்கிமில் முடியாட்சி முடிவுக்கு வந்தவுடன், நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி ஏற்பட்டது, அது மாநிலத்தின் சமூக-பொருளாதார வடிவத்தை மாற்றியது. கைவினைஞர்கள் சாதாரண மக்களும் பெறக்கூடிய வகையில் காந்தா சோக்கரின் சிறிய வடிவங்களை  வடிவமைக்கத் தொடங்கினர், மேலும் நேபாளிகள் அதை ஒரு பேஷன் நகையாக கம்பீரமாக அணிய வாய்ப்பு கிடைத்தது.  

Kantha is used a fashion statement usually made in Black or Red thread.காந்தா என்பது ஒரு முக்கிய மணப்பெண் உடையாகும் மற்றும் இது பொதுவாக கருப்பு அல்லது சிவப்பு நூலில் செய்யப்படும் ஒரு கம்பீரமான ஃபேஷன் தோற்றமாக இருக்கிறது.

 நவ்கெடி <வீடியோ மற்றும் ஹைப்பர்லிங்கைச் சேர்க்கவும்> (நவ் என்றால் ஒன்பது எனும் எண், அது கலாச்சார அடையாளத்தின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாகும்) என்பது ஒன்பது பின்னப்பட்ட தங்க நூல்களால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய நெக்லஸ் ஆகும். இந்துக்களின் உணர்வைக் கவரும் ருத்ராட்ச கொட்டை போல இருக்கும் இதை, சிவபெருமான் போன்ற நற்பண்புகள் மற்றும் குணங்கள் கொண்ட கணவனுக்காக ஏங்கும் பெண்கள் அணிவார்கள். 

The Naugedi is adorned with nine gold pieces inspired by dragons and fire.டிராகன் மற்றும் நெருப்பினால் ஈர்க்கப்பட்ட நவ்கெடி ஒன்பது தங்கத் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 தில்ஹரி <வீடியோ மற்றும் ஹைப்பர்லிங்கைச் சேர்க்கவும்> என்பது ஒரு நீண்ட, தொங்கும் நெக்லஸ் ஆகும், பொதுவாக சிவப்பு அல்லது பச்சை மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திருமண நாளில் அணியப்படும் நெக்லஸ், பச்சை மணிகளை கொண்டிருக்கும், திருமணத்திற்குப் பிறகு சிவப்பு மணிகள் விரும்பப்படுகின்றன. இவற்றில் சில நெக்லஸ்கள் மிக நீளமானவை, அவை உடலின் குறுக்காக அங்கி போல அணியப்படலாம். 

தில்ஹரியில் உள்ள பதக்கத்தில் ஏழு ஆழமான கோடுகள் உள்ளன, இது வாரத்தின் நாட்களைக் குறிக்கிறது மற்றும் வாழ்க்கையின் தொடர்ச்சியையும் குறிக்கிறது. இந்த ஆபரணம் பம்பர வடிவமானது, இது சுழற்சியைக் குறிக்கிறது மற்றும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கை சுழற்சியின் வடிவத்தையும் குறிக்கிறது. கூடுதலாக, இந்தப் பதக்கமானது கருவுறுதல், ஆண்மை மற்றும் வேட்கை ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆழமான கோடுகளுக்கு இடையில் லேசாக மேடாக  இருக்கும் பகுதிகள் ருத்ராட்ச கொட்டையைக் குறிக்கின்றன 

Tilhari jewelleryஇந்த தில்ஹரி கருவுறுதல், ஆண்மை மற்றும் வேட்கையைக் குறிக்கிறது

சர்-பாண்டி (நெற்றியில் தொங்கும் பதக்கத்துடன் கூடிய தங்கத்தால் ஆன தலை ஆபரணம்), திக்மாலா (கனமான கழுத்து அணிகலன்), புலாகி (காதணி), மற்றும் துங்ரி (மூக்குத்தி) ஆகியவை சில நன்கு அறியப்பட்ட நேபாள நகைகளாகும். இந்த ஆபரணங்கள் திருமணமான பெண்களால் தினசரி மற்றும் முக்கிய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்காலங்களில் அணியப்படுகின்றன.

மற்ற சமூகங்கள் மற்றும் அவர்களின் நகைகள்

லெப்சாஸ், லிம்பு மற்றும் தமாங் ஆகியவை சிக்கிமில் உள்ள மற்ற மூன்று முக்கிய பழங்குடி சமூகங்களாகும், ஒவ்வொன்றும் தனித்துவமான நகை மரபுகள் கொண்டவை. லியாக், நாம்சோக், கியர், நெஸ்ஸெ மற்றும் லஸ்கரி போன்ற தனித்துவமான நகைகளைலெப்சாக்கள் பெற்றுள்ளனர். லிம்பஸின் நகைகள் அதன் சம்யாங்ஃபங் தலை ஆபரணத்திற்கு பிரபலமானது, மேலும் தமாங் பழங்குடியினர்  காவ் பதக்கங்கள் மற்றும்  தாமரை மொட்டுகள் வடிவிலான அகோர் காதணிகளை அணிவார்கள்.

கைவினைஞர்கள் சிக்கிம் நகைகளுக்கு எப்படி உயிரோட்டம் கொடுக்கிறார்கள்?

சிக்கிம் வகை நகைகளை உருவாக்குவது கைவினைஞர்களின்   வேட்கையையும் கலையின் மீதான அன்பையும் குறிக்கிறது, இது பல தலைமுறைகளாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆபரணமும் பாரம்பரிய நுட்பங்களைப் பயன்படுத்தி  நேர்த்தியாக உருவாக்கப்படுகிறது.

Making Sikkim jewellery

making sikkim jewellery

ஆபரணத்திற்கு தேவையான வடிவத்தை கொடுக்க ஒரு முன்மாதிரி  மோல்டு மூலம் அதன் செயல்முறை தொடங்குகிறது. கைவினைஞர்கள் ஒரு சுத்தியல் மற்றும் இரும்பு ஆணி மூலம் வளையக்கூடிய தங்கத்தின் மீது நேர்த்தியான வடிவங்களை செதுக்குகிறார்கள் அல்லது ஒரு ரத்தினக்கல்லை சரியாகப் பொருத்த ஒரு பிராங் மற்றும் பெஸெல் அமைப்பைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த நுட்பங்கள் கைவினைத்திறன் மற்றும் பாரம்பரியத்தின் உச்சத்தை பிரதிபலிக்கின்றன.

இந்த ஆபரணங்கள் வெறும் அணிகலன்கள் அல்ல; அவை ஒவ்வொரு சமூகத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தையும் கடந்த அரை நூற்றாண்டில் நகைகள் எவ்வாறெல்லாம் மாறியுள்ளன என்பதையும் பிரதிபலிக்கின்றன.

முடிவுரை

. சிக்கிம் வகை நகைகளை சிறந்த மற்றும் காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கும் பொருளாக மாற்றுவது என்பது பல்வேறு பழங்குடி சமூக பாரம்பரியங்களின் கலவையினால்தான். இந்தச் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பகிர்ந்துகொண்டு, குறியீடுகள் மற்றும் அழகின் இணக்கமான கலவையை உருவாக்குகின்றன. ஒரு கலை உதாரணமான, சிக்கிம் வகை நகைகள், கலாச்சார பரிமாற்றங்களுக்கு ஒரு சான்றாகும், இது ஒரு காலத்தை வென்று நிற்கும் கலை வடிவத்தை உருவாக்குகிறது, இது அழகு மற்றும் நிபுணத்துவ கைவினைத்திறனின் நவீன வெளிப்பாடாகவும் இருக்கலாம்.