Published: 13 ஆக 2024
சாஜ்: கோலாபுரின் கைவினை தங்க நகைக் கலைவடிவங்கள்
வரலாற்று சிறப்புமிக்க நகரமான கோலாபுரில் மிகவும் கொண்டாடப்படும் கோலாபுரி சாஜ் நெக்லஸை சாதாரண நகையாகக் கருதிவிட முடியாது; இதில் 400 ஆண்டுகளாக கைவினைஞர்களால் தலைமுறை தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட பழமையான பாரம்பரியம் அடங்கியுள்ளது.
செழிப்பு மற்றும் திருமண ஆசீர்வாதத்தின் அடையாளமான இந்த நேர்த்தியான ஆபரணம் ஒரு சாதாரண, அலங்காரத்திற்கான நகை என்பதையும் தாண்டி நிற்கிறது. சாஜ்ஜில் உன்னிப்பாக கையால் செதுக்கப்பட்ட 21 நுணுக்கமான தங்க வடிவங்கள் உள்ளன. இந்த வடிவங்களில் தெய்வீக ஆசீர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது என்பதால் இந்த நகைகளின் ஆன்மீக முக்கியத்துவமும் அதிகரிக்கிறது.
200 ஆண்டுகள் பழமையான அச்சுகளைப் பயன்படுத்தி கைகளால் செதுக்கப்படும் சாஜின் ரகசியம் அதை உருவாக்குவதில் தான் அடங்கியுள்ளது. கைவினை கலைஞர்கள் தங்கம் மற்றும் வெண்கலத்தை துல்லியமாகக் கலந்து 100 முதல் 300 கையால் செய்யப்பட்ட சாஜ்களை உருவாக்குகிறார்கள். ஒரே ஒரு கோலாபுரி சாஜை உருவாக்க, பல சாஜ்கள் கச்சிதமான துல்லியத்துடன் பின்னப்படுகின்றன.
ஒரு சாஜ் அணிகலனை வைத்திருப்பது கோலாபுரின் செழிப்பான வரலாற்றுடன் உங்களை
இணைப்பதோடு பல தலைமுறைகளாக இருக்கும் கலைத்திறனைக் கொண்டாடுவதாக கருதப்படும். ஒவ்வொரு பளபளப்பான வேலைப்பாடுகளிலும் அதன் துடிப்பான கடந்த கால கதைகளை கொண்டுள்ள இது, பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைக்கான சான்றாகும்.