Published: 13 ஆக 2024

தங்க மணிகள்: கோலாபுரின் கைவினை தங்க நகைக் கலைவடிவங்கள்

மகாராஷ்டிராவின் மையப்பகுதியில், கோலாபுர் கைவினை கலைஞர்களின் நுணுக்கமான மணி வேலைப்பாடுகளுள் வரலாறும் பிண்ணிப் பிணைந்திருக்கிறது.

22-காரட் தங்கத்தை "பாஷ்தா" என்று அழைக்கப்படும் மிக மெல்லிய கீற்றுகளாக வடிவமைத்து, தங்க மணிகளை உருவாக்குகின்றனர். இது எத்தனை மெல்லியதென்றால், 200 க்கும் மேற்பட்ட தங்க மணிகள் வெறும் 1 கிராம் தங்கத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கோலாபுரின் இந்த அற்புதமான கலை வடிவம் பல தலைமுறைகளாக மெருகேற்றப்பட்டு வரும் தனித்துவமான கலைநயத்துடன் அதன் தட்பவெப்பநிலை மற்றும் புவியியல் ஆகியவை இணைந்திருப்பதன் காரணமாக மட்டுமே சாத்தியமாகிறது.

துஷி நெக்லஸ்கள், புகாடி காதணிகள் மற்றும் கேஸ்கேடிங் லம்பேட் மணிஸ் போன்ற சில அற்புதமான நகைக் கலைவடிவங்களை வடிவமைக்க இந்த மிக மெல்லிய  தங்க மணிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நகைக் கலைவடிவமும் நுணுக்கமான, கைவினைத் திறமைக்கு சான்றாகும் மற்றும் இவை கோலாபுரின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

இந்த நகை டிசைன்களில் அடங்கியுள்ள பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையின் கதைகள் முக்கிய விழாக்களில் அவற்றிற்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்படும் கோலாபுரின் மணிகளால் ஆன தங்க நகைகள் சாதாரண ஆபரணத்தையும் மிஞ்சியது. இந்த நகையை வைத்திருப்பது என்பது, வரலாறு மற்றும் கைவினைக் கலைத்திறன் ஆகியவை இணைந்து, நீடித்து நிற்கும் கலாச்சார முக்கியத்துவத்தை உருவாக்கும் ஒரு பாரம்பரியத்தை வைத்திருப்பதற்கு சமம்.