Published: 07 ஜூலை 2017
தங்கத்தை வாங்கும் போது நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்
அப்படியானால், நீங்கள் தங்கம் வாங்க விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் அதை மிகவும் கவனமாக வாங்குகிறீர்களா? தங்கத்தை வாங்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான சில கேள்விகள் -
1. தங்கத்திற்கு BIS ஹால்மார்க் முத்திரையிடப்பட்டுள்ளதா?
இந்தியாவில் 13,700 BIS-ஹால்மார்க் ஷோரூம்கள் மற்றும் 435 BIS அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு செய்யும் மற்றும் ஹால்மார்க் முத்திரையிடும் மையங்கள், காணப்பட்டாலும், நாட்டின் பல பகுதிகளில் ஹால்மார்க் மையங்கள் இல்லை.
இருப்பினும், இப்போது சராசரியாக 30% நகைகள் ஹால்மார்க் முத்திரையிடப்படுகின்றன, இதில் 80% உயர் மதிப்புள்ளவைகளாகும் மற்றும் 10% குறைந்த மதிப்புள்ளவைகளாகும், மேலும் ஹால்மார்க் நகைகளின் தரம் சில ஹால்மார்க் மையங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையைப் பொறுத்து அமைகிறது.
நீங்கள் BIS (இந்திய தரநிலைகள் இலாக்கா) ஹால்மார்க் நகை விற்பனையாளரிடம் தான் தங்கத்தை வாங்குகிறீர்களா என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
நீங்கள் வாங்கிய நகையில் BIS ஹால்மார்க் முத்திரை இருக்கிறது என்பதை உறுதிப்பத்துவது மிகவும் முக்கியமாகும்.
ஹால்மார்க் நகைக் கடைகளின் முழு பட்டியலையும் BIS இணையதளத்தில் காணலாம்.
ஹால்மார்க் குறித்து உங்களிடம் ஏதேனும் புகார்கள் மற்றும் கேள்விகள் இருந்தால், நீங்கள் BIS –ஐ தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தங்கம் வாங்கும் போது BIS முத்திரை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
வாங்குபவர்களே எச்சரிக்கையாக இருங்கள். BIS-ஹால்மார்க் சான்றளிக்கப்பட்ட நகைகளின் பற்றாக்குறை குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது, இது வருடாந்திர நகை வாங்கல்களில் 60% -க்கும் அதிகமாகும். ஒரு சிறிய நகரத்தில் அல்லது உங்கள் கிராமத்தில் தங்கம் மலிவானதாக இருந்தாலும், அதில் ஹால்மார்க் முத்திரையிடப்படாவிட்டால், அதை வாங்க வேண்டாம்.
2. ஒரு கிராம் தங்கத்தின் விலையை சரிபார்க்கவும்
நீங்கள் வாங்குவதற்கு முன்னால் ஒரு கிராம் தங்கத்தின் விலையை சரிபார்க்க வேண்டும்.
நகை வரும் விதம் நகரத்திற்கு நகரம் மாறுபடுகிறது மேலும் இது பல்வேறு தங்க நகை வியாபாரிகள் சங்கங்களில் முடிவு செய்யப்படுகிறது. மிகப் பெரிய நகைக் கடைகள் எப்போதும் அதே விலையில் தான் விற்கின்றன.
தங்கத்தை வாங்குவதற்கு முன் ஒரு கிராம் தங்கத்தின் விலையை ஒன்றுக்கு மேற்பட்ட நன்கு அறியப்பட்ட ஷோரூமில் சரிபார்ப்பது நம்பகமானதாகும் அல்லது நீங்கள் நம்பகமான வலைத்தளங்களில் விலைகளை பார்க்கலாம்.
3. உண்மையில் உங்களுக்கு எவ்வளவு தங்கம் கிடைக்கும்?
தங்க நகைக் கடைக்காரர்களின் விலை போடும் முறை பொதுவாக சிக்கலானதாகும்.
ஒரு கிராம் விலை தவிர, வாங்குபவர் சேதாரத்திற்கும் பணம் கொடுக்க வேண்டும் (கணக்கிடும் முறை நகைக்கு நகை மாறுபடுகிறது இது நகைக் கடைக்காரருக்கு மட்டும் தான் தெரியும்). மேலும், சில சந்தர்ப்பங்களில் செய்கூலியும் கொடுக்க வேண்டும். ஒரு நகைக்கு காசு கொடுத்து முடித்ததும், செய்கூலி மற்றும் சேதாரம் விலைப் பட்டியலிலிருந்து காணாமல் போய் விடுகிறது, ஆனால் அது உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தவில்லை, இல்லையா?
நீங்கள் செலுத்திய விலைக்கு எவ்வளவு தங்கம் உங்கள் கைக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறிவதே அதை தெளிவாக புரிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
உதாரணமாக, ஒரு 10 கிராம் தங்க சங்கிலிக்கு இறுதி விலை ரூ 30,000 எனில், நீங்கள் கிராமிற்கு ரூ. 3000 செலுத்தியிருக்கிறீர்கள் அந்த நாளுளில் ஒரு கிராம் தங்கத்திற்கான விலையைப் பார்க்கவும் மற்றும் இன்னும் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பார்க்கவும். உங்கள் இதயம் இன்னும் இந்த கணக்கில் ஒட்டியிருந்தால் மட்டுமே கணக்கிட்டுப் பார்க்கவும்.
4. தங்கத்தை திரும்ப வாங்கும் விதிகளை சரிபார்க்கவும்
மேலும், நீங்கள் பின்னால் ஒரு நாளில் புதிய டிசைனுக்கு மாற்றிக் கொள்வதற்காக நகைகளை திருப்பிக் கொடுத்தால் நகைக் கடைக்காரர் என்ன விலை கொடுத்து வாங்குவார் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ளவும்.
இன்று பெரும்பாலான பெரிய நகைக் கடைகள் அன்றைய விலைக்கே திரும்ப வாங்கிக் கொள்வதாக சொல்கிறார்கள், நீங்கள் இந்தப் பாதையை தேர்ந்தெடுப்பீர்களா.
அதாவது சேதாரம் அல்லது செய்கூலிக்கு நீங்கள் செலுத்தியதை திருப்பித் தரமாட்டார்கள் ஆனால் அன்றைய விலைக்கு உத்தரவாதமளிப்பார்கள்.
மேலும், மாற்றிக்கொள்ள மற்றும் திருப்பி வாங்க ஏதேனும் காலம் மற்றும் கொள்கை இருக்கிறதா என பார்க்கவும் மற்றும் அவற்றை அறிந்து வைத்துக் கொள்ளவும். புகார் செய்வதற்கான காரணம் ஏதேனும் உங்களிடம் இருந்தால் இது நீங்கள் திருப்பிக் கொடுக்கலாம் என்பதை உறுதிப்படுத்தும்.
5. தயவுசெய்து பில் கேட்டு வாங்குங்கள்
இவை அனைத்தையும் உறுதிப்படுத்த, பில்லை கேட்டு வாங்க வேண்டும்.
ஆமாம், நீங்கள் மதிப்புக் கூட்டு வரி செலுத்த வேண்டும்; நீங்கள் ரூ. 50,000 க்கும் அதிகமாக வாங்கியிருந்தால் உங்கள் நகைக் கடைக்காரரிடம் உங்கள் PAN விவரங்களை கொடுக்க வேண்டும்.
ஆனால் வாங்கும் பொருளின் முக்கிய விவரத்தையும் குறிப்பிடும் ஒரு பில் நீண்ட காலத்திற்கு வெளிப்படைத் தன்மையையை உறுதிப்படுத்தும் மற்றும் உத்தரவாதமளிக்கும். ஒருவேளை நீங்கள் ஒரு நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டிதிருந்தால், அது உங்களுக்கு உதவும்.
நாட்டில் மிகவும் வெளிப்படையான தங்கச் சந்தையை உருவாக்குவதில் உங்கள் பங்களிப்பும் அவசியமாகும்.