Published: 31 ஆக 2017
உங்கள் முதலீட்டுப் பட்டியலில் தங்கம் இருக்க வேண்டியதற்கான ஐந்து காரணங்கள்
நல்ல முதலீட்டு முடிவுகள், தங்களின் நீண்டகால நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய தனிநபர்களுக்கு உதவுகின்றன. சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகர்கள் மற்றும் சொத்து முதலீட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவை பொதுவாக சொத்துக்களை கலவையாக முதலீடு செய்யப் பரிந்துரைக்கிறது, இவை ஏதாவது ஒரு வகையான சொத்தில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட உதவும். கடந்த பல ஆண்டுகளாக, அத்தகைய சிறந்த பரவலாக்கக் கருவிகளில் ஒன்றாக தங்கம் உள்ளது.
முதலீட்டிற்காகவும் மற்றும் சொத்துக்கள் இழக்கப்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு நல்ல தேர்வாகவும், தங்கம் பிரபலமானதற்கான ஐந்து காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
-
பணவீக்க பாதிப்பில் இருந்து தங்கம் பாதுகாக்கிறது
பல ஆண்டுகளாக பண வீக்கத்தை தங்கம் திறம்பட சமாளித்து வருகிறது, 2013ஆம் ஆண்டில் நாம் பார்த்தால், தங்கத்தின் விலையானது 10 கிராமுக்கு அதிகபட்சமாக ரூ.33,000 எனவும் மற்றும் குறைந்தபட்சமாக ரூ.27,000 எனவும் இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை இரட்டிப்பாகி உள்ளது, மேலும் கடந்த தசாப்தத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒவ்வொரு சேமிப்பு முறையும் வருமானத்தை வழங்காத நிலையில், வட்டி விகிதத்தை விட பணவீக்க விகிதம் அதிகரிக்கும் போது, தங்கச் சிறந்த சேமிப்பாக இருக்கிறது. அதேபோல், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தங்கத்தின் வருடாந்திர வருமானமானது பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளது. தங்கம் என்பது தனிநபர்களுக்கு ஒரு உண்மையான வருமானத்தை வழங்கியுள்ளது என்பது இதன் அர்த்தம் ஆகும்.
-
தங்கமானது முதலீட்டாளர்களுக்கு ஆபத்தைக் குறைக்கும் கணிசமான வருமானத்தை வழங்குகிறது
முறையான சொத்து ஒதுக்கீடு மூலம், பிணையப் பத்திரங்களின் வருமானத்தில் ஏற்படும் அபாயம் அல்லது பங்குகளின் விலை வீழ்ச்சி ஆகியவற்றை ஈடுசெய்ய தங்கம் உதவுகிறது. தங்கமானது, வெவ்வேறு நேரங்களில் கடன் பத்திரம் மற்றும் பங்கு ஆகியவற்றோடு குறைவான எதிர்மறை தொடர்பை பகிர்ந்துகொள்கிறது; இந்த மூன்று சொத்து முதலீடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து செயல்படாது. எனவே, உதாரணமாக, பங்கு வீழ்ச்சி அடைந்தால், தங்கம் அதை சமப்படுத்தி, உங்கள் அபாயத்தைக் குறைக்கிறது.
-
ஒரு நாட்டின் நாணயத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அல்லது மதிப்பு இழப்புகளை தங்கம் ஈடுசெய்கிறது
நுண்பொருளியல் காரணிகள் காரணமாக உள்ளூர் நாணயமானது ஏதாவது பெரிய வீழ்ச்சியை எதிர்கொண்டால், தங்கமானது முதலீட்டாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக செயல்படுகிறது. இந்திய நாணயங்களானது 2013-2014ஆம் ஆண்டில் கடுமையான அழுத்தத்திற்கு உட்பட்டபோது, அனைத்து முக்கிய உலக நாணயங்களும் தங்கத்தின் விலையின் அடிப்படையில் ரூபாயை ஏற்றுக்கொண்டது.
-
சிக்கல் நேரங்களில் உதவி
நிதி நெருக்கடி காலங்களில் பல முதலீட்டாளர்கள் தங்கத்தை பயன்படுத்துகின்றனர். 1990களின் முற்பகுதியில், மீதமுள்ள கடன்களை அடைப்பதாக, சர்வதேச பண நிதியத்திடம் (IMF) உறுதியளிப்பதற்காக, இந்திய அரசாங்கமானது தேசிய தங்க சேமிப்புகளை ஏலமிட்டது. நிதி நெருக்கடி காலங்களில் குடும்பத்தினர்களும் இந்த விலைமதிப்பற்ற உலோகத்தை விற்கின்றனர் அல்லது அடமானம் வைக்கின்றனர். இது சிக்கலான நேரங்களில் ஆபத்பாந்தவனாக உதவுகிறது.
-
தங்கத்தின் மூலம் அபாயத்தைக் குறைக்கலாம் மற்றும் செல்வத்தை உருவாக்கலாம்
முதலீட்டு வாய்ப்பான தங்கமானது ஆபத்தைக்-குறைத்தல் மற்றும் செல்வத்தை உருவாக்குவதல் என இரட்டை நன்மைகளை வழங்குகிறது. பொருளாதார நெருக்கடி அல்லது புவிசார் அரசியல் அழுத்தங்கள் என எதுவும் இல்லாவிட்டாலும் கூட, இந்த விலைமதிப்பற்ற உலோகமானது நீண்டகால நோக்கில் நல்ல வருமானத்தை கொடுக்கிறது. அதன் கடந்த கால வரலாற்றால் அது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளாதார அல்லது அரசியல் சீரழிவு ஏற்பட்டால், பங்குகளின் மூலம் ஏற்படும் மூலதன இழப்புகளுக்கு எதிராக, அது சரியான முதலீட்டுத் தேர்வை வழங்குகிறது.