Published: 18 ஆக 2017

சிறுபொருட்களிலிருந்து துணைபொருட்கள் வரை 8 மிகவும் மதிக்கத்தக்க தங்கப் பொருட்கள்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல, ஆனால் இந்த 8 மின்னும் பொருட்களும் நிச்சயமாக பொன்தான்.

உலகெங்கும் உள்ள அதிக மதிப்பிற்குரிய 8 தங்கப் பொருட்கள்

 
  1. தங்கம் மற்றும் கறுப்பு வைர ஸ்மார்ட்ஃபோன்

    பயன்படுத்தப்படும் இடம்: சீனா

    விலை: $15 மில்லியன்

    கண்டுபிடித்தவர்: ஸ்டுவர்ட் ஹூக்ஸ்

    • 135 கிராம்கள் எடை அளவு கொண்ட இந்த 24 காரட் தங்கம் கொண்ட அழகிய பொருளைப் பெற்றிருப்பவர் ஒரு சீனக் கோடீஸ்வரர்
    • இந்த ஃபோனின் தரம் உயர்த்தப்பட்ட மாதிரி $23 மில்லியன் விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  2. சூப்பர் சிக்கல்கள் கொண்ட தங்க பாக்கெட் கடிகாரம்h

    முதலில் பயன்படுத்தப்படும் இடம்: நியூயார்க், அமெரிக்கா

    விலை: $24 மில்லியன்

    கண்டுபிடித்தவர்: படேக் ஃபிலிப்பி

    • இரண்டு நண்பர்களுக்கு இடையிலான போட்டியின் வெளிப்பாடாக வந்த இந்தக் கடிகாரம் செல்வ தோரணை மிக்கது. நேரம் உண்மையிலேயே பொன்னானது என்று நிரூபிப்பது.
    • சூப்பர் சிக்கல்கள், என்று இந்த கடிகாரம் பெயரிடப்பட்டிருப்பது பொருத்தமானதுதான். ஏனெனில் இது வரை உருவாக்கப்ட்ட இயந்திரவியல் பாக்கெட் கடிகாரங்களியே அதிக சிக்கல் நிறைந்த கடிகாரங்களுள் இதுவும் ஒன்று.
    • காலிபர் 89 என்று அழைக்கப்படும் இந்த கடிகாரத்தின் எடை ஒரு பவுண்ட். இது 73.2 மிமீ. அகலம் அளவிற்கு தங்கம் கொண்டுள்ளது.

    Elegant Gold Watch

  3. வெள்ளை தங்கத்தினால் செய்யப்பட்ட சீட்டாட்ட பெட்டி

    உற்பத்தி செய்யப்பட்ட இடம் : ஹெர்ட்ஃபோர்ட்ஷைர், இங்கிலாந்து

    விலை: $7.5 மில்லியன்

    கண்டுபிடித்தவர் : ஜியோஃப்ரே பார்க்கர்

    • இந்த சீட்டாட்டப் பெட்டியில் தங்கம் மற்றும வைர சீட்டுக்கள் இருப்பதால், இதனை எடுக்கும்போது விளையாடுபவரின் உற்சாகம் வேறு எல்லைக்குச் செல்லும்.
    • இந்தப் பெட்டியில் 384, 18 காரட் தங்க சிப்புக்கள் உள்ளன. இதன் மொத்த எடை 12.5 கிலோ.

    Poker Set Made Of White Gold

  4. புகாட்டி வெய்ரான் டைமண்ட் லிமிடெட் மாதிரி கார்

    உற்பத்தி செய்யப்பட்ட இடம்: லிவர்பூல், ஐக்கிய குடியரசு

    விலை: $4 மில்லியன்

    கண்டுபிடித்தவர்: ஸ்டூவர்ட் ஹூக்ஸ் மற்றும் ராபர்ட் கல்பர்

    • 24 காரட் சுத்த தங்கத்தில் செய்யப்பட்ட இந்த சிறிய காரை செய்வதற்கு இரண்டு மாதம் தேவைப்பட்டது.
    • இந்த ஒட்டுமொத்த பொம்மை காரின் எடை தோராயமாக 7 கிலோகிராம்

    Bugatti Veyron Model Gold Car

  5. கனடாவைச் சார்ந்த மாபெரும் தங்க எலிசெபெத் நாணயம்

    தற்போதைய இடம்: தெரியாது

    விலை: $997,000

    கண்டுபிடித்தவர்: கனடா

    • 100 கிலோ எடையுள்ள இந்த தங்க நாணயமானது, எலிசபெத் மகாராணி மற்றும் மேப்பிள் இலையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் ஓர் அவுன்சு புல்லியன் நாணயங்களை வளர்க்க இந்த நாணயம் அச்சடிக்கப்பட்டது.
    • இந்த நாணயத்தின் முக மதிப்பு 1 மில்லியன்னாக இருந்தாலும், தற்போதைய இதன் மதிப்பு குறைந்த பட்சம் $5 மில்லியன்
    • 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெர்லினின் போட் அருங்காட்சியகத்திலிருந்து இந்த தங்க நாணயம் திருடுபோயுள்ளது.

    Giant Canadian Gold Coin

  6. மேசை மீது வைக்கக்கூடிய தங்க கிறிஸ்துமஸ் மரம்

    தற்போதைய இடம்: தெரியாது

    விலை: $500,000

    கண்டுபிடித்தவர்: ஸ்டீவ் க்விக்

    • நிதி சேர்க்கும் திட்டத்திற்காக இந்த 2 கிலோ தங்க மரம் வடிவமைக்கப்பட்டது.
    • அதனை ஒரு நெக்லசுடன் இணைத்து ஐஸ்வர்யத் தோற்றம் அளிக்கும் மரமாக மாற்றலாம்.

    Gold Tree For Christmas

  7. க்ளிக் தங்க கண்ணாடிகள்

    விலை : $75,000

    கண்டுபிடித்தவர்: ரோன் லான்டோ

    • 18 காரட் மதிப்பில் செய்யப்பட்ட இந்த தங்க கண்ணாடிகளை செய்வதற்கு 50 உழைப்பாளி நேரம் தேவை.

    Gold Glasses For Reading

  8. தங்க ஃபீனிக்ஸ தங்க கப்கேக்

    இடம்: துபாயில் உள்ள ப்ளூம்ஸ்பரியின் கப் கேக்குகள்

    விலை: $972

    கண்டுபிடித்தவர்: துபாயில் உள்ள ப்ளூம்ஸ்பரியின் கப்கேக்குகள்

    • தங்கத் தாள்களில் செய்யப்படும் இந்த உணவுப் பொருட்கள், தங்கமுலாம் பூசப்பட்ட வண்டியில் பரிமாறப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட கேக்கானது சிறந்த விளைவைத் தருகிறது.

    Cupcake With Gold Garnish

Sources:

Source1, Source2, Source3, Source4Source5, Source6, Source7, Source8, Source9, Source10, Source11, Source12, Source13, Source14