Published: 04 செப் 2017
மறுசுழற்சி காரணமாக, உலகத்தில் தங்கம் எப்போதும் தீராது
தங்கம் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பது போல் தோன்றலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அஸ்டெக்குகள் மற்றும் எகிப்தியர்கள் போன்ற பழங்கால நாகரிகங்களானது தங்கத்தைப் பரவலாக பயன்படுத்தின மற்றும் தயார்செய்தன. கி.மு 550-ல் முதல் தங்க நாணயம் தோன்றியிருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், ஆனால் கி.மு 1600-க்கு முன்பே பிற தங்கக் கலைப்பொருட்கள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த விலையுயர்ந்த உலோகம் எப்போதாவது தீர்ந்துவிடுமா என்பதே கேள்வியாகும்?
தங்கம் ஒரு பொருளாக இருக்கிறது, மேலும் பிற பொருட்களையெல்லாம் போலவே, நமது கிரகத்தில் இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கே கிடைக்கிறது. இருப்பினும், எவ்வளவு காலத்திற்கு தங்கத்தைத் வெட்டி எடுக்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் பொருட்டு, தங்கத்தைத் வெட்டி எடுக்கும் தொழிலின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வரம்புகளை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பூமியில் காணப்படும் அரிதான தனிமங்களில் தங்கமும் ஒன்றாகும், இது பூமியின் மேற்புறத்தில் ஒரு பில்லியனுக்கு 0.3 பாகங்களில் மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஒரு இடத்தில் 10 பில்லியன் ஒத்த மார்பிள்களை வைத்திருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்; அந்த மார்பிள்களில் 3 மட்டுமே தங்கம் ஆகும்.
தங்கத்தை வெட்டி எடுப்பது என்பது மிகவும் விலையுயர்ந்த மற்றும் அதிக உழைப்பு தேவைப்படும் செயல்முறை ஆகும். எனவே, இலாபகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை கொடுக்கப்பட்ட இடத்தில் அதிக அளவிலான தங்கத்தைக் கண்டறிய வேண்டும். மேலும், இலாபகரமாக இருக்கும் வகையில் உலகின் எந்தப் பகுதிகளில் தங்கத்தை வெட்ட வேண்டும் என்பதில் தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் பிற சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகள் ஆகியவை தாக்கம் செலுத்தும்.
இந்த சிக்கல்கள் கடந்த காலங்களில் இல்லாத காரணத்தினால், நமது முந்தைய சுரங்கங்களை முழுவதும் வெட்டியதை விட விரைவாக அதிக தங்கம் உள்ளவற்றை நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. எனினும், இது இப்போது மாறி வருகிறது. கடந்த 500 ஆண்டுகளில், மனிதர்கள் நமது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 173,000 மெட்ரிக் டன் தங்கத்தை எடுத்திருக்கிறார்கள். இவற்றில் சுமார் 50% தங்கமானது கடந்த 50 ஆண்டுகளில் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தியில் இந்த அதிவேகமான அதிகரிப்பு காரணமாக, தங்க சுரங்கங்களில், 'கீழ் தொங்கும் பழத்தில்' பெரும்பாலானவற்றை நாம் சுரண்டி விடுகிறோம். அதிக தங்க அளவுகள் கொண்ட இடங்களைக் கண்டுபிடிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியும், தேடலும் அதிகரித்து வரும் சூழலில், அதை வெட்டி எடுப்பது எளிதானதாக உள்ளது. இதனால் தங்கம் நமக்குக் கிடைக்காமல் போகும் என்று அர்த்தமில்லை, ஆனால் முன்னர் இருந்தது போல் தங்கத்தை நம்மால் வெட்டி எடுக்க முடியாது.
கோல்ட்மேன் சாக்ஸின் கருத்துப்படி, தங்கத்தின் தற்போதைய உற்பத்தி வீதத்தின்படி அடுத்த 18 ஆண்டுகளுக்கு (2035 வரை) உற்பத்தி செய்யக்கூடிய அளவிலான தங்க சுரங்கங்களை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். இது நீண்ட காலம் போல தோன்றலாம் என்றாலும், தங்க சுரங்கங்களைக் கண்டுபிடிப்பதற்கும், முதல் நாள் தங்கத்தை வெட்டி எடுப்பதற்கும் இடையே அதிக காலம் எடுத்துக்கொள்ளும். தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்னர், சாத்தியம் உள்ளதா என மதிப்பிடுதல், இணக்கத்தன்மை, உரிமங்கள், போன்ற பல்வேறு சரிபார்ப்புகள் மற்றும் ஒப்புதல்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதே இதற்குக் காரணமாகும்.
இந்த செயல்முறைக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கும் என்பதால், நம்முடைய வாழ்நாளில் பெரும்பாலும் தங்கம் இருந்துகொண்டே இருக்கும் என்று நாம் நம்பலாம். அந்த நேரத்தில் – நமது குடும்ப வழிவரும் தங்கங்களை நாம் வைத்திருப்போம்!