Published: 29 ஐன 2018
உங்களின் மந்தகாசப் புன்னகைக்குப் பின்னணியில் தங்கம் இருக்கமுடியுமா?
தங்கத்தை மீட்டெடுக்கும் வழிகளைப் பற்றி உங்களைக் கேட்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றும்? பழமையான நகைப் பெட்டிகள், தங்கச் சுரங்கங்கள், மீட்டெடுக்கப்பட்ட புதையல்கள்? நல்லது, நம்மில் பலர் இது போன்ற யோசனைகளைத் தான் பகிர்ந்து கொண்டிருப்போம். யரோ ஒருவரின் வாயைப் பற்றி நினைத்துப் பார்க்குமாறு உங்களிடம் கூறினால் என்னவாகும்? உங்களால் தங்கத்தைப் பற்றி யோசிக்க முடியும் என நான் நினைக்கவில்லை, யோசிப்பீர்களா?
சுத்தமான தங்கத்தில் மாஸ்க் அணிந்து உறங்கிய கிளியோபாட்ரா காலத்திலிருந்து சருமப் பிரச்சனைகளுக்கு தங்கம் பயன்படுத்தப்பட்டது வரையிலும் மேலும் இளமையை மீட்டெடுக்கும், புத்துணர்ச்சி அளிக்கும் மற்றும் பூவுலக நோய்களை உடலிலிருந்து அகற்றும் திறனைத் தங்கம் கொண்டுள்ளது என்று நம்பிய அலெக்ஸாண்ட்ரியாவின் ரசவாதிகளால் திரவத் தங்கத்தால் அமுதம் உருவாக்கப்பட்டது என, இந்த மதிப்புமிக்க உலோகம் நீண்ட நெடிய வரலாற்றைக் கடந்து வந்துள்ளது. பல ஆண்டுகளாக, அழகை மெருகேற்றுவதில் பலனளிக்கக்கூடியது என்ற பெயரைத் தங்கம் பெற்றுள்ளது. இன்றைக்கு, அழகுப் பொருள் உற்பத்தியாளர்கள் தங்களுடைய சீரம்கள், எண்ணெய்கள் மற்றும் முகத்திற்கான கிரீம்களில் தங்கத்தைச் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள், இது ஆரோக்கியமான திசுக்களை மறுஉருவாக்கம் செய்யும், திசு வளர்ச்சியைத் தூண்டும் என்று எண்ணப்படுகிறது. இன்னும் என்ன? பண்பாட்டு ரீதியில் பாராட்டப்பட்டவர்களில் சிலரும், பிரபலங்களில் சிலரும் தங்கள் புன்னகையில் ஜொலிப்பைச் சேர்ப்பதற்கு தங்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதுபோன்ற மதிப்புமிக்க ஒரு பொருளை வாயில் ஏன் பயன்படுத்தவேண்டும்? ஏனென்றால், மற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் தங்கம் துருப்பிடிக்காதது, இணக்கமானது, பாதுகாப்பானது மற்றும் நிலையானது என்பதால் பல்மருத்துவத்தில் அது பயன்படுத்துப்பட்டது.
நம்முடைய பற்கள் காலப்போக்கில் பல்வேறு தேய்மானங்களுக்கு ஆளாகிறது, அது போன்றதொரு விஷயத்தைத் தாங்குவதற்கு நமக்கு இயற்கையான பல்லைப் போன்றதொரு உலோகம் தேவை. மனிதப் பற்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை பிற உலோகங்களை விட தங்கம் நன்கு தாங்கும் மேலும் அது நீடித்துழைக்கும். தங்கப் பற்கள், 40-50 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது. உங்கள் வாயில் சரியான வகை உலோகத்தைப் பயன்படுத்தவேண்டும் மேலும் அது நிலையற்றதாக இல்லாமல் அல்லது நச்சுத்தன்மையற்றதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தங்கம் நிலைத்தன்மை கொண்டது, சுற்றியுள்ள பற்களுக்குத் தீங்கு விளைவிக்காது, மேலும் அதற்கு நேரெதிரில் உள்ள பல்லையும் சிதைப்பதில்லை, ஆகவே இது பாதுகாப்பான தெரிவாகக் கருதப்படுகிறது.
காலப்போக்கில், தங்கத்தின் அழற்சி எதிர்ப்பு மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் காரணமாக பல் ஈறு நோய்களை குணப்படுத்தவும் அது உதவுகிறது என்பதை ஆய்வில் கண்டறிந்தனர். இதனுடன் கூட, அதனுடைய நுண்ணுயிரி எதிர்ப்புப் பண்புகளால் வாயின் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. தங்கம் குறைந்த ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படும் வாய்ப்பைக் குறைவாகக் கொண்டுள்ளது. ஈறுகளாலும் பிற திசுக்களாலும் அது நன்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அது உடல்நலப் பிரச்சனைகள் எதையும் உண்டாக்குவதில்லை மேலும் அதை மாற்றுவதிலும் பிரச்சனை இல்லை.
தங்கத்தின் இந்த எல்லா பண்புகளும் தான், உங்கள் மந்தகாசப் புன்னகைக்கு சிறந்த பொருளாக அது இருக்க வழிவகுக்கிறது.