Published: 27 செப் 2017
தங்கத்தின் கண்டுபிடிப்பு
கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்ட முதல் உலோகமாக தங்கம் இருந்ததா? இது மிகவும் அடிக்கடி கேட்கப்பட்ட ஒரு கேள்வி ஆகும், ஆனால் இதற்கு திருப்திகரமாக பதில் அளிக்கப்படவில்லை.
ஆரம்பத்தில், தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட தளத்தில், அவை பிரித்தெடுக்கப்பட்டு, செயலாக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியம் உள்ளது; பிற்பகுதியில், அது மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். தங்கம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும், அதே மாதிரியாகவே இருக்கும், எனவே தொல்பொருள் அறிவியலாளர்கள் மற்றும் மானுடவியல் நிபுணர்கள் ஆகியோருக்கு கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களில் இருந்து அதன் தோற்றத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.
இன்று நமக்குத் தெரியவந்துள்ள மிகவும் பிரபலமான கலைப்பொருட்கள் சிலவற்றைக் கவனியுங்கள்: கிமு 14ஆம் நூற்றாண்டு காலத்திற்கு முந்தைய 1902ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டின் ட்ருண்ட்ஹோமில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சூரிய ரதம்; ஜெர்மனியின் ஹல்லே அருகில் உள்ள நெப்ராவில் கண்டுபிடிக்கப்பட்ட ஏறக்குறைய 3,200 ஆண்டுகள் பழமையான வட்டு என்பது சூரிய இரத கால கலாசாரத்திலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. வெண்கல காலத்தில், கிழக்கில் உதித்து, அதே நாளில் மேற்கில் மறைந்து, மீண்டும் அடுத்த உதயத்தில் மீண்டெழும் சூரியக் கடவுளே மரித்தோரின் கடவுளாகவும் கருதப்பட்டார்.
பல தசாப்தங்களாக, பழைய எகிப்து அல்லது மெசொப்பொடாமியா (ஈராக்கின் பெரும்பகுதி, ஈரான், சிரியா மற்றும் துருக்கியின் சில பகுதிகள்) நாடுகளில் இருந்து, கிமு நான்காம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த பழங்காலத் தங்கக் கலைப்பொருட்கள் வந்ததாக பெரும்பாலான தொல்பொருள் வல்லுநர்கள் நம்பினர். ஆனால் சமீபத்தில், பல்கேரியாவில் உள்ள வார்னாவில் உள்ள ஒரு செப்பு காலகட்டத்தைச் சேர்ந்த கல்லறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களில், 13 பவுண்டுகள் கனமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கி.மு. 4400 முதல் கி.மு. 3900 வரையிலான ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கூறப்படுகின்றன.
2005-ல், பல்கேரியன் அகாடமி ஆஃப் சயின்ஸ்ஸில் உள்ள விஞ்ஞானிகள், ஆற்றுப்படுகை படிமங்களில் உள்ள தங்க இருப்புகளைப் பற்றி அய்வு செய்யும்போது, மோதிரங்கள், சங்கிலி இணைப்புகள் மற்றும் உருகிய துண்டுகள் ஆகியவற்றை மணலில் கண்டறிந்தனர். கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய இவை, பண்டைய எகிப்திய தங்கக் கலைப்பொருட்கள் விட பழமையானதாகும்.
வெண்கல காலகட்டத்தின் (சுமார் கிமு 3000 முதல் 1200வரை) தங்கக் கலைப்பொருட்களானது அயர்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளன; இவற்றில் பிறை-நிலா வடிவிலான காலர்கள் என்றழைக்கப்படுகின்ற லுனுலே என்பது, எளிமையான செதுக்கல்களுடன் தங்கத்தின் மெல்லிய தகடுகளால் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களானது 4000க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையானவையாகும்! 1897ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட ஹங்கேரியில் உள்ள ஒரு கல்லறையானது, சிங்கங்கள் மற்றும் எருதுகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தின் தகடுகளால் முழுவதும் போர்த்தப்பட்டிருந்த எலும்புக்கூட்டைக் கொண்டிருந்தது, இது பொதுவாக ஆற்றல்மிக்க வலிமை மற்றும் வளமையின் சின்னங்களாக கருதப்பட்டது.
அல்லது மத்திய அமெரிக்காவின் இன்காஸ் பகுதியில் நம்பப்படுவது போன்று, தங்கம் என்பது சூரியக் கடவுளின் கண்ணீரால் செய்யப்பட்டதாகும்.