Published: 16 ஆக 2017
தங்கத்துடன் பயணிக்கும்போது நீங்கள் தெரிந்துகொள்ளக்கூடிய அனைத்தும்
தங்கத்தின் மினுமினுப்பு எல்லைகளைத் தாண்டும். ஆனால் தாண்டும்போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கத்துடன் பயணிக்கும்போது பயணிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு கேள்விகள் உள்ளன. அதிக அளவிலான தங்கத்துடன் சர்வதேச எல்லைகளை தாண்டுவது சட்ட ரீதியானதா? அதனை நீங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியது அவசியமா? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை ‘ஆம்’ என்பதுதான். நீங்கள் தங்கம் மற்றும் இதர உலோகங்களுடன் பயணம் செய்ய முடியும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வரம்பு உண்டு. அதனை கடந்தால் நீங்கள் அதனை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை எல்லாம் இங்கேயே உள்ளன.
இந்தியாவிற்குள் பயணிக்கும்போது ஏற்படக்கூடிய தங்கத்தின் மீதான சுங்கத் தீர்வைகள்
இந்தியாவில் நீங்கள் தங்க நகைகளின் மீது சுங்கத் தீர்வை கட்டுவதில்லை. ஆனால் தங்க கட்டிகள், பிஸ்கட்டுகள், நாணயங்களாக இருந்தால் தீர்வை கட்டவேண்டும். தீர்வை இல்லாத ஒதுக்கீடு ஆண்களுக்கு ரூ.50,000 வரையிலும் பெண்களுக்கு ரூ.1 இலட்சம் வரையிலும் அளிக்கப்படும். ஆறு மாதங்களோ அல்லது அதற்கு அதிகமாகவோ வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்குள் 1 கிலோ தங்கம் வரை கொண்டு வரலாம். ஆனால் இதற்கேற்ற சுங்கத் தீர்வைகளைக் கட்ட வேண்டும். பயணிகள் தற்போது 10% தங்க வரியை செலுத்துகின்றனர். ஒரு பயணி சுமந்து செல்ல அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு இது பொருந்தும்.
நீங்கள் ஒரு கிலோ தங்கத்தை சுமந்து சென்றால் என்ன நடக்கும்? அப்படி என்றால் அதிகபட்ச அளவிற்கு ஏற்றவாறு 36.05% வரியை செலுத்த வேண்டும். சுங்கத்துறை அதிகாரிகள் எந்தவிதமான காரணமும் இல்லாமல் உங்கள் தங்கத்தை பறிமுதல் செய்ய மாட்டார்கள். அப்படி என்றால் தங்கத்தை நாட்டிற்கு உள்ளும் வெளியேயும் எடுத்துச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை.
இந்தியாவிலிருந்து வெளியே தங்கத்தை கொண்டு செல்லும்போது உள்ள விதிகள் (Rules when carrying gold out of India)நீங்கள் இந்தியாவில் தங்க நகை வாங்கி அதனை வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றால் நீங்கள் எந்தவிதமான சுங்கத் தீர்வையும் கட்ட வேண்டியதில்லை. ஏனெனில் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லப்படும் தங்கம் தனிப்பட்ட பயன்பாட்டிற்குத்தானே ஒழிய வணிகக் காரணங்களுக்காகக் கிடையாது. இதனை உங்கள் சரக்கு பெட்டியில் எடுத்துச் செல்ல முடியாது. நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்லும் தங்கத்திற்கு எந்த விதமான உச்ச கட்ட வரம்பும் கிடையாது. ஆனால் அதனை நீங்கள் மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவர நினைத்தால் நீங்கள் அதற்கு சுங்கத்தீர்வை கட்ட வேண்டியிருக்கும். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, சுங்கத் துறையிடமிருந்து நீங்கள் ஏற்றுமதி சான்றிதழைப் பெறலாம். நீங்கள் இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லும் தங்கத்தின் அளவு குறித்த விவரங்கள் அனைத்தும் இதில் இருக்கும். ஆகவே, நீங்கள் சில மதிப்புள்ள பொருட்களுடன் இந்தியாவிற்குள் நுழையும்போது உங்களுக்கென எந்தவிதமான தீர்வையும் அளிக்கப்படாது. இந்தியாவிலிருந்து வெளியே பயணிக்கும்போது இந்தியாவில் வாங்கிய தங்க நகைக்கான ரசீதை வைத்திருப்பது புத்திசாலித்தனம். சுங்கத்துறை அதிகாரிகள் கேட்கும்போது இவை உதவியாக இருக்கும்.
இந்தியாவிலிருந்து வெளியே தங்கத்தை எடுத்துச்செல்லும்போது பல்வேறு விதிமுறைகள் பொருந்தும். நீங்கள் எந்த நாட்டிற்கு பயணம் செய்யப்போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தவிர்க்க, ஒரு நாட்டிற்குப் பயணிக்கும் முன், அந்நாட்டில் உள்ள விதிமுறைகளை தெரிந்துகொள்ளவும். வான்சேவை வலைதளங்களும் அந்த நாட்டின் வலைதளங்களும் அந்த நாட்டிற்கு எவ்வளவு தங்கத்தை எடுத்துச் செல்லலாம், எந்தவிதமான சட்ட ஆவணங்கள் தேவைப்படும், இதற்கான சுங்கத் தீர்வை என்ன, தேவைப்பட்டால் உங்களது பொருட்களின் மதிப்பு குறித்து தெரிவிக்க வேண்டியவை ஆகியவை குறித்த தகவல்கள் இதில் இருக்கும்.
எடுத்துக்காட்டாக :
- அமெரிக்காவிற்குப் பயணிக்கும்போது USA, தங்க நாணயங்கள், பதக்கங்கள், புல்லியன்கள் ஆகியவற்றிற்கு எந்த விதமான தீர்வையும் கிடையாது. ஆனால் அவற்றை அந்நாட்டுச் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். நாணயங்கள் போலியாக இருக்கக்கூடாது. அதை வெளியிட்ட நாட்டின் முத்திரையைப் பெற்றிருக்க வேண்டும். இந்த தங்க நாணயங்கள் பணப்பரிமாற்ற உபகரணங்களாக பயன்பட்டால், அவற்றின் மதிப்பு 10,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருந்தால் பின்னர் FinCEN 150 படிவத்தை பூர்த்தி செய்து, நுழையும் சமயம் சுங்கத்துறை அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.
- ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும்போது, தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் புல்லியன்களை உங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எடுத்துச் சென்றால், இறக்குமதி உறுதி மொழி தேவையில்லை. ஆனால் அந்த தங்க நகையின் மதிப்பு 10,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு குறைவாக இருக்கவேண்டும. சுயமதிப்பு தூய்மை கொண்ட உறுதிமொழி (self-declared clearance declaration) அளிக்கப்பட வேண்டும். இதன் மதிப்பு 1,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருந்தால், பின்னர் இறக்குமதி உறுதிமொழி தேவைப்படும். தங்க நகையின் காரணமும் இங்கு முக்கிய பங்காற்றும். முதலீட்டு காரணங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் பல்வேறு விதமான விதிமுறைகள் தேவைப்படும்.
நீங்கள் உள்ளே வருவதென்று திட்டமிட்டப் பிறகு உங்களது தங்க நகையை ஒரு பையில் வைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் கையில் வைத்திருக்கும் கைப்பையில் வைத்திருங்கள். சில சமயங்களில் சுங்கத்துறை அதிகாரி உங்களது பைகளை சோதிக்க விரும்புவார். சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்கவும் தவறான பிரயோகத்தை தடுக்கவும் அவர்கள் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, நீங்கள் குறிப்பிட்ட தொகையை விட அதிகமான தங்கத்தை எடுத்துச் செல்கிறீர்களா என்று அவர்கள் சோதிக்க விரும்பலாம். இந்த வகையில் ஒரு தனியான அறையைக் கேளுங்கள். உங்களது பையில் தங்கம் இருப்பது மற்ற பயணிகளுக்கு தெரியாமல் இருக்க இது உதவும்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக தங்கத்தை நீங்கள் வைத்திருந்தால், அதற்கேற்ற காகித பணிகள் உங்களிடம் இருக்கிறது என்று உறுதி செய்துகொள்ளவும். இதில் ஒரு ரசீதோ விலைபட்டியலோ அடக்கம். ஒரு நேர்த்தியான உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்வது அவசியம். இங்கு ஒவ்வொரு தங்கப் பொருளையும் நீங்கள் எடுத்துச் செல்லும் பிற பொருட்களையும் நீங்கள் பட்டியலிட வேண்டும்.நீங்கள் எடுத்துச் செல்லும் பொருட்களின் மதிப்பும் நீங்கள் உறுதிமொழி அளித்த தொகையும் பொருந்த வேண்டும். இல்லையென்றால் சுங்கத்துறை அதிகாரிகள் உங்களை கேள்வி கேட்பார்கள். உங்கள் எண்ணத்தை சந்தேகிப்பார்கள்.