Published: 14 ஜூன் 2019
அவருடைய ஆளுமையின் அடிப்படையில் தந்தையர் தின பரிசுகள்
தந்தையர் தினம் நெருங்கி வருவதால், உங்கள் அப்பாவுக்கு ஒரு சிறந்த பரிசை நீங்கள் தேடிக்கொண்டிருக்கலாம். பல ஆண்டுகளாக அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவர் உங்களுக்காக செய்தவற்றுக்கெல்லாம் நீங்கள் எந்த அளவுக்கு அவரை மதிக்கிறீர்கள் என்பதை எப்படி வெளிப்படுத்துவது என்ற குழப்பம் உங்களுக்கு மட்டுமன்றி, பலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.
குழந்தைகளாக இருந்தபோது, “என் அப்பாவைப் போல யாருமில்லை” என்று நீங்கள் பெருமையாகப் பேசி இருப்பீர்கள், ஒரு சிறந்த பரிசை அவருக்கு பரிசளிக்க இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு தந்தைக்கும் தனித்தன்மையான ஆளுமையும் ரசனையும் இருக்கிறது, அது மற்றவர்களிடமிருந்து அவரை தனித்து காட்டுகிறது மற்றும் உங்களுக்கு மிகவும் அன்பானவராக்குகிறது. எனவே, அவருடைய ஆளுமைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பரிசைத் தேர்ந்தெடுத்து இந்த தந்தையர் தினத்தை சிறப்பித்து மகிழுங்கள். ஆக, இந்த நாளை தங்கப் பரிசு மூலம் நினைவுகூரத்தக்கதாக மாற்றுங்கள்.
தங்கம் எல்லா கலாச்சாரங்கள் மற்றும் தலைமுறைகளாக அதன் மதிப்பு மற்றும் அடையாளத்திற்காக அறியப்படுகிறது. தங்கத்தை பரிசளிப்பது அன்பு, மரியாதை மற்றும் மதிப்பை வெளிப்படுத்துவதாகும். இது ஆபரண மதிப்பை மட்டும் கொண்டிருக்கவில்லை, ஆனால் இது முதலீட்டின் மற்றொரு வடிவமாகும், ஏனென்றால் அது நிலையற்ற காலங்களில் கூட அதன் நிதி மதிப்பை தக்க வைத்துக் கொள்கிறது.
தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அப்பா
உங்கள் தந்தை தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இருப்பவாக இருந்தால், அவருக்கு டிஜிட்டல் தங்கத்தை பரிசளிப்பதன் மூலம் அவரை கவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் அவருக்கிருக்கும் நிபுணத்துவம் உங்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு நுட்பமான வழியாகும் மேலும், அவருக்கு நன்றி செலுத்தும் ஒரு சிறந்த வழியுமாகும்!
எதற்காக டிஜிட்டல் தங்கம்?
டிஜிட்டல் கோல்ட் டின்பது தங்கம் வாங்குவதற்கான வசதியான மற்றும் செலவு குறைந்த வழியாகும். நீங்கள் ஆன்லைனில்24 கேரட் தங்கத்தை எவ்வளவு சிறிய பின்னங்களாக வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம் அல்லது சேகரிக்கலாம். இணையத்தில் வாங்கும் ஒவ்வொரு கிராமும் உண்மையன திட வடிவ தங்கத்திற்கு சமமானதாகும். சந்தையுடன் தொடர்புடைய தங்க விலை நிலவரத்திற்கு அந்தத் தங்கத்தை இணையத்தில் வணிகம் செய்யலாம்.
எனவே, டிஜிட்டல் தங்கம் அதன் நிலைப்புத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையால் தொழில்நுட்ப ஆர்வலரான மற்றும் பகுப்பாய்வு மனப்பான்மை கொண்ட அப்பாக்களுக்கு தருவதற்கு உகந்த பரிசாகும்.
பாரம்பரியவாதி
உங்கள் அப்பா தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களின் சிக்கல்களிலிருந்து விலகி எளிய முறையில் வாழ்க்கையில் விஷயங்களை செய்ய விரும்புபவராக இருந்தால், அவர் நிச்சயமாக தங்க முலாம் பூசிய கைக்கடிகாரத்தை பாராட்டுவார்.
எதற்காக தங்க முலாம் பூசிய கைக்கடிகாரம்?
இன்று அனலாக் கைக்கடிகாரங்கள் பாரம்பரியம் மற்றும் மரியாதையின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. மேலும், அதற்கு பழமையின் புகழ் இருக்கிறது. கடிகாரங்கள் அலமாரிகளின் இன்றியமையாத பகுதியாக இருந்த எளிய காலங்களை அவை நினைவூட்டுகின்றன. தங்க முலாம் பூசிய கைக்கடிகாரங்கள் செயல்பாட்டிற்கும் அத்துடன் பாரம்பரியத்திற்குமான ஆபரணமாக இருக்கிறது-பாரம்பரியத்தை விரும்பும் அப்பாக்கள் இதை வைத்திருக்க விரும்புவார்கள்.
புதுமைவாதி
சில அப்பாக்கள் அலங்காரமான பரிசுகளை விரும்புவதில்லை, அவர்கள் செயல்படும் மற்றும் பாரம்பரியமான பொருட்களில் மகிழ்கின்றனர். அத்தகைய அப்பாக்கள் பெரிய விஷயங்கள் சிறிய பேக்கேஜில் வருவதாக நம்புகிறார்கள். எனவே, தங்க மணிக்கட்டு கஃப்லிங்குகள் போன்ற அணிகலன்கள் அவர்களுக்கான சிறந்த பரிசாகும்.
எதற்காக தங்க கஃப்லிங்குகள்?
கஃப்லிங்குகள் நாகரிகத்தில் திரும்பவும் வந்திருக்கின்றன, அவை நவநாகரிக மற்றும் மிடுக்கான தோற்றத்துடன் தொடர்புடையவை. அவை பல்வேறு வகை புதுமைவாத வடிவமைப்புகளுடன் தொடர்புடையவை. அவற்றில் பாரம்பரிய வட்ட வடிவம் முதல் தடிமனான சதுரம், மற்றும் செவ்வக வடிவங்களில் நுட்பமான வடிவமைப்பைக் கொண்டவை. உங்கள் அப்பாவின் ரசனைக்கேற்ற ஒரு ஜோடி கஃப்லிங்குகளை தேர்ந்தெடுப்பது அவருடைய ஸ்டைலை நீங்கள் எந்த அளவுக்கு மதிக்கிறீர்கள் என்பதை காட்டும்.
அதிகபட்சவாதி
ஒரு அரசனைப் போல ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் சிலர் நம்பிக்கை கொண்டிருப்பார்கள் மேலும் ஆடம்பரங்களில் மூழ்கி சிறந்த பொருட்களால் தங்களுக்கு சிறப்பு சேர்த்து மகிழ்வார்கள். உங்கள் அப்பா அவர்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரே மந்திரம் “பெரியதே, சிறந்தது” என்பதாகும். எனவே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்கள் அப்பாவுக்கான தங்க அலங்கார ஆபரணத்தை வாங்குங்கள், அது அவருடைய வாழ்க்கை ஆளுமையை விட பெரிய அளவில் அவரை பாராட்டும் விதமாக அமைய வேண்டும்.
தங்க நகைகள் எதற்காக?
தங் பிரேஸ்லெட், மோதிரம் மற்றும் அடங்கிய நகை செட் நிச்சயமாக மாயங்களைச் செய்யும். உங்கள் அப்பா கூட்டத்தில் தனித்து தெரிய வேண்டுமென்று விரும்புபவராக இருந்தால், மாற்றாக நீங்கள் அவருக்கு ஒரு தனிப்பயனாக்கபட்ட, பெயர் பொறிக்கப்பட்ட தங்க நகையை பரிசளிக்கலாம். உங்கள் தந்தையின் பெயர் அல்லது முதலெழுத்து பொறிக்கப்பட்ட பதக்கம் அல்லது பிரேஸ்லெட் நிச்சயமாக அவரது இதயத்தை வெல்லும்.
ஃபேஷனை விரும்பும் அப்பாக்கள்
ஒவ்வொரு குடும்பத்திலும் ஃபேஷன் அறிவுரை பெற விரும்பும் ஒரு நபர் இருப்பார். சில குடும்பங்களில் அது அப்பாவாக இருப்பார். உங்க்ள் அப்பா ஃபேஷனை விரும்புபவராக இருந்தால், தங்க முலாம் பூசிய மார்புச்சட்டை ஊசிகள் அல்லது பின்கள் அவருடைய நாளை சிறப்பிக்கும்!
எதற்காக தங்க மார்புச்சட்டை ஊசிகள் அல்லது பின்கள்?
அவை வெள்ளைத் தங்கம், ரோஸ் தங்கம், பச்சைத் தங்கம் என பல வகைகளில் வருகின்றன. தங்க மார்புச்சட்டை ஊசிகள் அல்லது லேபெல் பின்களை ப்ளேஜர்கள், குர்த்தாக்கள், சட்டைகள் மற்றும் கோட்டுகளுடன் அணியும்போது தனித்தமையான ஸ்டைல் கொண்டவை. நவீன ரகங்கள் முதல் பழமையான வடிவங்கள் வரை பல்வேறு தேர்வுகளில் கிடைக்கின்றன. எனவே, நுட்பமமாக வடிவமைக்கப்பட்ட தங்க பின்களை உங்கள் அப்பாவுடைய ஸ்டைக்கு ஏற்ப பரிசளிப்பது அதிக பாராட்டுக்களை உங்களுக்குப் பெற்றுத் தரும்.
தங்கத்தின் காலங்களைக் கடந்த தன்மையானது அவருடன் நீங்கள் பகிர்ந்துக் கொள்ளும் ஆழமான அன்பின் உருவகமாகும். எனவே, உங்கள் அப்பாவின் ஆளுமைக்கேற்ற பொருத்தமான தங்கப் பரிசை கண்டறிந்து அவருடைய நாளை சிறப்பானதாக்குங்கள்!