Published: 20 பிப் 2018
தங்கம் – எல்லோருக்கும் நல்ல நண்பன்
சரக்குகள் மற்றும் சேவை வரியை (GST) நடைமுறையப்படுத்தியதிலிருந்து, ஆடம்பரப் பொருள் என்பதால் தங்கத்திற்கு 18% GST வரிவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலங்களும், தொழில் அமைப்புகளும் அப்படி ஒரு வரிவிகிதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இறுதியாக அது 3% ஆக குறைக்கப்பட்டது. விட்டுக்கொடுத்ததற்காக அரசு மீது குற்றஞ்சாட்டுவீர்களா? எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கம் செல்வமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
தங்கத்தின் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகள் ஏன் கோரின என்பதற்கு, இந்தியா போன்ற ஒரு நாட்டில், தங்கம் வாங்குவது என்பது உயர் வருவாய் பிரிவினருக்கானது மட்டுமல்ல என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் அதிகமாக வாங்குபவர்களாக இருந்தாலும் கூட, உலகெங்கிலும் தங்கம் வைத்திருப்பது என்பது ஒரு பொதுவான நிகழ்வே ஆகும்.
ICE 360° நடத்திய ஒரு ஆய்வில், இந்தியாவில் இரண்டில் ஒரு குடும்பத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் தங்கம் வாங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, நாட்டிலுள்ள 87% குடும்பங்கள் சிறிதளவாவது தங்கம் வைத்திருக்கிறார்கள். உண்மையில், இந்தியக் குடும்பங்களில் 800 பில்லியன் $ மதிப்புள்ள 24000 டன் தங்கம் வைத்துள்ளனர் என்று உலகத் தங்கக் கவுன்சில் தகவல் கூறுகிறது.
தங்கம் வாங்கும் பெரும்பாலானவர்கள் பல்வேறு பொருளாதார நிலைகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, ஏழைகளுடன் ஒப்பிடுகையில் பணக்காரர்கள் தங்கத்திற்காக அதிகம் செலவிடுகிறார்கள். குறைந்த வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவுகள் இரண்டுமே, நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பை அளிக்கும் காப்பீடாக தங்கத்தைப் பார்க்கிறார்கள். உண்மையில், ஆய்வின்படி குறைந்த வருவாய்ப் பிரிவினர் பெரும்பாலும் மருத்துவ அவசரத் தேவைகள் அல்லது பணச் சிக்கல் எழும்போது மட்டும் தங்கநகைக் கடன் பெறுகிறார்கள், இதன் மூலம் தங்கத்தை வெறும் ஆடம்பரப் பொருளாக மட்டுமே பார்ப்பதில்லை, காப்பீடு அல்லது நிதி சேமிப்புகள் போன்ற அடிப்படையான நிதி சார்ந்த பொருளாகவே பார்க்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது. சமூகப் பாதுகாப்பு குறைவாக உள்ள, காப்பீடு அனைவரையும் சென்றடையாத ஒரு நாட்டில், தங்கம் பணக்காரர்களுக்கான ஆடம்பரம் மட்டுமல்ல ஏழைகளின் பாதுகாவலனும் கூட என்பதை இவை அனைத்தும் நிரூபிக்கின்றன.